விசேஷ மாநாட்டு தின மறுபார்வை
2005 ஊழிய ஆண்டுக்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியைக் குறித்த கண்ணோட்டத்தைப் பெறவும் அதை மறுபார்வை செய்யவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படும். இதை நடத்த வேண்டிய விதத்தை இந்த உட்சேர்க்கையில் பக்கம் 4-ல் உள்ள “மாநாட்டு நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வதற்கான புதிய ஏற்பாடு” என்ற கட்டுரை விவரிக்கிறது. மறுபார்வையின்போது, எல்லா கேள்விகளையும் கலந்தாலோசிப்பதற்கு ஏற்றவாறு நேரத்தை சரிவர பிரித்துக்கொள்ளுங்கள். அளிக்கப்பட்ட தகவலை நாம் எப்படி பொருத்தலாம் என்பதை இந்த மறுபார்வை வலியுறுத்திக் காட்ட வேண்டும்.
காலை நிகழ்ச்சி
1. யெகோவாவிற்கு செவிகொடுக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவது ஏன்? செவிகொடுப்பது என்றால் என்ன? (“யெகோவாவிற்கு ஏன் செவிகொடுக்க வேண்டும்”)
2. குடும்பங்கள் ஆவிக்குரிய நடவடிக்கைகளை எவ்வாறு நன்கு திட்டமிட்டு தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்? (“கவனச்சிதறலின்றி கடவுளுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும் குடும்பங்கள்”)
3. வட்டாரத்தில் இருப்பவர்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி உள்ளனர்? (“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்கென்று செய்தல்”)
4. எபிரெயர் 3, 4 அதிகாரங்களில் காணப்படும் எச்சரிப்பூட்டும் உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா நம்மிடம் இன்று எப்படி பேசுகிறார்? (“கடவுள் பேசுகையில் செவிகொடுப்பது நம்மை பாதுகாக்கிறது”)
5. முழுக்காட்டுதல் பேச்சிலிருந்து நீங்கள் எப்படி பயனடைந்தீர்கள்? (“ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும்”)
பிற்பகல் நிகழ்ச்சி
6. ஓர் இளைஞராக இயேசுவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம், வட்டாரத்தில் உள்ள இளைஞர்கள் அவருடைய முன்மாதிரியை எவ்வாறு பின்பற்றுகின்றனர்? (“கடவுளுடைய வார்த்தைக்கு கவனமாக செவிசாய்ப்பது நம் இளைஞர்களை எப்படி பலப்படுத்துகிறது”)
7. யெகோவாவின் வழிகளில் குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் பெற்றோர் எப்படியெல்லாம் பயிற்சியளிக்கத் தொடங்கலாம்? (“கடவுள் சொல்வதை கவனமாக கேட்டு கற்றுக்கொள்ளும் சிறுபிள்ளைகள்”)
8. யெகோவா, அவருடைய குமாரன், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பினர் ஆகியோருக்கு நாம் செவிகொடுக்க வேண்டிய சில குறிப்பிட்ட அம்சங்கள் யாவை? (மத். 24:45, NW) நாம் அவ்வாறு செய்வது ஏன் அவசியம்? (“தெய்வீக அறிவுரைக்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்”)