உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ரெகொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலின் கலகம் (1-19)

2 நாளாகமம் 10:1

இணைவசனங்கள்

  • +யோசு 20:7; 24:1; நியா 9:1
  • +1ரா 12:1-4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2018, பக். 13

2 நாளாகமம் 10:2

இணைவசனங்கள்

  • +1ரா 11:28
  • +1ரா 11:40

2 நாளாகமம் 10:4

இணைவசனங்கள்

  • +1சா 8:11-18; 1ரா 4:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2018, பக். 13

2 நாளாகமம் 10:5

இணைவசனங்கள்

  • +1ரா 12:5-7

2 நாளாகமம் 10:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களிடம்.”

2 நாளாகமம் 10:8

இணைவசனங்கள்

  • +1ரா 12:8-11

2 நாளாகமம் 10:10

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “என் அப்பாவின் இடுப்பைவிட என்னுடைய சுண்டுவிரல் பருமனாக இருக்கும்.”

2 நாளாகமம் 10:12

இணைவசனங்கள்

  • +1ரா 12:12-15

2 நாளாகமம் 10:15

இணைவசனங்கள்

  • +உபா 2:30; 2சா 17:14
  • +1ரா 11:29-31

2 நாளாகமம் 10:16

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கூடாரங்களுக்கு.”

இணைவசனங்கள்

  • +1ரா 11:32
  • +1ரா 12:16, 17

2 நாளாகமம் 10:17

இணைவசனங்கள்

  • +1ரா 11:35, 36

2 நாளாகமம் 10:18

அடிக்குறிப்புகள்

  • *

    1ரா 4:6-ல் அதோனீராம், 1ரா 12:18-ல் அதோராம்.

இணைவசனங்கள்

  • +2சா 20:24; 1ரா 4:6
  • +1ரா 12:18, 19

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 10:1யோசு 20:7; 24:1; நியா 9:1
2 நா. 10:11ரா 12:1-4
2 நா. 10:21ரா 11:28
2 நா. 10:21ரா 11:40
2 நா. 10:41சா 8:11-18; 1ரா 4:7
2 நா. 10:51ரா 12:5-7
2 நா. 10:81ரா 12:8-11
2 நா. 10:121ரா 12:12-15
2 நா. 10:15உபா 2:30; 2சா 17:14
2 நா. 10:151ரா 11:29-31
2 நா. 10:161ரா 11:32
2 நா. 10:161ரா 12:16, 17
2 நா. 10:171ரா 11:35, 36
2 நா. 10:182சா 20:24; 1ரா 4:6
2 நா. 10:181ரா 12:18, 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 10:1-19

2 நாளாகமம்

10 ரெகொபெயாம் சீகேமுக்குப்+ போனார்; ஏனென்றால், அவரை ராஜாவாக்க இஸ்ரவேலர்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தார்கள்.+ 2 இந்த விஷயத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாம்+ கேள்விப்பட்டவுடன், எகிப்திலிருந்து திரும்பி வந்தார் (அந்தச் சமயத்தில் அவர் எகிப்தில் இருந்தார்; முன்பு சாலொமோன் ராஜாவுக்குப் பயந்து எகிப்துக்கு ஓடிப்போயிருந்தார்.)+ 3 இஸ்ரவேலர்கள் ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார்கள். பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் ரெகொபெயாமிடம் வந்து, 4 “உங்களுடைய அப்பா எங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார்.+ நீங்கள் அந்தச் சுமையைக் குறைத்து எங்களுடைய வேலையைச் சுலபமாக்கினால், நாங்கள் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்று சொன்னார்கள்.

5 அதற்கு அவர், “சரி, நீங்கள் போய்விட்டு மூன்றாம் நாள் என்னை வந்து பாருங்கள்” என்று சொன்னார்; அவர்களும் அங்கிருந்து போனார்கள்.+ 6 அப்போது ரெகொபெயாம் ராஜா பெரியோர்களிடம்,* அதாவது தன்னுடைய அப்பாவான சாலொமோனின் காலத்தில் ஆலோசகர்களாக இருந்தவர்களிடம், “இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 7 அதற்கு அவர்கள், “இந்த மக்களுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளுங்கள்; அவர்களுக்குத் தயவு காட்டி, நல்ல பதில் சொல்லுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் என்றைக்கும் உங்களுக்குச் சேவை செய்வார்கள்” என்று சொன்னார்கள்.

8 ஆனால், பெரியோர்கள் கொடுத்த ஆலோசனையை அவர் ஒதுக்கித்தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து இப்போது தனக்குச் சேவை செய்கிற இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டார்.+ 9 அவர்களிடம், “‘எங்கள்மீது உங்களுடைய அப்பா சுமத்திய பாரமான சுமையைக் குறைக்க வேண்டும்’ என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம், உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார். 10 அதற்கு அந்த இளைஞர்கள், “‘உங்களுடைய அப்பா சுமத்திய பாரமான சுமையைக் குறைக்க வேண்டும்’ என்று கேட்டவர்களிடம், ‘என் அப்பாவைவிட நான் ரொம்பக் கண்டிப்பானவன்.* 11 என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன். என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நானோ முள்சாட்டையால் அடிப்பேன்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

12 “மூன்றாம் நாள்+ என்னை வந்து பாருங்கள்” என்று ரெகொபெயாம் ராஜா சொன்னபடியே யெரொபெயாமும் மற்ற எல்லாரும் அவரிடம் வந்தார்கள். 13 ஆனால், ராஜா அவர்களிடம் கடுமையாகப் பேசினார். இப்படி, பெரியோர்கள் சொன்ன ஆலோசனையை ரெகொபெயாம் ராஜா ஒதுக்கித்தள்ளிவிட்டார். 14 இளைஞர்கள் கொடுத்த ஆலோசனைப்படியே, “என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன்; என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்” என்று அந்த மக்களிடம் சொன்னார். 15 மக்களின் வேண்டுகோளை ராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. இதெல்லாம் உண்மைக் கடவுளின் செயலாக இருந்தது.+ சீலோனியரான அகியா+ மூலம் நேபாத்தின் மகனான யெரொபெயாமிடம் தான் சொன்னதை நிறைவேற்றுவதற்காக யெகோவா இப்படிச் செய்தார்.

16 தங்களுடைய வேண்டுகோளை ராஜா ஏற்றுக்கொள்ளாததால் இஸ்ரவேலர்கள் எல்லாரும் ராஜாவைப் பார்த்து, “எங்களுக்கும் தாவீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. தன்னுடைய சொத்தை ஈசாயின் மகனே வைத்துக்கொள்ளட்டும். இஸ்ரவேலர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் போய் உங்கள் தெய்வங்களை வழிபடுங்கள். தாவீதே,+ உன்னுடைய வம்சத்தை மட்டும் பார்த்துக்கொள்” என்று சொன்னார்கள். இப்படிச் சொல்லிவிட்டு இஸ்ரவேலர்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளுக்கு* திரும்பிப் போனார்கள்.+

17 ஆனால், யூதாவின் நகரங்களில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை ரெகொபெயாம் ஆட்சி செய்துவந்தார்.+

18 பின்பு, அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதிகாரியான ஹதோராமை*+ இஸ்ரவேலர்களிடம் ரெகொபெயாம் ராஜா அனுப்பினார். அவர்கள் ஹதோராமைக் கல்லெறிந்து கொன்றார்கள். ஆனால், ரெகொபெயாம் ராஜா எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடைய ரதத்தில் ஏறி எருசலேமுக்குப் போய்விட்டார்.+ 19 இன்றுவரை தாவீதின் வம்சத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்