பைபிள்—எல்லா மக்களுக்குமுரிய கடவுளுடைய வழிகாட்டி
1 2,100-க்கும் அதிகமான மொழிகளிலும் கிளைமொழிகளிலும் 400 கோடி பைபிள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது; இதனால் பூமியின் ஜனத்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கடவுளுடைய வார்த்தை கிடைக்கிறது. இருப்பினும், “யெகோவாவின் வசனத்தைக் கேட்க வேண்டுமெனத்” தவிக்கிற பஞ்சம் இந்த உலகில் நிலவுகிறது. (ஆமோ. 8:11, திருத்திய மொழிபெயர்ப்பு) பைபிள் வைத்திருக்கும் அநேகர் அதை வாசிப்பதுமில்லை அதிலுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்வதுமில்லை. தங்களுடைய வாழ்வில் பைபிளை ஒரு நடைமுறையான வழிகாட்டியாக பயன்படுத்துவதற்கு அவர்களை நாம் எவ்வாறு உந்துவிக்கலாம்?
2 டிசம்பர் மாதத்தில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், அல்லது ஜூலை நம் ராஜ்ய ஊழியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விசேஷ விலை புத்தகங்களில் எவற்றையேனும் நாம் அளிப்போம். அக்கறையுள்ளவர்களிடம், 47 வருடங்களாக நமக்கு நன்மையளித்திருக்கிற பைபிளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய புதிய உலக மொழிபெயர்ப்பையும்கூட நாம் அளிக்கலாம். அதன் தெளிவான, நவீன மொழிநடையை எடுத்துக்காண்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். (“வேதவாக்கியம் முழுவதும்” [ஆங்கிலம்] புத்தகத்தில் பக்கம் 328, பாரா 6-ஐக் காண்க.) பைபிள் எல்லா மக்களுக்குமுரிய கடவுளுடைய வழிகாட்டி என்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் உதவிசெய்வதன் மூலம் யெகோவாவால் கொடுக்கப்பட்ட இந்தப் பரிசுக்கு நம் உள்ளார்ந்த போற்றுதலை காண்பிப்போம்.
3 “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்” என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு பிரசங்கத்தை அறிமுகப்படுத்தலாம். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“உலக ஜனத்தொகையில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு பைபிள் கிடைக்குது, ஆனா கொஞ்ச பேர்தான் அதை ஒழுங்கா வாசிக்கிறாங்க. இதற்கு காரணமென்னன்னு நீங்க நினைக்கிறீங்க?” இந்தத் துண்டுப்பிரதியில் முதல் இரண்டு பாராக்களையும் 2 தீமோத்தேயு 3:16-ஐயும் வாசியுங்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களில் ஏதாவதொன்றிலிருந்து பொருத்தமான ஒரு குறிப்பை முக்கியப்படுத்திக் காண்பித்து, அந்தப் புத்தகத்தை அளியுங்கள். அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்தத் துண்டுப்பிரதியில் உள்ள மீதிப்பாகத்தை வீட்டுக்காரர் வாசித்துப்பார்க்கும்படி சொல்லுங்கள். “எதிர்காலத்தை முன்னறிவித்தல்” என்ற கடைசி உபதலைப்பை முக்கியப்படுத்திக் காண்பியுங்கள்.
4 “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்” என்ற துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்ட நபரை மீண்டும் சந்திக்கும்போது, நீங்கள் இதை முயன்று பார்க்கலாம்:
◼உங்களை மறுபடியும் அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு, அந்தத் துண்டுப்பிரதியிலுள்ள கடைசி இரண்டு பாராக்களை வாசியுங்கள். பூமியில் என்றென்றும் வாழும் சாத்தியத்தைக் குறித்து எப்பொழுதாவது யோசித்துப்பார்த்தாரா என அந்த வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அவர் பதிலளித்தப்பின், இவ்வாறு சொல்லுங்கள்: “பைபிளில் உள்ள எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் என்பதைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் உறுதியா நம்பறாங்க. கடவுள் கேட்கிற காரியங்களை செய்ற எல்லா மக்களுக்கும் அருமையான எதிர்காலம் இருக்குன்னு சொல்ற தீர்க்கதரிசனங்களையும் நம்பறாங்க.” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில், பக்கம் 13-ல் உள்ள விளக்கப்படத்தைக் காண்பியுங்கள்; பின்பு 5-ம் பாடத்திற்குத் திருப்பி, அங்கு பட்டியலிடப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லித்தருவதாக கூறுவதன்மூலம் ஒரு படிப்பை ஆரம்பியுங்கள்.
5 மதப்பற்றுள்ள மக்கள் வசிக்கிற பிராந்தியத்தில், நீங்கள் முதலில் இந்த அணுகுமுறையை முயன்று பார்க்கலாம்:
◼“பைபிள்மீது அதிக மதிப்பு வைப்பதற்கு நாங்க எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறோம். நிறைய வீடுகளில் பைபிள் வச்சிருக்கிறாங்க, ஆனால் அவங்களுக்கு பெரிய பிரச்சினைகள் வரும்போது, எப்போதாவதுதான் அதை எடுத்துப்பார்க்கிறாங்க. இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நம்ம காலத்துக்கு பைபிள் ஒத்துவராது என அவங்க ஒருவேளை நினைக்கலாம். விஞ்ஞானப்பூர்வமாய் பைபிள் திருத்தமானது, அதோட இன்னைக்கு இருக்கிற முக்கியமான பிரச்சினைகளுக்கு நடைமுறையான பரிகாரத்தை கொடுக்குது என்பதற்கு நம்பகமான அத்தாட்சி இந்தப் புத்தகத்தில (அந்த மாத அளிப்பிலிருந்து ஏதாவதொன்று) இருக்குது.” இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகளை முக்கியப்படுத்திக் காண்பித்து, அதன்பின் அதை அளியுங்கள்.
6 அளிப்பை பெற்றுக்கொண்டவர்களை நீங்கள் மீண்டும் சந்திக்கும்போது இவ்வாறு சொல்லலாம்:
◼“போனதடவை உங்களை சந்திச்சபோது, இன்னைக்கு இருக்கிற சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பைபிள் எவ்வாறு உதவுது என்பதைப் பற்றி நாம் பேசினோம். அதை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டவங்களுக்கு, அதிக சந்தோஷமான, அதிக திருப்தியான வாழ்க்கை வாழவும்கூட உதவிசெய்திருக்கு. நான் உங்ககிட்ட கொடுத்த அந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிற நடைமுறையான பைபிள் நியமங்களில் ஒன்றை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.” நீங்கள் கொடுத்த புத்தகத்தில் காணப்படும் வேதப்பூர்வமான நியமங்களில் ஒன்றை கலந்தாலோசியுங்கள். அக்கறை காண்பிக்கப்பட்டால், அறிவு புத்தகத்திலிருந்தோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தோ படிப்பை ஆரம்பியுங்கள்.
7 பின்வரும் பிரசங்கம் வயதான ஆட்களுடைய ஆவலைத் தூண்டலாம்:
◼“ஒருகாலத்தில பெரும்பாலான வீடுகளில் பைபிளை வாசிச்சாங்க, குடும்பத்தில இருந்தவங்க அதிலுள்ள நியமங்களை கடைப்பிடிச்சி வாழ்ந்தாங்க. உங்க குடும்பத்தில அப்படி செய்தாங்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இப்பெல்லாம், பைபிள் வாசிக்க நேரமே ஒதுக்க முடியாதளவுக்கு அநேகருடைய கவனம் திசைதிருப்பப்படுவதாக தெரியுது அல்லது அதிலுள்ள ஒழுக்கநெறி நியமங்கள் பழம்பாணியானவை என நினைக்கிறாங்க. இருந்தாலும், பைபிளை வாசிச்சு அதன்படி வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சுக்கிட்ட அநேக ஆட்கள் இன்னைக்கு இருக்கிறாங்க. கடவுளுடைய வார்த்தையின் வல்லமை எப்படி அவங்களுக்கு உதவிசெஞ்சது என்பதை நீங்க வாசிக்க விரும்பினால், இந்தப் புத்தகத்தை உங்களிடம் கொடுப்பதில எனக்கு அதிக சந்தோஷம்.” இந்த மாதத்திற்கான புத்தகங்களில் எதையாவது கொடுங்கள்.
8 மறுசந்திப்பின்போது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“போனதடவை நாம் பேசியபோது, இன்னைக்கு சமுதாயத்துல பைபிள் ஒழுக்கநெறி நியமங்கள் மதிக்கப்படுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டோம். அப்படி மதிப்பு கொடுக்காததைக் குறித்து நாம் அக்கறைகொள்ள வேண்டுமா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பைபிள் அறிவைப் பெறுவதைக் குறித்து இயேசு கிறிஸ்து உயர்வான மதிப்பு வச்சிருந்தார்.” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். பின்பு, அறிவு புத்தகம், அதிகாரம் 1, பாரா 5-ல் உள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நம்முடைய இலவச பைபிள் படிப்புத் திட்டத்தை விளக்கிக்காண்பித்து, அதை செய்துகாட்டுவதாக கூறுங்கள்.
9 எல்லா மக்களுக்குமுரிய கடவுளுடைய வழிகாட்டியாகிய பைபிளிடம் கவனத்தைத் திருப்புவதற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபியுங்கள்.