நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பரப்புதல்
1 யெகோவா “மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர்.” (சங். 94:10) எப்படி அவரை ஏற்கத்தக்க விதத்தில் சேவிப்பது என்று தெரியாமலிருப்போருக்கு அவரைப்பற்றிய ஜீவனைக்காக்கும் அறிவைப் பரப்புவதற்காக நம்மை அவர் உபயோகிக்கிறார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் ஒரு நல்ல போதிக்கும் ஏதுவாக இருக்கிறது; அதன்மூலம் நேர்மை இருதயமுள்ளோர் கடவுளைப்பற்றிய திருத்தமான புரிந்துகொள்ளுதலை அவருடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளிலிருந்து பெற முடியும். (1 தீ. 2:3, 4) தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சத்தியத்தைக் கொண்டுசெல்லும் அறிவு புத்தகத்தின் விதம் யெகோவா மக்களுக்கு என்ன போதிக்க விழைகிறார் என்பதை அவர்கள் கிரகிக்க உதவும். ஆகவே, வெளி ஊழியத்தில் நாம் பங்கேற்கும்போது இந்தப் புத்தகத்தை பல மொழிகளில் நம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த மாதம் நாம் ஜனங்களை உரையாடலில் ஈடுபடுத்த வேண்டும், அது இந்தப் புத்தகத்தை அவர்கள் படிக்கும்படி செய்யும். இதோ இங்கே சில ஆலோசனைகள். இவற்றை மனப்பாடம் செய்வதற்கு மாறாக, உங்களுடைய சொந்த வார்த்தையிலும் இயல்பான உரையாடல் பாணியிலும் முக்கிய கருத்துகளைத் தெரிவிக்க முயலுங்கள்.
2 அநேக ஆட்கள் தங்கள் அன்பானவர்களை மரணத்தில் இழந்திருப்பதால், முதலில் இவ்வாறு சொல்வதன் மூலம் உரையாடலை உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தலாம்:
◼ “நம்மில் அநேகர் அன்பானவர்களை மரணத்தில் இழந்துள்ளோம். மறுபடியம் அவர்களைப் பார்க்கமுடியுமா என்று நீங்கள் வியந்ததுண்டா? [பதிலளிக்க அனுமதிக்கவும்.] மனிதனுக்கான கடவுளின் ஆதி நோக்கத்தின் பாகமாக மரணம் இருக்கவில்லை. நம்முடைய அன்பானவர்களை மரணத்திலிருந்து மீட்கமுடியும் என்பதை இயேசு நிரூபித்தார். [யோவான் 11:11, 25, 44-ஐ வாசிக்கவும்.] பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது நடந்தேறியபோதிலும், நமக்காக கடவுள் என்ன செய்வதாக வாக்குக்கொடுத்திருக்கிறாரோ அதை இது மெய்ப்பித்துக்காட்டுகிறது. [பக்கம் 85-லுள்ள படத்தினிடமாக அறிவு புத்தகத்தைத் திறந்து, படக்குறிப்பை வாசித்துக்காட்டுங்கள். அதன்பிறகு பக்கம் 86-லுள்ள படத்தைக் காட்டி, அதன்பேரில் குறிப்பு சொல்லுங்கள்.] இந்த ஆறுதலளிக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றி அதிகமாக வாசிக்க நீங்கள் விரும்பினால், இந்தப் புத்தகத்தை உங்களிடம் விட்டுச்செல்வதில் நான் மகிழ்ச்சியடைவேன்.”
3 உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றிய முதல் கலந்தாலோசிப்புக்குப்பின், அதே நபருடன் அடுத்த உரையாடலை இவ்விதம் துவங்கலாம்:
◼ “மனிதனுக்கான கடவுளுடைய ஆதி நோக்கத்தின் பாகமாக மரணம் இருக்கவில்லை என்று நான் சொன்னதை நீங்கள் ஒருவேளை நினைவுகூரலாம். அது உண்மையானால், நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்? சில ஆமைகள் 100 வருடங்களுக்கு மேல் உயிர்வாழ்கின்றன, ஆயிரக்கணக்கான வருடங்களாக உயிரோடிருந்துகொண்டிருக்கும் மரங்கள் இருக்கின்றன. ஏன் மனிதர்கள் வெறுமனே 70 அல்லது 80 வருடங்கள் வாழ்கிறார்கள்? [பதிலளிக்க அனுமதிக்கவும்.] முதல் மனித தம்பதி கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் நாம் மரிக்கிறோம்.” ரோமர் 5:12-ஐ வாசிக்கவும். அறிவு புத்தகத்தின் 53-ம் பக்கத்திற்குத் திருப்பி, அதிகாரத்தின் தலைப்பை வாசிக்கவும். அச்சிடப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைச் சுட்டிக்காட்டி முதல் மூன்று பத்திகளைக் கலந்தாலோசியுங்கள். அதிகாரத்தின் மீதமுள்ள பகுதியைப் பிறகு வந்து கலந்தாலோசிப்பதற்கு சந்திப்பு ஏற்பாடை செய்துகொள்ளுங்கள். அதற்குள்ளாக அதைப் படித்துமுடிக்க அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள்.
4 மதப்பற்றுள்ளவராகத் தோன்றும் ஒருவருடன் நீங்கள் பேசுகையில், இவ்வாறு கூறலாம்:
◼ “உண்மையிலேயே நூற்றுக்கணக்கான வெவ்வேறு மதங்கள் இன்று உள்ளன. எல்லா வகையான முரண்பாடான நம்பிக்கைகளையும் அவை போதிக்கின்றன. எல்லா மதங்களும் நல்லவையே, நாம் எதை நம்புகிறோம் என்பதில் வித்தியாசம் ஏதுமில்லை என்பதாகச் சிலர் சொல்கிறார்கள். உங்களுடைய கருத்து என்ன? [பதிலளிக்க அனுமதிக்கவும்.] ஒரே உண்மை மதம் இருப்பதாக இயேசு கூறினார், வழிபாட்டின் பல வகைகள் கடவுள் ஏற்கத்தகாதவை என்று காண்பித்தார். [மத்தேயு 7:21-23-ஐ வாசிக்கவும்.] நாம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால், அவருடைய சித்தத்திற்கு இசைவாக அவரை நாம் வழிபடவேண்டும்.” அறிவு புத்தகத்தை 5-ம் அதிகாரத்திற்குத் திருப்பி தலைப்பை வாசிக்கவும், சில உபதலைப்புகளைச் சுட்டிக்காட்டவும். கடவுளை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என்று கற்றுக்கொள்ள ஒருவருக்கு இந்த விஷயம் உதவும் என்பதை விளக்குங்கள். புத்தகத்தை நன்கொடை ரூ. 15-க்கு அளித்திடுங்கள்.
5 இத்தனை அநேக மதங்கள் இருப்பதனால் குழப்பத்திலுள்ள ஆட்கள், உங்கள் மறுசந்திப்பின்போது இந்தக் கேள்விக்கான பதிலை போற்றுவார்கள்:
◼ “இத்தனை அநேக மதங்கள் இன்று இருப்பதனால், எது சரியானது என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்? நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்? [பதிலளிக்க அனுமதிக்கவும்.] இயேசு அவருடைய உண்மையான சீஷர்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது என்று நமக்குச் சொன்னார்.” யோவான் 13:35-ஐ வாசிக்கவும். அறிவு புத்தகத்தில் 5-ம் அதிகாரத்தில் 18-ம் மற்றும் 19-ம் பத்திகளை கலந்தாலோசிக்கவும். இத்தகைய வேதாகம வழிகாட்டும் குறிப்புகளையும் நீக்குதல் முறையையும் (process of elimination) உபயோகித்து ஒரு நபர் உண்மையான மதத்தைக் கண்டுகொள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். உலகம் முழுவதிலும் எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உண்மையான அன்புக்கும் உயர்ந்த ஒழுக்க தராதரங்களுக்கும் பெயர்போனவர்கள் என்பதை விவரித்திடுங்கள். அறிவு புத்தகத்தை உபயோகித்து பைபிளைப் படிப்பது கடவுள் அங்கீகரிக்கும் வழிபாட்டின் வகையை எவ்வாறு தெளிவாக அடையாளம் காட்டும் என்பதை விளக்குங்கள்.
6 ஒரு பெற்றோரை நீங்கள் சந்திக்கையில், ஒருவேளை இந்த அணுகுமுறை திறம்பட்டதாயிருக்கும்:
◼ “எந்த விதத்திலும் ஒழுக்க மதிப்பீடுகளே இல்லாதவர்களாகத் தோன்றும் இளைஞர்களுடைய கட்டுப்பாடற்ற நடத்தையின் அறிக்கைகளைப்பற்றி தினமும் நாம் கேள்விப்படுகிறோம். சரியானதற்கும் தவறானதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பிள்ளைகளுக்குப் போதிக்காமல் இருப்பதாக பள்ளி முறையைக் குறைகூறவே பெரியவர்களில் சிலர் விரும்புகிறார்கள். இந்தப் பயிற்சியை யார் அளிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதிக்கவும்.] இந்தக் கேள்வியின் பேரில் பைபிள் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். [எபேசியர் 6:4-ஐ வாசிக்கவும்.] பிள்ளைகளில் ஒழுக்க மதிப்பீடுகளை ஊன்றச்செய்வது பெற்றோரின் பொறுப்பு என்று அது சொல்கிறது.” அறிவு புத்தகத்தை பக்கம் 145-க்குத் திருப்பி, பத்தி 16-ஐ வாசிக்கவும், பக்கம் 147-லுள்ள படத்தின்பேரில் குறிப்பு சொல்லவும். முழு குடும்பமும் படிக்கக்கூடிய விதத்தில் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்குங்கள். பக்கம் 146-லுள்ள 17-ம் மற்றும் 18-ம் பத்திகளை உபயோகிப்பதன் மூலம், குடும்பங்களோடு நாம் எவ்வாறு அப்படிப்பட்ட படிப்பு ஒன்றை நடத்துவோம் என்பதை நடித்துக்காட்ட முன்வருவதாகச் சொல்லுங்கள்.
7 அக்கறையுள்ள பெற்றோர் ஒருவருடன் முதல் சந்திப்பில் படிப்பை நீங்கள் ஆரம்பித்திருந்தால், ஒருவேளை நீங்கள் இவ்வாறு சொல்வதன் மூலம் மறுசந்திப்பைத் தொடரலாம்:
◼ “நம் இளைஞர்கள்மீது பல சோதனைகளை இன்றைய உலகம் திணிக்கிறது. இதுதான் அவர்கள் வளருகையில் கடவுள் பயமுள்ளவர்களாக ஆவதற்கு மிகவும் கடினமாக ஆக்குகிறது. நம்முடைய கடந்த கலந்தாலோசிப்பில் இரண்டு நியமங்களைத் தனியே பிரித்து பார்த்தோம் என்பதை ஒருவேளை நீங்கள் நினைவுகூரலாம். கடவுள் பயமுள்ள பெற்றோராக நம் பிள்ளைகளுக்கு நாம் நல்ல முன்மாதிரிகளை வைக்கவேண்டும், அவர்கள்மீது அன்பான வார்த்தைகளைத் தொடர்ந்து பொழிய வேண்டும். பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத் தேவையான மற்றொரு காரியம் இருப்பதாக பைபிள் சொல்கிறது.” நீதிமொழிகள் 1:8-ஐ வாசியுங்கள். அறிவு புத்தகத்தின் பக்கம் 148-க்குத் திருப்பி, 19-23 பத்திகள் முடிய படிப்பைத் தொடருங்கள். நீங்கள் மறுபடியும் வந்து அதிகாரம் 1-லிருந்து ஆரம்பித்து முழு குடும்பத்துடனும் படிப்பதாகக் குறிப்பிடுங்கள்.