உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • அபியா யூதாவின் ராஜாவாகிறார் (1-22)

        • யெரொபெயாமை அபியா தோற்கடிக்கிறார் (3-20)

2 நாளாகமம் 13:1

இணைவசனங்கள்

  • +1ரா 15:1, 2

2 நாளாகமம் 13:2

இணைவசனங்கள்

  • +2நா 11:20, 21
  • +யோசு 18:28; 1சா 10:26
  • +1ரா 15:6

2 நாளாகமம் 13:3

இணைவசனங்கள்

  • +2நா 11:1

2 நாளாகமம் 13:5

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “உப்பு ஒப்பந்தம்.”

இணைவசனங்கள்

  • +சங் 89:28, 29
  • +ஆதி 49:10; 2சா 7:8; சங் 78:70, 71
  • +2சா 7:12, 13; 1நா 17:11, 14; லூ 1:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/2005, பக். 20

2 நாளாகமம் 13:6

இணைவசனங்கள்

  • +2நா 10:2
  • +1ரா 11:26, 27; 12:20

2 நாளாகமம் 13:8

இணைவசனங்கள்

  • +1ரா 12:26, 28; 2நா 11:15

2 நாளாகமம் 13:9

இணைவசனங்கள்

  • +2நா 11:14
  • +1ரா 12:31, 33; 13:33

2 நாளாகமம் 13:10

இணைவசனங்கள்

  • +2நா 11:16

2 நாளாகமம் 13:11

இணைவசனங்கள்

  • +யாத் 29:39
  • +யாத் 30:1
  • +யாத் 25:30
  • +யாத் 25:31
  • +யாத் 27:20

2 நாளாகமம் 13:12

இணைவசனங்கள்

  • +எண் 10:9

2 நாளாகமம் 13:14

இணைவசனங்கள்

  • +2நா 14:11; 18:31

2 நாளாகமம் 13:18

இணைவசனங்கள்

  • +2ரா 18:1, 5; 1நா 5:20; 2நா 16:8; சங் 22:5; 37:5; நாகூ 1:7

2 நாளாகமம் 13:19

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”

இணைவசனங்கள்

  • +1ரா 12:28, 29
  • +யோவா 11:54

2 நாளாகமம் 13:20

இணைவசனங்கள்

  • +1சா 25:38; 1ரா 14:20; அப் 12:21-23

2 நாளாகமம் 13:21

இணைவசனங்கள்

  • +உபா 17:17

2 நாளாகமம் 13:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “விளக்கவுரையில்.”

இணைவசனங்கள்

  • +2நா 9:29; 12:15

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 13:11ரா 15:1, 2
2 நா. 13:22நா 11:20, 21
2 நா. 13:2யோசு 18:28; 1சா 10:26
2 நா. 13:21ரா 15:6
2 நா. 13:32நா 11:1
2 நா. 13:5சங் 89:28, 29
2 நா. 13:5ஆதி 49:10; 2சா 7:8; சங் 78:70, 71
2 நா. 13:52சா 7:12, 13; 1நா 17:11, 14; லூ 1:32
2 நா. 13:62நா 10:2
2 நா. 13:61ரா 11:26, 27; 12:20
2 நா. 13:81ரா 12:26, 28; 2நா 11:15
2 நா. 13:92நா 11:14
2 நா. 13:91ரா 12:31, 33; 13:33
2 நா. 13:102நா 11:16
2 நா. 13:11யாத் 29:39
2 நா. 13:11யாத் 30:1
2 நா. 13:11யாத் 25:30
2 நா. 13:11யாத் 25:31
2 நா. 13:11யாத் 27:20
2 நா. 13:12எண் 10:9
2 நா. 13:142நா 14:11; 18:31
2 நா. 13:182ரா 18:1, 5; 1நா 5:20; 2நா 16:8; சங் 22:5; 37:5; நாகூ 1:7
2 நா. 13:191ரா 12:28, 29
2 நா. 13:19யோவா 11:54
2 நா. 13:201சா 25:38; 1ரா 14:20; அப் 12:21-23
2 நா. 13:21உபா 17:17
2 நா. 13:222நா 9:29; 12:15
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 13:1-22

2 நாளாகமம்

13 யெரொபெயாம் ராஜா ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், அபியா யூதாவின் ராஜாவானார்.+ 2 அவர் மூன்று வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்; அவருடைய அம்மா பெயர் மிகாயா,+ அவள் கிபியாவைச்+ சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையே போர் நடந்தது.+

3 போர்ப் பயிற்சி பெற்ற+ 4,00,000 மாவீரர்களுடன் அபியா படையெடுத்துப் போனார். அதேபோல், போர்ப் பயிற்சி பெற்ற 8,00,000 மாவீரர்களுடன் யெரொபெயாம் அவரை எதிர்த்து வந்து அணிவகுத்து நின்றார். 4 அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற செமராயிம் என்ற மலையில் அபியா நின்றுகொண்டு, “யெரொபெயாமே, இஸ்ரவேலர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். 5 இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தாவீதோடு நிரந்தர ஒப்பந்தம்*+ செய்து, இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற அதிகாரத்தை+ அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும்+ கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? 6 ஆனால், நேபாத்தின் மகனும் சாலொமோனின் ஊழியனுமாகிய இந்த யெரொபெயாம்+ தன் எஜமானுக்கு எதிராகக் கலகம் செய்தான்.+ 7 வேலைவெட்டி இல்லாத உதவாக்கரைகள் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். சாலொமோனின் மகன் ரெகொபெயாம் தைரியமோ அனுபவமோ இல்லாத இளைஞனாக இருந்த சமயத்தில், அந்தக் கலகக்காரர்களின் கை ஓங்கியது; ரெகொபெயாமால் அவர்களை அடக்க முடியவில்லை.

8 இப்போது உங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள், யெரொபெயாம் செய்து வைத்த தங்கக் கன்றுக்குட்டிகளைத் தெய்வமாக+ வழிபட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதனால் தாவீதின் வாரிசுகள் கையில் இருக்கிற யெகோவாவின் ஆட்சியையே எதிர்த்து நிற்க முடியுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். 9 யெகோவா நியமித்த ஆரோன் வம்சத்து குருமார்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு,+ மற்ற தேசத்து மக்களைப் போல் நீங்களே குருமார்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்.+ ஒரு இளம் காளையையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தவனையெல்லாம் பொய் தெய்வங்களுக்குப் பூஜை செய்கிற குருமாராக்கிவிட்டீர்கள். 10 ஆனால், எங்களுக்கு யெகோவாதான் கடவுள்,+ அவரைவிட்டு நாங்கள் விலகவில்லை; ஆரோனின் வம்சத்தில் வந்த எங்கள் குருமார்கள் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள், லேவியர்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். 11 தினமும் காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குத் தகன பலிகளைக் கொடுத்து,+ நறுமண தூபம் காட்டுகிறார்கள்;+ சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட மேஜையில் படையல் ரொட்டிகளை வைக்கிறார்கள்;+ தினமும் மாலையில் தங்க விளக்குத்தண்டில்+ இருக்கிற அகல் விளக்குகளை ஏற்றுகிறார்கள்;+ இப்படி, எங்கள் கடவுளான யெகோவா கொடுத்த பொறுப்புகளை நாங்கள் கண்ணும்கருத்துமாகச் செய்துவருகிறோம். ஆனால், நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12 இதோ பாருங்கள், உண்மைக் கடவுள் எங்களுடன் இருக்கிறார், எங்களை வழிநடத்துகிறார்; உங்களுக்கு எதிராக எக்காளங்களை ஊதி, போர் முழக்கம் செய்ய குருமார்கள் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் வீரர்களே, உங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள், அப்படிச் செய்தால் தோற்றுதான் போவீர்கள்”+ என்று சொன்னார்.

13 ஆனால் யெரொபெயாம், யூதா வீரர்களைப் பின்பக்கத்திலிருந்து பதுங்கித் தாக்குவதற்கு ஒரு படையை ஏற்பாடு செய்திருந்தார்; அவரும் அவருடன் இருந்த படைவீரர்களும் முன்பக்கத்திலிருந்து தாக்க வந்தார்கள். 14 யூதா வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் படைகள் சூழ்ந்திருப்பதைக் கண்டார்கள். அதனால், அவர்கள் உதவிக்காக யெகோவாவிடம் கூக்குரலிட்டார்கள்;+ அப்போது, குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். 15 யூதா வீரர்கள் போர் முழக்கம் செய்தார்கள். அப்போது, யெரொபெயாமும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் அபியாவிடமும் யூதா வீரர்களிடமும் தோற்றுப்போகும்படி உண்மைக் கடவுள் செய்தார். 16 இஸ்ரவேல் வீரர்கள் யூதா வீரர்களிடமிருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களை யூதா வீரர்களின் கையில் கடவுள் கொடுத்தார். 17 அபியாவும் அவருடைய வீரர்களும் ஏராளமான இஸ்ரவேல் வீரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருந்தார்கள். போர்ப் பயிற்சி பெற்ற 5,00,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 18 இப்படி, இஸ்ரவேல் வீரர்கள் அன்றைக்குத் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால், யூதா வீரர்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை நம்பியிருந்ததால் ஜெயித்தார்கள்.+ 19 யெரொபெயாமை அபியா விடாமல் துரத்திக்கொண்டே போய், அவரிடமிருந்து நகரங்களைக் கைப்பற்றினார்; அதாவது, பெத்தேலையும்+ அதன் சிற்றூர்களையும்,* எஷானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்பெரேனையும்+ அதன் சிற்றூர்களையும் கைப்பற்றினார். 20 அபியாவின் ஆட்சிக்காலம் முழுவதிலும் யெரொபெயாமால் மறுபடியும் தலைதூக்கவே முடியவில்லை. பின்பு, யெரொபெயாமை யெகோவா தண்டித்தார், அதனால் அவர் செத்துப்போனார்.+

21 அபியாவின் ஆட்சி நாளுக்கு நாள் வலிமையடைந்தது. காலப்போக்கில், அவர் 14 பெண்களைக் கல்யாணம் செய்தார்,+ அவருக்கு 22 மகன்களும் 16 மகள்களும் பிறந்தார்கள். 22 அபியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும், அவர் செய்த செயல்களும் அவர் சொன்ன வார்த்தைகளும் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில்*+ எழுதப்பட்டிருக்கின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்