அடிக்குறிப்பு
c எலியாசிபின் பேரனுடைய பெயர் மனாசே என சில யூத சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். அவன் தன் மாமனாராகிய சன்பல்லாத்துடன் சேர்ந்து கெரிசீம் மலையில் ஒரு ஆலயத்தைக் கட்டினான். அது பின்னர் சமாரியருடைய வணக்கத்தின் மையமானது. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அதன் ஆசாரியனாக இருந்தான் எனவும் அவர்கள் சொல்கின்றனர். யோவான் 4:21-ல் இயேசு குறிப்பிட்ட மலை இந்தக் கெரிசீமே.—எருசலேமிலுள்ள இரண்டாம் ஆலயம் (ஆங்கிலம்), 1908, டபிள்யூ. ஷா கால்டிகாட், பக்கங்கள் 252-5; த உவாட்ச்டவர், ஜூலை 15, 1960, பக்கங்கள் 425-6-ஐக் காண்க.