உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்

      • மனாசே யூதாவின் ராஜாவாகிறார்; அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார் (1-18)

        • எருசலேம் அழிக்கப்படுகிறது (12-15)

      • ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (19-26)

2 ராஜாக்கள் 21:1

இணைவசனங்கள்

  • +1நா 3:13; மத் 1:10
  • +2நா 33:1

2 ராஜாக்கள் 21:2

இணைவசனங்கள்

  • +உபா 12:30, 31; 2நா 33:2-6; 36:14; எசே 16:51

2 ராஜாக்கள் 21:3

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2ரா 18:1, 4
  • +1ரா 16:30, 32
  • +2ரா 23:4
  • +உபா 4:19

2 ராஜாக்கள் 21:4

இணைவசனங்கள்

  • +உபா 12:5; 2சா 7:12, 13; 1ரா 8:29; 9:3
  • +எரே 32:34

2 ராஜாக்கள் 21:5

இணைவசனங்கள்

  • +1ரா 6:36; 7:12
  • +எசே 8:16

2 ராஜாக்கள் 21:6

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்.”

இணைவசனங்கள்

  • +லேவி 19:26
  • +லேவி 20:27; உபா 18:10, 11

2 ராஜாக்கள் 21:7

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2ரா 23:6
  • +2நா 33:7-9

2 ராஜாக்கள் 21:8

இணைவசனங்கள்

  • +உபா 28:1
  • +1நா 17:9

2 ராஜாக்கள் 21:9

இணைவசனங்கள்

  • +உபா 7:1

2 ராஜாக்கள் 21:10

இணைவசனங்கள்

  • +2நா 33:10; 36:15, 16; எரே 7:25; மத் 23:37

2 ராஜாக்கள் 21:11

அடிக்குறிப்புகள்

  • *

    இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

இணைவசனங்கள்

  • +ஆதி 15:16
  • +லேவி 18:24, 25; 2ரா 23:26; 24:3; எரே 15:4

2 ராஜாக்கள் 21:12

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கேள்விப்படுகிறவர்களின் இரண்டு காதுகளும் கூசும்.”

இணைவசனங்கள்

  • +2ரா 22:16, 17; மீ 3:12
  • +எரே 19:3

2 ராஜாக்கள் 21:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தூக்குக்குண்டை.”

இணைவசனங்கள்

  • +2ரா 17:6; எசே 23:33
  • +ஏசா 28:17; புல 2:8
  • +1ரா 21:21; 2ரா 10:11
  • +எரே 25:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2022, பக். 9-10

    வெளிப்படுத்துதல், பக். 162

2 ராஜாக்கள் 21:14

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “என் சொத்தில்.”

இணைவசனங்கள்

  • +உபா 32:9; 2ரா 17:18
  • +லேவி 26:25; உபா 28:63

2 ராஜாக்கள் 21:15

இணைவசனங்கள்

  • +உபா 9:21; 31:29; நியா 2:11, 13

2 ராஜாக்கள் 21:16

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தினார்.”

இணைவசனங்கள்

  • +2ரா 24:3, 4; எரே 2:34; மத் 23:30; எபி 11:37

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 74

2 ராஜாக்கள் 21:18

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”

இணைவசனங்கள்

  • +2ரா 21:23, 26

2 ராஜாக்கள் 21:19

இணைவசனங்கள்

  • +மத் 1:10
  • +2நா 33:21

2 ராஜாக்கள் 21:20

இணைவசனங்கள்

  • +2நா 33:22, 23

2 ராஜாக்கள் 21:21

இணைவசனங்கள்

  • +2ரா 21:1, 3

2 ராஜாக்கள் 21:22

இணைவசனங்கள்

  • +2ரா 22:16, 17; எரே 2:13

2 ராஜாக்கள் 21:24

இணைவசனங்கள்

  • +2நா 33:25

2 ராஜாக்கள் 21:26

இணைவசனங்கள்

  • +2ரா 21:18
  • +மத் 1:10

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 ரா. 21:11நா 3:13; மத் 1:10
2 ரா. 21:12நா 33:1
2 ரா. 21:2உபா 12:30, 31; 2நா 33:2-6; 36:14; எசே 16:51
2 ரா. 21:32ரா 18:1, 4
2 ரா. 21:31ரா 16:30, 32
2 ரா. 21:32ரா 23:4
2 ரா. 21:3உபா 4:19
2 ரா. 21:4உபா 12:5; 2சா 7:12, 13; 1ரா 8:29; 9:3
2 ரா. 21:4எரே 32:34
2 ரா. 21:51ரா 6:36; 7:12
2 ரா. 21:5எசே 8:16
2 ரா. 21:6லேவி 19:26
2 ரா. 21:6லேவி 20:27; உபா 18:10, 11
2 ரா. 21:72ரா 23:6
2 ரா. 21:72நா 33:7-9
2 ரா. 21:8உபா 28:1
2 ரா. 21:81நா 17:9
2 ரா. 21:9உபா 7:1
2 ரா. 21:102நா 33:10; 36:15, 16; எரே 7:25; மத் 23:37
2 ரா. 21:11ஆதி 15:16
2 ரா. 21:11லேவி 18:24, 25; 2ரா 23:26; 24:3; எரே 15:4
2 ரா. 21:122ரா 22:16, 17; மீ 3:12
2 ரா. 21:12எரே 19:3
2 ரா. 21:132ரா 17:6; எசே 23:33
2 ரா. 21:13ஏசா 28:17; புல 2:8
2 ரா. 21:131ரா 21:21; 2ரா 10:11
2 ரா. 21:13எரே 25:9
2 ரா. 21:14உபா 32:9; 2ரா 17:18
2 ரா. 21:14லேவி 26:25; உபா 28:63
2 ரா. 21:15உபா 9:21; 31:29; நியா 2:11, 13
2 ரா. 21:162ரா 24:3, 4; எரே 2:34; மத் 23:30; எபி 11:37
2 ரா. 21:182ரா 21:23, 26
2 ரா. 21:19மத் 1:10
2 ரா. 21:192நா 33:21
2 ரா. 21:202நா 33:22, 23
2 ரா. 21:212ரா 21:1, 3
2 ரா. 21:222ரா 22:16, 17; எரே 2:13
2 ரா. 21:242நா 33:25
2 ரா. 21:262ரா 21:18
2 ரா. 21:26மத் 1:10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 ராஜாக்கள் 21:1-26

2 ராஜாக்கள்

21 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் எப்சிபாள். 2 யெகோவா வெறுக்கிற காரியங்களை மனாசே செய்தார். இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்;+ 3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா அழித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத்+ திரும்பக் கட்டினார்; இஸ்ரவேலின் ராஜா ஆகாபைப் போலவே+ இவரும் பாகாலுக்குப் பலிபீடங்கள் கட்டி, பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்.+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+ 4 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலேயே, “எருசலேமில் என் பெயரை நிலைநாட்டுவேன்”+ என்று யெகோவா சொல்லியிருந்த ஆலயத்திலேயே, பலிபீடங்களைக் கட்டினார்.+ 5 வானத்துப் படைகளை வணங்குவதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும்+ பலிபீடங்களைக் கட்டினார்.+ 6 சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.* மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார், சகுனங்கள் பார்த்தார்,+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.

7 மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை, அதாவது பூஜைக் கம்பத்தை,* கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் யெகோவா இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும், இந்த ஆலயத்திலும், என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+ 8 இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும், அதாவது என்னுடைய ஊழியன் மோசே கொடுத்த திருச்சட்டம் முழுவதையும், அப்படியே அவர்கள் பின்பற்றி நடந்தால்+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்தைவிட்டு ஒருபோதும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்.”+ 9 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+

10 யெகோவா தன்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ 11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான். 12 அதனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘எருசலேம்மீதும் யூதாமீதும் பயங்கரமான அழிவைக் கொண்டுவரப்போகிறேன்.+ அதைப் பற்றிக் கேள்விப்படுகிறவர்கள் எல்லாரும் அதிர்ச்சியடைவார்கள்.*+ 13 சமாரியாவை அளந்த+ அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்;+ ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை* எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்.+ ஒரு கிண்ணத்தை ஒருவன் சுத்தமாகத் துடைத்துக் கவிழ்த்து வைப்பதுபோல, நான் எருசலேமைத் துடைத்துப்போடுவேன்.+ 14 என் சொந்த மக்களில்* மீதியாக இருப்பவர்களைக் கைவிடுவேன்,+ எதிரிகளின் கையில் கொடுப்பேன்; அந்த எதிரிகள் எல்லாரும் அவர்களைக் கொள்ளையடித்து கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ 15 அவர்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாள்முதல் இன்றுவரை, நான் வெறுக்கிற காரியங்களைச் செய்து என்னைப் புண்படுத்தியதால் இப்படியெல்லாம் செய்வேன்’”+ என்று சொன்னார்.

16 யூதா மக்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கு மனாசே காரணமாக இருந்தார்; அதுமட்டுமல்லாமல், எருசலேமின் ஓர் எல்லைமுதல் மறு எல்லைவரை ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.*+ 17 மனாசேயின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவர் செய்த பாவங்களைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 18 பின்பு, மனாசே இறந்துபோனார்.* அவருடைய அரண்மனையிலிருந்த தோட்டத்தில், அதாவது ஊத்சா தோட்டத்தில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார்.

19 ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் மெசுல்லேமேத். அவள் யோத்பாவைச் சேர்ந்த ஆரூத்சின் மகள். 20 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ 21 தன்னுடைய அப்பா வழியிலேயே நடந்தார், தன்னுடைய அப்பா வழிபட்ட அருவருப்பான சிலைகளுக்கு முன்னால் மண்டிபோட்டு வழிபட்டுவந்தார்.+ 22 தன்னுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை ஒதுக்கித்தள்ளினார். யெகோவாவின் வழியில் ஆமோன் நடக்கவில்லை.+ 23 கடைசியில், அவருடைய ஊழியர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி, அவருடைய அரண்மனையிலேயே அவரைக் கொலை செய்தார்கள். 24 ஆமோன் ராஜாவைக் கொன்ற அந்தச் சதிகாரர்கள் எல்லாரையும் பொதுமக்கள் வெட்டிக் கொன்றார்கள். பின்பு, அவருடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினார்கள்.+ 25 ஆமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26 ஊத்சா தோட்டத்தில் இருந்த அவருடைய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் யோசியா+ ராஜாவானார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்