“நான் என்ன செய்யவேண்டும்?”
1 முதிர்ச்சியை நோக்கி வளரும் ஓர் இளைஞராக பின்வரும் கேள்வியை நீங்கள் கேட்கலாம்: ‘என் வாழ்க்கையை எப்படி உபயோகிப்பது?’ கிறிஸ்தவ இளைஞர் ஊழியத்தில் யெகோவாவுக்காக செய்யும் தங்கள் சேவையை அதிகரிக்கவே விரும்புகின்றனர். ஆனால், உங்களுடைய பொருளாதார தேவைகளை கவனித்துக்கொள்வது உட்பட வயதுவந்தவர்களின் உத்தரவாதங்களை நிறைவேற்றும் அதேசமயத்தில் ஊழியத்திலும்கூட நீங்கள் எவ்வாறு அதிகம் செய்யமுடியும்? இதற்கான பதிலைக் கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கலாம்.
2 இவ்வுலகத்தின் பொருளாதார சூழ்நிலைகளையும் எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் கவனிக்கும் சில இளைஞர் கவலைப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறு யோசிக்கின்றனர்: ‘நான் இன்னும் அதிகமான உலக கல்வியைப் பெறவேண்டுமா? அல்லது இப்போதே முழுநேர ஊழியத்தில் குதித்துவிட வேண்டியதுதானா?’ சரியான தீர்மானத்தை செய்ய ஒருவர், ‘என் வாழ்க்கையில் எது எனக்கு அதிக முக்கியம்?’ என்ற கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க வேண்டும். அவர் தன்னுடைய உள்நோக்கங்களை ஆராய வேண்டும்.
3 உங்கள் இளமைப் பருவத்தில் எதை உங்கள் வாழ்க்கையின் முக்கிய இலக்காக கருதி பின்தொடர்ந்தீர்கள்? பொருளாதார செழுமையை பெறவே நீங்கள் முக்கியமாய் உழைக்கிறீர்களா அல்லது ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க உங்கள் வாழ்க்கையை உபயோகிக்க வேண்டும் என்று உண்மையில் விரும்புகிறீர்களா? பல்கலைக்கழக பட்டம் இருந்தால் வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. அதற்கு மாறாக அநேகர் பிரயோஜனமான வியாபார திறமைகளை வளர்த்துக் கொள்ளுகின்றனர், அதற்கு குறைவான நேரமும் பங்குகொள்ளுதலுமே போதுமானது. தொழிற்பயிற்சி திட்டங்கள், வாழ்க்கைத் தொழில் அல்லது தொழில்துறை சார்ந்த கல்வி அல்லது குறுகிய கால கல்லூரி படிப்புகள் வாயிலாக இதைச் செய்கின்றனர்.
4 யெகோவாவின் வாக்குறுதியை நம்புங்கள்: மனதில் வைக்கவேண்டிய அதிமுக்கிய காரியம் என்னவென்றால், தங்கள் வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை முதலாவது தேடுபவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பதாக யெகோவா தேவன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பதே. (மத். 6:33) இது வீணான வாக்குறுதி அல்ல. ஊழியப் பயிற்சி பள்ளிக்கு வரும் அநேக சகோதரர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு கல்லூரி பட்டம் பெற்றவர்கள். ஆனால் உலகப்பிரகாரமான வேலைக்காக அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் படித்ததற்கு சம்பந்தமே இல்லாத வேலைகளைத்தான் அநேகர் செய்துவந்தனர். பெரும்பாலானோர் சேவை நிறுவனங்களில்தான் வேலைசெய்து வந்தனர். அதேசமயம் தங்களுடைய பொருளாதார தேவைகளையும் கவனித்துக்கொண்டு பயனியர் ஊழியமும் செய்தனர். ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகரித்ததனால் எந்தப் பொருளாதார நன்மைகளையும் மிஞ்சும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்.
5 மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தபிறகு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்குமுன் உங்கள் உள்நோக்கங்களையும் மற்ற எல்லா காரணிகளையும் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். சமநிலையான தீர்மானம் செய்ய உதவியாக மார்ச் 8, 1998, தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 19-21-ல் வெளிவந்ததைப் போன்ற தகவல்களை கவனியுங்கள். உங்கள் பெற்றோர், மூப்பர்கள், வட்டார கண்காணி, உங்கள் பகுதியில் சேவை செய்யும் திறம்பட்ட பயனியர்கள் ஆகியோரிடம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை எப்படி உபயோகிப்பது என்பதை ஞானமாய் தீர்மானிக்க அது உங்களுக்கு உதவும்.—பிர. 12:1, 13.