உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 16
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்

      • ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-6)

      • அசீரியர்களுக்கு ஆகாஸ் லஞ்சம் கொடுக்கிறார் (7-9)

      • பொய் தெய்வத்தின் பலிபீடத்தைப் போலவே ஒரு பலிபீடத்தை ஆகாஸ் கட்டுகிறார் (10-18)

      • ஆகாஸ் இறந்துபோகிறார் (19, 20)

2 ராஜாக்கள் 16:1

இணைவசனங்கள்

  • +ஏசா 1:1; 7:1; ஓசி 1:1; மீ 1:1; மத் 1:9

2 ராஜாக்கள் 16:2

இணைவசனங்கள்

  • +2நா 28:1-4

2 ராஜாக்கள் 16:3

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்.”

இணைவசனங்கள்

  • +1ரா 12:28-30; 16:33
  • +லேவி 20:2, 3; 2நா 33:1, 6; எரே 7:31
  • +உபா 12:29-31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    ஏசாயா I, பக். 8-9

    காவற்கோபுரம்,

    7/15/1997, பக். 14

2 ராஜாக்கள் 16:4

இணைவசனங்கள்

  • +உபா 12:2
  • +எண் 33:52

2 ராஜாக்கள் 16:5

இணைவசனங்கள்

  • +2ரா 15:37; 2நா 28:5, 6

2 ராஜாக்கள் 16:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “யூதா ஆண்களை.”

இணைவசனங்கள்

  • +2ரா 14:21, 22

2 ராஜாக்கள் 16:7

இணைவசனங்கள்

  • +2ரா 15:29

2 ராஜாக்கள் 16:8

இணைவசனங்கள்

  • +1ரா 15:18, 19

2 ராஜாக்கள் 16:9

இணைவசனங்கள்

  • +ஆமோ 1:4, 5
  • +ஏசா 9:11

2 ராஜாக்கள் 16:10

இணைவசனங்கள்

  • +உபா 12:30

2 ராஜாக்கள் 16:11

இணைவசனங்கள்

  • +ஏசா 8:2
  • +எரே 23:11; எசே 22:26

2 ராஜாக்கள் 16:12

இணைவசனங்கள்

  • +2நா 28:22, 23, 25

2 ராஜாக்கள் 16:14

இணைவசனங்கள்

  • +2நா 4:1

2 ராஜாக்கள் 16:15

இணைவசனங்கள்

  • +ஏசா 8:2
  • +யாத் 29:39-41
  • +2நா 28:23

2 ராஜாக்கள் 16:16

இணைவசனங்கள்

  • +2ரா 16:11

2 ராஜாக்கள் 16:17

இணைவசனங்கள்

  • +1ரா 7:27, 28
  • +1ரா 7:38; 2நா 4:6
  • +1ரா 7:23, 25
  • +2நா 28:24; 29:19

2 ராஜாக்கள் 16:19

இணைவசனங்கள்

  • +2நா 28:26, 27

2 ராஜாக்கள் 16:20

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”

  • *

    அர்த்தம், “யெகோவா பலப்படுத்துகிறார்.”

இணைவசனங்கள்

  • +2ரா 18:1; 2நா 29:1; ஏசா 1:1; ஓசி 1:1; மத் 1:9

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 ரா. 16:1ஏசா 1:1; 7:1; ஓசி 1:1; மீ 1:1; மத் 1:9
2 ரா. 16:22நா 28:1-4
2 ரா. 16:31ரா 12:28-30; 16:33
2 ரா. 16:3லேவி 20:2, 3; 2நா 33:1, 6; எரே 7:31
2 ரா. 16:3உபா 12:29-31
2 ரா. 16:4உபா 12:2
2 ரா. 16:4எண் 33:52
2 ரா. 16:52ரா 15:37; 2நா 28:5, 6
2 ரா. 16:62ரா 14:21, 22
2 ரா. 16:72ரா 15:29
2 ரா. 16:81ரா 15:18, 19
2 ரா. 16:9ஆமோ 1:4, 5
2 ரா. 16:9ஏசா 9:11
2 ரா. 16:10உபா 12:30
2 ரா. 16:11ஏசா 8:2
2 ரா. 16:11எரே 23:11; எசே 22:26
2 ரா. 16:122நா 28:22, 23, 25
2 ரா. 16:142நா 4:1
2 ரா. 16:15ஏசா 8:2
2 ரா. 16:15யாத் 29:39-41
2 ரா. 16:152நா 28:23
2 ரா. 16:162ரா 16:11
2 ரா. 16:171ரா 7:27, 28
2 ரா. 16:171ரா 7:38; 2நா 4:6
2 ரா. 16:171ரா 7:23, 25
2 ரா. 16:172நா 28:24; 29:19
2 ரா. 16:192நா 28:26, 27
2 ரா. 16:202ரா 18:1; 2நா 29:1; ஏசா 1:1; ஓசி 1:1; மத் 1:9
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 ராஜாக்கள் 16:1-20

2 ராஜாக்கள்

16 ரெமலியாவின் மகன் பெக்கா ஆட்சி செய்த 17-ஆம் வருஷத்தில், யோதாம் ராஜாவின் மகன் ஆகாஸ்+ யூதாவில் ராஜாவானார். 2 ஆகாஸ் ராஜாவானபோது அவருக்கு 20 வயது; அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்; தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+ 3 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ தன்னுடைய சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+ 4 அதுமட்டுமல்ல, ஆராதனை மேடுகளிலும் குன்றுகளிலும் அடர்த்தியான மரங்கள் ஒவ்வொன்றின் கீழும்+ பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்.+

5 அப்போதுதான், சீரியாவின் ராஜாவான ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆகாஸ் இருந்த அந்த நகரத்தை முற்றுகையிட்டார்கள்,+ ஆனால் அதைக் கைப்பற்ற முடியவில்லை. 6 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான ரேத்சீன் ஏலாத்தைக் கைப்பற்றி+ மறுபடியும் அதை ஏதோமுடன் இணைத்தான், யூதர்களை* அங்கிருந்து துரத்திவிட்டான். பின்பு, ஏதோமியர்கள் ஏலாத்துக்குப் போய் இன்றுவரை அங்குதான் குடியிருக்கிறார்கள். 7 அப்போது, அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரிடம்+ ஆகாஸ் தன்னுடைய தூதுவர்களை அனுப்பி, “நான் உங்கள் ஊழியன், உங்கள் பிள்ளை. சீரியா ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் என்னைத் தாக்குகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். 8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+ 9 அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+

10 அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரைச் சந்திக்க ஆகாஸ் ராஜா தமஸ்குவுக்குப் போனார். அங்கிருந்த பலிபீடத்தைப் பார்த்தபோது, அதன் வரைபடத்தைக் குருவாகிய ஊரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் வடிவமைப்பு, கட்டப்பட்ட விதம் போன்ற விவரங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.+ 11 ஆகாஸ் ராஜா தமஸ்குவிலிருந்து அனுப்பிய எல்லா விவரங்களையும் வைத்து குருவாகிய ஊரியா+ ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ தமஸ்குவிலிருந்து ஆகாஸ் ராஜா திரும்பி வருவதற்குள் அந்தப் பலிபீடத்தைக் கட்டி முடித்துவிட்டார். 12 தமஸ்குவிலிருந்து ராஜா திரும்பி வந்து அந்தப் பலிபீடத்தைப் பார்த்தார், அதன் பக்கத்தில் போய் அதன்மேல் பலிகளைச் செலுத்தினார்.+ 13 அந்தப் பலிபீடத்தில் தன்னுடைய தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் எரித்துவந்தார். அதோடு, திராட்சமது காணிக்கைகளை ஊற்றி, சமாதான பலிகளின் இரத்தத்தை அதன்மேல் தெளித்தார். 14 ஆலயத்துக்கு முன்பக்கத்தில் யெகோவாவின் முன்னிலையில் இருந்த செம்புப் பலிபீடத்தை+ நீக்கிவிட்டார்; அதாவது, தன்னுடைய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் இடையே இருந்த செம்புப் பலிபீடத்தை நீக்கிவிட்டு, அதைத் தன்னுடைய பலிபீடத்துக்கு வடக்குப் பக்கத்தில் வைத்தார். 15 அதோடு, குருவாகிய ஊரியாவிடம்,+ “காலையில் கொடுக்கப்படுகிற தகன பலியையும், மாலையில் கொடுக்கப்படுகிற உணவுக் காணிக்கையையும்,+ ராஜாவின் தகன பலியையும், உணவுக் காணிக்கையையும், மக்கள் கொண்டுவருகிற தகன பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், திராட்சமது காணிக்கைகளையும் பெரிய பலிபீடத்தில் கொடுக்க வேண்டும்.+ தகன பலிகளின் இரத்தம் முழுவதையும் மற்ற பலிகளின் இரத்தம் முழுவதையும் அதன்மீது தெளிக்க வேண்டும். செம்புப் பலிபீடத்தை என்ன செய்வதென்று அப்புறம் யோசித்துச் சொல்கிறேன்” என்று சொன்னார். 16 ஆகாஸ் ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் குருவாகிய ஊரியா செய்தார்.+

17 அதோடு, தள்ளுவண்டியின்+ நான்கு பக்கங்களையும் தனித்தனியாக அறுத்து, அதிலிருந்த தொட்டிகளை ஆகாஸ் ராஜா எடுத்துவிட்டார்.+ காளை உருவங்களின் மீது வைக்கப்பட்டிருந்த ‘செம்புக் கடல்’ தொட்டியை+ வெளியே எடுத்து கல்தளத்தில் வைத்தார்.+ 18 யெகோவாவின் ஆலயத்தில், ஓய்வுநாளுக்காக அமைக்கப்பட்டிருந்த கூரையுடன்கூடிய பகுதியையும் ராஜாவின் நுழைவாசலையும் வேறொரு இடத்துக்கு மாற்றினார். அசீரிய ராஜாவுக்குப் பயந்துதான் இப்படிச் செய்தார்.

19 ஆகாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றி யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 20 ஆகாஸ் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா*+ ராஜாவானார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்