உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 45
  • உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
  • எதிர்காலம் நல்லபடியாக மாறும் என்று நீங்கள் ஏன் நம்பிக்கையாக இருக்கலாம்?
  • இன்று ‘வடதிசை ராஜா’ யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • மதமும் உக்ரைன் போரும்—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • இரண்டாவது வருஷத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறது உக்ரைன் போர்—பைபிள் ஏதாவது நம்பிக்கை தருகிறதா?
    வேறுசில தலைப்புகள்
  • முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 45
உக்ரைன் மற்றும் சுற்றுப்புற நாடுகளின் வரைபடம்.

விழிப்புடன் இருங்கள்!

உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்

பிப்ரவரி 24, 2022 அன்று அதிகாலையில், உக்ரைன்மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. இந்தப் போரைத் தடுத்து நிறுத்த உலகத் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் வீணாகிவிட்டன. இந்தப் போரினால் உலகத்துக்கு என்ன பாதிப்பு வரும்? ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சில நாட்களுக்குமுன் இப்படிச் சொன்னார்: “இந்தப் போரினால் மக்கள் எந்தளவு கஷ்டப்படுவார்கள், எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்றெல்லாம் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. ஐரோப்பிய நாடுகளுடைய பாதுகாப்புக்கும், மற்ற உலக நாடுகளுடைய பாதுகாப்புக்கும் என்ன ஆகும் என்று நினைத்துக்கூடப் பார்க்கக் முடியவில்லை.”

இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • ‘ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடுகிற’ ஒரு காலம் வரும் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத்தேயு 24:7) போர்களைப் பற்றி இயேசு அன்று சொன்னது இன்று எப்படி நிறைவேறுகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, “உலக முடிவு எப்போது? இயேசு என்ன சொன்னார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

  • ‘சிவப்புக் குதிரைமேல்’ உட்கார்ந்திருக்கும் ஒருவன் ‘பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடுவான்’ என்று பைபிள் சொன்னது. (வெளிப்படுத்துதல் 6:4) இவன் போருக்கு அடையாளமாக இருக்கிறான். ஏன் அப்படிச் சொல்லலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, “நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  • ‘வடதிசை ராஜாவும்’ ‘தென்திசை ராஜாவும்’ சண்டை போட்டுக்கொள்வார்கள் என்று தானியேல் புத்தகம் முன்கூட்டியே சொல்லியிருக்கிறது. (தானியேல் 11:25-45) இன்று, ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும்தான் வடதிசை ராஜாவாக இருக்கின்றன. ஏன் அப்படிச் சொல்லலாம் என்று தெரிந்துகொள்வதற்கு, நிறைவேறிய தீர்க்கதரிசனம்—தானியேல் அதிகாரம் 11 என்ற வீடியோவைப் பாருங்கள்.a

  • ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் ஒரு போரை’ பற்றியும் பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) ஆனால் இந்தப் போர், இன்று நாம் பார்க்கிறபடி நாட்டுக்கு நாடு நடக்கும் போர் கிடையாது. இது எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு போர். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு, “அர்மகெதோன் போர் என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

எதிர்காலம் நல்லபடியாக மாறும் என்று நீங்கள் ஏன் நம்பிக்கையாக இருக்கலாம்?

  • கடவுள் ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 46:9) கடவுள் தரப்போகும் ஒரு நல்ல எதிர்காலத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “சந்தோஷப் பாதையில் செல்ல—நம்பிக்கை” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  • கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று ஜெபம் செய்யும்படி இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் சொன்னார். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்தில் இருக்கும் ஓர் அரசாங்கம். அது கடவுளுடைய விருப்பத்தின்படி இந்தப் பூமியை மாற்றும். அப்போது, இந்த உலகத்தில் சமாதானம் பூத்துக்குலுங்கும்! இந்த அரசாங்கம் உங்களுக்கு எப்படியெல்லாம் நல்லது செய்யும் என்று தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.

இன்று உக்ரைனில் 1,29,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். இவர்களும் சரி, மற்ற நாடுகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் சரி, இயேசுவைப் போலவே அரசியலிலும் போரிலும் ஈடுபடுவதில்லை. (யோவான் 18:36) ‘கடவுளுடைய அரசாங்கம்’ போர்களுக்கும் மனிதர்களுடைய மற்ற பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும் என்ற ‘நல்ல செய்தியை’ யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் அறிவிக்கிறார்கள். (மத்தேயு 24:14) பைபிள் சொல்லும் இந்த நம்பிக்கையான செய்தியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

a இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள, “முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்?” என்ற கட்டுரையையும், “இன்று ‘வடதிசை ராஜா’ யார்?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்