கடவுளுடைய வார்த்தையை சிபாரிசு செய்தல்
1 இன்றைக்கு அநேகர் பைபிளை நம் நாளுக்கு ஒவ்வாததாயும் மெய்மையற்றதாயும் கருதுகின்றனர். என்றபோதிலும், கடவுளுடைய வார்த்தைக்கு வாழ்க்கையை மாற்றுவதற்கான வல்லமை இருக்கிறது. (எபி. 4:12) இது பல்வகைப்பட்ட ஜனங்களின் சிந்தனை, நடத்தை மற்றும் முன்னேற்றமடைந்த மனநிலைகளில் தெளிவாகக் காட்டப்படுகிறது. (எபே. 4:24) பைபிளின் ஆலோசனையை பொருத்துவது ஒரு சந்தோஷமான குடும்ப சூழ்நிலைக்கு உதவியளிக்கிறது. இனம், நிறம் மற்றும் சமூகநிலை எதுவாயிருப்பினும் அயலக உறவுகளை இது மேம்படுத்துகிறது.—லூக். 10:29–37.
2 கடவுளுடைய வார்த்தையோடுள்ள நம் தனிப்பட்ட அனுபவம், மற்றவர்கள் பைபிளின் உண்மையான மதிப்பை அவர்களே ஆராய்ந்து பார்க்கும்படி உற்சாகப்படுத்த நம்மை உந்துவிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வரைசட்டம், “பைபிளை ஏன் வாசிக்க வேண்டும்?” என்ற நமது புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளை புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளுடன் நாம் எவ்வாறு உபயோகிக்கலாம்? மேலும் திரித்துவம் புரோஷுர் அல்லது “இதோ!” புரோஷுரோடு டிசம்பர் மாதத்தில் நம் ஊழியத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம்?
சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை உபயோகித்தல்
3 ஒரு சுருக்கமான முன்னுரைக்குப் பிறகு, நாம் சொல்லலாம்: “அநேக அழுத்தங்களும் பிரச்னைகளும் இன்று குடும்பங்களைப் பாதிப்பதனால், நடைமுறையான உதவிக்கு ஒரே உண்மையான ஊற்றுமூலத்திற்கு கவனத்தைத் திருப்ப நாங்கள் சந்திக்கிறோம். கடந்த காலங்களில் ஜனங்கள் வழிநடத்துதலுக்காக பைபிளை நோக்கியிருந்தனர், ஆனால் காலங்கள் மாறிவிட்டிருக்கிறது அல்லவா? போதை மருந்து துர்ப்பிரயோகம், இளைஞரின் தீச்செயல் மற்றும் முறிந்த குடும்பங்கள் போன்ற இன்றைக்கிருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பைபிள் உதவிசெய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் 2 தீமோத்தேயு 3:16-ல் என்ன சொல்லுகிறது என்பதை கவனியுங்கள். [வாசிக்கவும்.] பைபிள் அவ்விதமான பயனுள்ள செல்வாக்கைச் செலுத்தக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதிக்கவும்.] பிரச்னைகளை எதிர்ப்படுகையில் அல்லது வாழ்க்கையில் தீர்மானங்களைச் செய்கையில் அநேக ஜனங்களுக்கு ஏதோ ஒருவிதமான வழிநடத்துதல் தேவையாயும் விருப்பமாயும் இருக்கிறதல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுவது நம்மை எங்கே வழிநடத்தும் என்பதை கவனியுங்கள். [யோவான் 17:3-ஐ வாசிக்கவும்.] தனிப்பட்ட கஷ்டங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு பைபிள் தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கிறது, மேலும் எதிர்காலத்திற்கான ஒரு நிச்சய நம்பிக்கையை விளக்குகிறது.” கடவுளுடைய வார்த்தையைப் புரிந்து கொள்வதற்கான உண்மையான அக்கறையை அந்த நபர் காட்டுவாரேயானால், புதிய உலக மொழிபெயர்ப்பு அல்லது புரோஷுர்களில் ஒன்றின் மதிப்பை நாம் தெளிவுபடுத்திக் காட்டலாம்.
4 புதிய உலக மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்துகையில், வீட்டுக்காரர் பைபிளின் ஒரு தனிப்பட்ட பிரதியை வைத்திருக்கிறாரா என்றும் அதை வாசிப்பது எளிதாக இருப்பதாக அவர் காண்கிறாரா என்றும் கேளுங்கள். பிரதிபலிப்பைப் பொறுத்து, புதிய உலக மொழிபெயர்ப்பின் சில உதவியளிக்கும் அம்சங்களுக்கு நீங்கள் அவர் கவனத்தைத் திருப்பலாம், நவீன மொழி உபயோகப்படுத்தப்பட்டிருப்பதையும் தெய்வீக நாமம் மீண்டும் போடப்பட்டிருப்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். நியாயங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 276–80-ல் உள்ள ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளையும் உபயோகிப்பது உதவியாக இருப்பதாக நீங்கள் காணலாம். அக்கறை காட்டுபவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வீட்டு பைபிள் படிப்பை அளியுங்கள்.
5 திரித்துவம் புரோஷுருக்குக் கவனத்தைத் திருப்புகையில், நீங்கள் சொல்லலாம்: “அநேக உண்மை மனதுள்ள ஆட்கள் திரித்துவத்தை நம்பும்படி போதிக்கப்பட்டிருக்கின்றனர், இருந்தபோதிலும் இக்கருத்தைப் புரிந்து கொள்வதற்கு வெகு கடினமாக இருப்பதாகக் காண்கின்றனர். பைபிள் என்ன சொல்லுகிறது என்பதையும், சரித்திரப்பூர்வ நோக்குநிலையிலிருந்தும் திரித்துவத்தை இந்தப் புரோஷுர் அதிக நுணுக்கமாக ஆராய்கிறது. இதை வாசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” “இதோ!” புரோஷுரை உபயோகப்படுத்துவதைக் குறித்தவரையில், அட்டைப் படத்தையோ அல்லது பக்கம் 15-லுள்ள “கெட்ட காரியங்கள்—கடவுள் ஏன் அவற்றை அனுமதிக்கிறார்?” என்ற தலைப்பையோ காட்டி வீட்டுக்காரரின் அக்கறையை நீங்கள் கவரலாம்.
6 டிசம்பர் மாதத்தில் ஜனங்களை பைபிள் வாசிப்பதற்கு உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பங்களுக்கு விழிப்பாயிருங்கள். அக்கறை தெரிவிப்பவர்களிடம் சீக்கிரமாகத் தொடர்ந்து மறுசந்திப்புகள் செய்யுங்கள். கடவுளுடைய வார்த்தையின் வல்லமைக்கு உண்மையான போற்றுதலை வளர்க்க அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். அதன் நியமங்களை தங்களுடைய வாழ்க்கையில் பொருத்துவதன் மூலம், அவர்கள் இப்பொழுதும், வரப்போகும் வாழ்க்கையிலும் நித்திய நன்மைகளை அடைவர்.—1 தீமோ. 4:8.