உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • சவுலும் அவருடைய மகன்களும் செத்துப்போகிறார்கள் (1-14)

1 நாளாகமம் 10:1

இணைவசனங்கள்

  • +1சா 31:1-5; 2சா 1:21, 25

1 நாளாகமம் 10:2

இணைவசனங்கள்

  • +1நா 8:33

1 நாளாகமம் 10:3

இணைவசனங்கள்

  • +1சா 26:9, 10

1 நாளாகமம் 10:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கேவலப்படுத்தி.”

இணைவசனங்கள்

  • +நியா 16:21, 23
  • +1நா 10:13

1 நாளாகமம் 10:6

இணைவசனங்கள்

  • +1சா 31:6, 7

1 நாளாகமம் 10:8

இணைவசனங்கள்

  • +1சா 28:4; 31:8-10

1 நாளாகமம் 10:9

இணைவசனங்கள்

  • +நியா 16:23, 24

1 நாளாகமம் 10:10

இணைவசனங்கள்

  • +1சா 5:2

1 நாளாகமம் 10:11

இணைவசனங்கள்

  • +1சா 11:1
  • +1சா 31:11-13

1 நாளாகமம் 10:12

இணைவசனங்கள்

  • +2சா 2:5; 21:12

1 நாளாகமம் 10:13

இணைவசனங்கள்

  • +1சா 13:13; 15:22, 23

1 நாளாகமம் 10:14

இணைவசனங்கள்

  • +லேவி 20:6; 1சா 28:7
  • +ரூ 4:17; 1சா 13:14; 15:27, 28; 2சா 5:3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 10:11சா 31:1-5; 2சா 1:21, 25
1 நா. 10:21நா 8:33
1 நா. 10:31சா 26:9, 10
1 நா. 10:4நியா 16:21, 23
1 நா. 10:41நா 10:13
1 நா. 10:61சா 31:6, 7
1 நா. 10:81சா 28:4; 31:8-10
1 நா. 10:9நியா 16:23, 24
1 நா. 10:101சா 5:2
1 நா. 10:111சா 11:1
1 நா. 10:111சா 31:11-13
1 நா. 10:122சா 2:5; 21:12
1 நா. 10:131சா 13:13; 15:22, 23
1 நா. 10:14லேவி 20:6; 1சா 28:7
1 நா. 10:14ரூ 4:17; 1சா 13:14; 15:27, 28; 2சா 5:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 10:1-14

1 நாளாகமம்

10 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள்; பலர் கில்போவா மலையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+ 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள்; பின்பு, அவருடைய மகன்களான யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும்+ கொன்றுபோட்டார்கள். 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள்; கடைசியில் வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் காயமடைந்தார்.+ 4 அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+ 5 சவுல் இறந்துவிட்டதைப் பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான். 6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவரோடு இருந்த அவருடைய வீட்டார் எல்லாரும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+ 7 இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள், பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.

8 கொல்லப்பட்டவர்களின் பொருள்களை எடுத்துக்கொள்ள அடுத்த நாள் பெலிஸ்தியர்கள் வந்தபோது, சவுலும் அவருடைய மகன்களும் கில்போவா மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 9 அப்போது சவுலிடமிருந்த எல்லாவற்றையும் உருவிக்கொண்டார்கள், அவருடைய தலையை வெட்டினார்கள், அவருடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; பின்பு, தங்கள் கோயில்களிலும்+ மக்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை அறிவிப்பதற்காக பெலிஸ்தியர்களின் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். 10 அதன்பின், அவருடைய ஆயுதங்களைத் தங்களுடைய கோயிலில் வைத்தார்கள்; அவருடைய தலையை தாகோனின் கோயிலில்+ தொங்கவிட்டார்கள்.

11 பெலிஸ்தியர்கள் சவுலுக்கு இப்படிச் செய்ததை கீலேயாத்திலுள்ள யாபேஸ்+ ஊர் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள்.+ 12 உடனே அங்கிருந்த வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போய், சவுலின் உடலையும் அவருடைய மகன்களின் உடல்களையும் எடுத்துக்கொண்டு யாபேசுக்கு வந்தார்கள்; பின்பு, அவர்களுடைய எலும்புகளை அங்கிருந்த பெரிய மரத்தடியில் புதைத்துவிட்டு,+ ஏழு நாட்களுக்கு விரதமிருந்தார்கள்.

13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+ 14 யெகோவாவிடம் விசாரிப்பதற்குப் பதிலாக, ஆவிகளோடு பேசுகிறவளிடம் விசாரித்தார்;+ அதனால், கடவுள் அவரைச் சாகடித்து அவருடைய அரச பதவியை ஈசாயின் மகன் தாவீதிடம் கொடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்