உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 15
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • கடவுளின் பெட்டியை லேவியர்கள் எருசலேமுக்குக் கொண்டுவருகிறார்கள் (1-29)

        • தாவீதைப் பற்றி மீகாள் கேவலமாக நினைக்கிறாள் (29)

1 நாளாகமம் 15:1

இணைவசனங்கள்

  • +2சா 7:1, 2; 1நா 16:1; சங் 132:1-5

1 நாளாகமம் 15:2

இணைவசனங்கள்

  • +எண் 4:15; உபா 10:8

1 நாளாகமம் 15:3

இணைவசனங்கள்

  • +2சா 6:12; 1நா 13:5

1 நாளாகமம் 15:4

இணைவசனங்கள்

  • +எண் 3:2, 3
  • +1நா 6:1

1 நாளாகமம் 15:6

இணைவசனங்கள்

  • +1நா 6:29, 30

1 நாளாகமம் 15:7

இணைவசனங்கள்

  • +1நா 23:6-8

1 நாளாகமம் 15:8

இணைவசனங்கள்

  • +யாத் 6:18, 22

1 நாளாகமம் 15:10

இணைவசனங்கள்

  • +யாத் 6:16, 18

1 நாளாகமம் 15:11

இணைவசனங்கள்

  • +2சா 8:17
  • +1சா 22:20; 1ரா 2:27, 35

1 நாளாகமம் 15:13

இணைவசனங்கள்

  • +2சா 6:3
  • +2சா 6:8
  • +எண் 4:15; உபா 31:9

1 நாளாகமம் 15:15

இணைவசனங்கள்

  • +யாத் 25:14; எண் 4:6; 2நா 5:9

1 நாளாகமம் 15:16

இணைவசனங்கள்

  • +சங் 33:2
  • +1நா 16:5; 2நா 5:12, 13

1 நாளாகமம் 15:17

இணைவசனங்கள்

  • +1நா 6:31, 33; 25:5
  • +1நா 6:31, 39; 25:1, 2; சங் 83:மேல்குறிப்பு
  • +1நா 6:31, 44

1 நாளாகமம் 15:18

இணைவசனங்கள்

  • +1நா 25:9

1 நாளாகமம் 15:19

இணைவசனங்கள்

  • +1நா 6:31-33
  • +1நா 25:1
  • +1நா 13:8

1 நாளாகமம் 15:20

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +சங் 46:மேல்குறிப்பு

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2465

1 நாளாகமம் 15:21

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +1நா 16:4, 5
  • +சங் 6:மேல்குறிப்பு

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2473

1 நாளாகமம் 15:22

இணைவசனங்கள்

  • +1நா 15:27

1 நாளாகமம் 15:24

இணைவசனங்கள்

  • +1நா 16:4, 6

1 நாளாகமம் 15:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களும்.”

இணைவசனங்கள்

  • +1நா 13:14
  • +2சா 6:4, 5, 12

1 நாளாகமம் 15:26

இணைவசனங்கள்

  • +2சா 6:13

1 நாளாகமம் 15:27

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லினன்.”

இணைவசனங்கள்

  • +2சா 6:14, 15

1 நாளாகமம் 15:28

இணைவசனங்கள்

  • +1நா 13:8
  • +1நா 16:4, 6
  • +2சா 6:5

1 நாளாகமம் 15:29

இணைவசனங்கள்

  • +1நா 17:1
  • +1சா 18:27; 2சா 3:13, 14
  • +2சா 6:16

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 15:12சா 7:1, 2; 1நா 16:1; சங் 132:1-5
1 நா. 15:2எண் 4:15; உபா 10:8
1 நா. 15:32சா 6:12; 1நா 13:5
1 நா. 15:4எண் 3:2, 3
1 நா. 15:41நா 6:1
1 நா. 15:61நா 6:29, 30
1 நா. 15:71நா 23:6-8
1 நா. 15:8யாத் 6:18, 22
1 நா. 15:10யாத் 6:16, 18
1 நா. 15:112சா 8:17
1 நா. 15:111சா 22:20; 1ரா 2:27, 35
1 நா. 15:132சா 6:3
1 நா. 15:132சா 6:8
1 நா. 15:13எண் 4:15; உபா 31:9
1 நா. 15:15யாத் 25:14; எண் 4:6; 2நா 5:9
1 நா. 15:16சங் 33:2
1 நா. 15:161நா 16:5; 2நா 5:12, 13
1 நா. 15:171நா 6:31, 33; 25:5
1 நா. 15:171நா 6:31, 39; 25:1, 2; சங் 83:மேல்குறிப்பு
1 நா. 15:171நா 6:31, 44
1 நா. 15:181நா 25:9
1 நா. 15:191நா 6:31-33
1 நா. 15:191நா 25:1
1 நா. 15:191நா 13:8
1 நா. 15:20சங் 46:மேல்குறிப்பு
1 நா. 15:211நா 16:4, 5
1 நா. 15:21சங் 6:மேல்குறிப்பு
1 நா. 15:221நா 15:27
1 நா. 15:241நா 16:4, 6
1 நா. 15:251நா 13:14
1 நா. 15:252சா 6:4, 5, 12
1 நா. 15:262சா 6:13
1 நா. 15:272சா 6:14, 15
1 நா. 15:281நா 13:8
1 நா. 15:281நா 16:4, 6
1 நா. 15:282சா 6:5
1 நா. 15:291நா 17:1
1 நா. 15:291சா 18:27; 2சா 3:13, 14
1 நா. 15:292சா 6:16
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 15:1-29

1 நாளாகமம்

15 பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’ தனக்காக நிறைய அரண்மனைகளை தாவீது கட்டினார்; உண்மைக் கடவுளின் பெட்டியை வைக்க இடம் ஒதுக்கி அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டார்.+ 2 அப்போது அவர், “லேவியர்களைத் தவிர வேறு யாரும் உண்மைக் கடவுளின் பெட்டியைச் சுமக்கக் கூடாது. யெகோவாவின் பெட்டியைச் சுமப்பதற்கும் அவருக்கு என்றென்றும் சேவை செய்வதற்கும் அவர்களைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். 3 பின்பு, யெகோவாவின் பெட்டிக்காகத் தான் தயார் செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமில் ஒன்றுகூட்டினார்.+

4 ஆரோனின் வம்சத்தில் வந்தவர்களையும்+ மற்ற லேவியர்களையும்+ தாவீது ஒன்றுகூட்டினார். 5 கோகாத்தியர்களில் தலைவர் ஊரியேலும் அவருடைய சகோதரர்கள் 120 பேரும் வந்தார்கள்; 6 மெராரியர்களில் தலைவர் அசாயாவும்+ அவருடைய சகோதரர்கள் 220 பேரும் வந்தார்கள்; 7 கெர்சோமியர்களில் தலைவர் யோவேலும்+ அவருடைய சகோதரர்கள் 130 பேரும் வந்தார்கள்; 8 எலிசாப்பான்+ வம்சத்தில் தலைவர் செமாயாவும் அவருடைய சகோதரர்கள் 200 பேரும் வந்தார்கள்; 9 எப்ரோன் வம்சத்தில் தலைவர் ஏலியேலும் அவருடைய சகோதரர்கள் 80 பேரும் வந்தார்கள்; 10 ஊசியேல்+ வம்சத்தில் தலைவர் அம்மினதாபும் அவருடைய சகோதரர்கள் 112 பேரும் வந்தார்கள்; 11 பின்பு, குருமார்களான சாதோக்கையும்+ அபியத்தாரையும்+ லேவியர்களான ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் ஆகியோரையும் தாவீது வரவழைத்தார். 12 அவர்களிடம், “நீங்கள்தான் லேவி வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள்; அதனால், நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, நான் தயார்செய்த இடத்துக்கு இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு வாருங்கள். 13 முதல் தடவை, அந்தப் பெட்டியை நீங்கள் சுமந்துகொண்டு வராததால்+ நம் கடவுளாகிய யெகோவா பயங்கர கோபமடைந்து நம்மைத் தாக்கினார்.+ ஏனென்றால், நாம் சரியான முறையைத்+ தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இருந்துவிட்டோம்” என்று சொன்னார். 14 அதனால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துவருவதற்காக, குருமார்களும் லேவியர்களும் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டார்கள்.

15 பின்பு, உண்மைக் கடவுளின் பெட்டியில் செருகப்பட்டிருந்த கம்புகளை+ லேவியர்கள் தங்களுடைய தோள்களில் வைத்து அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படியே செய்தார்கள். 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.

17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள். 18 சகரியா, பென், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, வாயிற்காவலர்களான ஓபேத்-ஏதோம், எயியேல் ஆகிய தங்கள் சகோதரர்களை இரண்டாவது பிரிவாக+ நியமித்தார்கள். 19 பாடகர்களான ஏமான்,+ ஆசாப்,+ ஏத்தான் ஆகியோரை செம்பு ஜால்ராக்களைத்+ தட்டி ஓசையெழுப்ப நியமித்தார்கள். 20 சகரியா, ஆஸியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா ஆகியோர் நரம்பிசைக் கருவிகளை அல்மோத்*+ இசையில் வாசித்தார்கள். 21 மத்தித்தியா,+ எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் செமினீத்* இசையில்+ யாழ் இசைத்தார்கள், இவர்கள் இசைக் குழுவின் தலைவர்களாக இருந்தார்கள். 22 பெட்டியைச் சுமக்கும் பொறுப்பை லேவியர்களின் தலைவரான கெனானியா+ மேற்பார்வை செய்தார்; ஏனென்றால், அந்த வேலையில் அவர் திறமைசாலியாக இருந்தார். 23 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டியைக் காவல்காத்தார்கள். 24 குருமார்களான ஷெபனியா, யொஷபாத், நெதனெயேல், அமாசாய், சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் உண்மைக் கடவுளின் பெட்டிக்கு முன்னால் எக்காளங்களைச் சத்தமாக ஊதினார்கள்;+ ஓபேத்-ஏதோமும் எகியாவும்கூட பெட்டியைக் காவல்காத்தார்கள்.

25 ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களும் சந்தோஷமாகப் போனார்கள்.+ 26 ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு உண்மைக் கடவுளான யெகோவா உதவி செய்ததால் ஏழு இளம் காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டார்கள்.+ 27 தாவீதும், பெட்டியைச் சுமந்த எல்லா லேவியர்களும், பாடகர்களும், பெட்டியைச் சுமக்கிற பாடகர்களுக்குத் தலைவரான கெனானியாவும் உயர்தர துணியில் நெய்யப்பட்ட கையில்லாத அங்கியைப் போட்டிருந்தார்கள்; தாவீது நாரிழை* ஏபோத்தையும் போட்டிருந்தார்.+ 28 இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டும்,+ ஊதுகொம்பை ஊதிக்கொண்டும், எக்காளங்களை முழங்கிக்கொண்டும்,+ ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், நரம்பிசைக் கருவிகள், யாழ்கள் ஆகியவற்றைச் சத்தமாக இசைத்துக்கொண்டும்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.

29 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை ‘தாவீதின் நகரத்துக்கு’+ அவர்கள் கொண்டுவந்தபோது சவுலின் மகளான மீகாள்+ ஜன்னல் வழியாகப் பார்த்தாள்; தாவீது ராஜா துள்ளிக் குதித்து நடனமாடுவதையும் கொண்டாடுவதையும் பார்த்து மனதுக்குள் அவரைக் கேவலமாக நினைத்தாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்