பைபிளைப் படித்து அதைப் பற்றி ஆழமாக யோசிக்க நேரம் ஒதுக்குகிறார்
இப்படிப் பேசலாம்
வீடியோக்கள்
கேள்வி: பிள்ளைங்கள நல்லபடியா வளக்குறதுக்கு உதவியா இருக்குற சில வீடியோக்கள மக்களுக்கு காட்டுறோம். உங்களுக்கு ஒரு வீடியோவ காட்டலாமா?
வீடியோ: யெகோவாவின் நண்பனாகு! வீடியோக்களில் ஏதாவது ஒன்றைக் காட்டுங்கள். பிறகு, jw.org வெப்சைட்டைப் பற்றி சொல்லுங்கள். யெகோவாவின் நண்பனாகு! வீடியோக்களை வெப்சைட்டிலிருந்து கண்டுபிடிக்க உதவுங்கள்.
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
கேள்வி: உயிரை மதிக்கிறோங்குறத நாம எப்படி காட்டலாம்?
வசனம்: வெளி 4:11
உண்மை: உயிர் கடவுள் கொடுத்த ஒரு பரிசு. அத நாம உயர்வா மதிக்கணும். உயிர பாதுகாக்க தேவையான எல்லாத்தையும் நாம செய்யணும். அதேசமயத்துல மத்தவங்க உயிரையும் மதிக்கணும். யாரையும் கொலை செய்யக் கூடாது.
குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32)
கேள்வி: இந்த துண்டுப்பிரதியில கொடுத்திருக்குற கேள்வியையும் கீழ கொடுத்திருக்குற மூணு பதிலையும் பாருங்க. நீங்க என்ன பதில் சொல்வீங்க?
வசனம்: லூ 11:28
பிரசுரம்: கடவுள் சொல்லியிருக்குற விஷயங்களின்படி நடந்தா உங்க குடும்பத்துக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்னு இந்த துண்டுப்பிரதியில இருக்கு. அதோட, இந்த விஷயங்கள ஏன் நம்பலாங்குற காரணங்களும் அதுல இருக்கு.
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.