யெகோவாவினால் கற்பிக்கப்படுதல்
1 தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு அறிவித்தார்: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய யெகோவா எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்.” (ஏசா. 50:4) இதை யெகோவா செய்யும் ஒரு வழி தேவராஜ்ய ஊழியப்பள்ளி ஏற்பாடு செய்யும் பயிற்சியின் மூலம். என்றாலும் தனிப்பட்ட முயற்சி இன்னும் தேவைப்படுகிறது. தேவ ராஜ்ய ஊழியப்பள்ளி வழிகாட்டிப் புத்தகம் பக்கம் 39-ல் இந்தக் கவனிப்பைக் குறிப்பிடுகிறது: “ஒரு குறிப்பிட்ட விதமான நியமிப்பை நீங்கள் எத்தனை முறை கையாண்டிருந்தாலும் தயாரிப்பு எப்பொழுதும் மதிப்புள்ளதாயிருக்கிறது.” 1943-ல் பள்ளி துவங்கினதிலிருந்து அல்லது வெகு சில மாதங்களே நாம் பள்ளியில் இருந்தாலும் இது நம் அனைவருக்கும் பொருந்துகிறது.
2 எல்லா மாணாக்கர்களும் முழுமையாக தயாரிக்க வேண்டும். நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருப்பதும் இதில் அடங்குகிறது. தேவ ராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் உள்ள போதனைகள் குறிப்பிடுவதாவது: “எந்தப் பேச்சும் நேர அளவுக்கு மீறிச் செல்லக்கூடாது.” நியமிப்பு எண் 1-ஐக் கையாளும் ஒரு சகோதரர் அடிக்கடி நேர அளவுக்கு மீறிச் செல்வாரேயானால் அவருக்கு தனிப்பட்ட ஆலோசனைக் கொடுக்கப்பட வேண்டும். பள்ளிக் கண்காணியும் கூட்டத்தை சரியான நேரத்தில் துவக்க வேண்டும். அவருடைய ஆலோசனைக்கும் குறிப்புகளுக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தைக் குறித்த போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். “வேத வாக்கியங்களெல்லாம்” புத்தகத்தின் 1990-ல் திருத்திய பதிப்பு கிடைக்குமேயானால் அதையே உபயோகிக்க வேண்டும் என்பதை தயவு செய்து கவனியுங்கள்.
3 பைபிளின் முக்கிய குறிப்புகள் பகுதியிலிருந்து எல்லாரும் அதிக நன்மையடையலாம். நியமிக்கப்பட்ட விஷயங்களை வெறுமென விமர்சிக்கக் கூடாது என்பதாக நாம் நினைப்பூட்டப்படுகிறோம். தகவல்கள் நமக்கு ஏன், எவ்வாறு மதிப்புள்ளதாயிருக்கிறது என்பதை சபையார் போற்ற பேச்சாளர் உதவ வேண்டும்.
4 பேச்சு எண் 3-க்கு அநேகவிதமான மேடை அமைப்புகள் உபயோகிக்கப்பட்டு பலதரப்பட்ட பயன்கள் கொடுத்திருக்கின்றன. ஆனால் சத்தியத்தை திருத்தமாகவும் தெளிவாகவும் அளிக்க நமக்கு உதவிசெய்வதே பள்ளியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று என்பதை நாம் மனதில் கொண்டவர்களாய் மேடை அமைப்புகள் வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலை உட்படுத்தியதாய் இருப்பதை தெரிந்துகொள்வது மேலானது.
5 இளைஞர் கேட்கும் கேள்விகளும்–பலன் தரும் விடைகளும் புத்தகத்திலிருந்து பேச்சு எண் 4 எடுக்கப்பட்டிருந்தால், அது புதிய அல்லது இளம் மாணாக்கர்களுக்கு நியமிக்கப்படும். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும். இந்தப் பேச்சுகள் நியாயங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பேச்சுகளோடு ஒவ்வொரு வாரமும் மாறி மாறி வரும். பேச்சு எண் 3-க்கும், பேச்சு எண் 4-க்கும் மாணாக்கர் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை உபயோகிக்க வேண்டும்.
6 கூடுதலான விஷயங்களைச் சேர்க்கையில் கவனம் செலுத்தப்படுவது தேவையாயிருக்கிறது. நியமிக்கப்பட்ட விஷயங்களில் சில ஒன்று அல்லது இரண்டு பாராக்களை உட்படுத்தியதாக மட்டுமே இருக்கும். இருந்தாலும், வேதவசனங்களை வாசித்து விளக்குவதன் மூலமும், உதாரணங்களை உபயோகிப்பதன் மூலமும் விஷயங்களை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் திறம்பட்டவிதமாய் அளிக்கலாம். பொதுவாக, என்ன நியமிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு வெளியேயுள்ள விஷயங்களை நாம் அளிக்க வேண்டிய தேவையில்லை. பேச்சு அடிப்படையாகக் கொண்ட பிரசுரத்தை வைத்துக் கொண்டு சபையார் உங்கள் பேச்சை பின்பற்றும்படி இருக்கவேண்டும்.
7 நாம் வணங்கும் கடவுள் எடுக்க எடுக்க குறையாத ஞானம் மற்றும் அறிவின் ஊற்றுமூலத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். (ரோ. 11:33) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பும் நமக்குக் கற்றுக்கொள்வதற்கு இன்னும் அதிகம் இருக்கும். நம் பரலோகத் தகப்பனைத் துதிப்பதற்கான நம் திறமையும், நம் வாழ்க்கையின் பிரச்னைகளை கையாளுதலும், நம் சந்தோஷம், திருப்தி ஆகிய எல்லாமே தெய்வீக ஞானத்தைப் பெற நாம் செலவழிக்கும் முயற்சிக்கு சரிசமமாக அதிகரிக்கும். தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கு ஒழுங்காக ஆஜராவதன் மூலம் நமது மகத்தான போதகர் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாட்டிலிருந்து முழுமையாகப் பயனடைவது உங்கள் தீர்மானமாயிருக்கச் செய்யுங்கள். 1991-ல் தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்காக தயாரிக்கவும், பங்கெடுக்கவும் நீங்கள் கொண்டுள்ள ஊக்கம் இதை சாதிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்வதாக.