பயன் தரக்கூடிய அந்த தேவ ராஜ்ய ஊழியப்பள்ளி
1 1943 முதற்கொண்டு இந்த தேவராஜ்ய ஊழியப்பள்ளியானது, அதன் சிறந்த ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக் கொண்டவர்களுக்கு மெய்யான ஆசீர்வாதமாக நிரூபித்திருக்கிறது. ஆம், இந்த தேவ ராஜ்ய பள்ளியானது அதன் இரண்டு முக்கிய குறிக்கோள்களைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. (1) பைபிள் சத்தியங்களைப் பேசும் திறமையை விருத்தி செய்வது (2) கடவுளுடைய வார்த்தையோடு அதாவது அதன் கொள்கைகளுடனும் அதன் நியமங்களுடனும் நன்றாக அறிமுகமாவது ஆகியவற்றை நிறைவேற்றிவருகிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் படிப்படியான பயிற்சியின் மூலம் அடைந்திருக்கும் நன்மைகளுக்கு அநேகர் ஆழ்ந்த போற்றுதலை தெரிவித்திருக்கிறார்கள். சகோதரர்களும் சகோதரிகளுமாகிய இருவரும் ‘சத்திய வார்த்தையை சீராக கையாளுவதற்கு’ உதவப்பட்டிருக்கிறார்கள்.—2 தீமோ. 2:15.
தேர்ச்சியடைதல்
2 புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களும் அதில் பல ஆண்டுகளாக பங்கு பெறுபவர்களும் தங்களுடைய பேச்சு நியமிப்புகளைக் கவனமாக தயாரிப்பதன் மூலம் மிக அதிகமான நன்மைகளை அடைந்திருக்கின்றனர். ஒரு சிலர் தங்களுடைய பிரசங்க அளிப்பை அப்படியே வாசிப்பதாக கவனிக்கப்பட்டிருக்கிறது. சாட்சி கொடுப்பதில் சிறந்து விளங்குவதற்கு நல்ல வாசிப்பு மற்றும் முன் தயாரிப்பின்றி சரளமாக பேசுவதற்கான திறமை ஆகிய இரண்டும் தேவைப்படுகிறது.
3 நம்முடைய வேலையில் நியாயங்கள் புத்தகமானது மிகச் சிறந்த ஓர் ஏதுவான நிரூபித்திருக்கிறது. அந்தப் புத்தகத்திலிருக்கும் அநேக அம்சங்களை நாம் நல்லவிதத்தில் அறிந்து கொள்வதற்கு தேவ ராஜ்ய பள்ளி மிகச் சிறந்த ஒரு பொது மேடையாக அமைந்திருக்கிறது. இந்தப் பிரசுரத்தை மிக நன்றாக அறிந்து கொள்வதானது நம்முடைய சொந்த வார்த்தைகளில் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் மேலும் சிறப்பாக சம்பாஷிப்பதற்கும் உதவி செய்கிறது. 1989-ம் ஆண்டில் இந்த நியாயங்கள் புத்தகத்திலுள்ள தகவல்களிலிருந்து மாணாக்கர் பேச்சுகள் கொடுக்கப்படுவதால் அந்தப் பிரசுரத்தினுடைய படிப்படியான கலந்தாலோசிப்பிலிருந்து நாம் தொடர்ந்து நன்மை அடையலாம்.
1989-ம் ஆண்டிற்கான ஆலோசனைகள்
4 இந்த ஆண்டின்போது முதல்பேச்சு வழக்கம் போல “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து கொடுக்கப்படும். அதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிற போதிலும், ஒரு சிறிய மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது, பேச்சுக்காக 10 முதல் 12 நிமிடங்கள் பயன்படுத்தப்படலாம். 3 முதல் 5 நிமிடங்கள் நேர் முக விமர்சனத்துக்குப் பயன்படுத்தலாம்.
5 தேவராஜ்ய ஊழியப்பள்ளியில், மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகிய பைபிள் வாசிப்பின் முக்கிய குறிப்புகள் அப்படியே தொடர்ந்திருக்கும். இந்தப் பகுதியைக் கையாளக்கூடிய சகோதரர்கள் அந்தத் தகவல்கள் ஏன் மற்றும் எப்படி நமக்கு மதிப்புள்ளது என்பதை சபையார் புரிந்து கொள்ளும்படி உதவ வேண்டும். வாட்ச்டவர் பிரசுர இன்டெக்ஸில் வேதவசன இன்டெக்ஸை பயன்படுத்துவது அதிக உதவியாக இருக்கும், கூடுதலாக, காவற்கோபுரம் பத்திரிகையில் எபிரெய வேதாகம புத்தகங்கள் பேரில் விசேஷ கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும். இவை பயன்படுத்துவதற்கு ஏற்ற பின்னணி தகவல்களையும் நடைமுறை குறிப்புகளையும் கொடுக்கும். பைபிள் வாசிப்பு முக்கிய குறிப்புகள் சரியாக கையாளப்படாவிட்டால் பள்ளி கண்காணி தனிப்பட்ட ஆலோசனைகளைக் கொடுப்பார்.
எழுத்து விமர்சனம்
6 1989-ம் ஆண்டின் ஆரம்பம் முதற்கொண்டு, எழுத்து விமர்சனம் கையாளப்படும் முறையில் ஒரு மாறுதல் இருக்கும். விமர்சனம் ஆண்டில் மூன்று முறை நடைபெறும்—வழக்கமாக பிப்ரவரி, ஜூன், அக்டோபர். சங்கம் இனிமேலும் அச்சடிக்கப்பட்ட விமர்சன கேள்வி தாள்களை அனுப்பாது, ஆனால் ஒவ்வொரு பிரஸ்தாபியும் தான் பங்கு பெறுவதற்காக வேண்டி தன்னுடைய சொந்த பேப்பர் பேனாவை கொண்டுவர வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, தயாரிக்கப்பட்ட கேள்விகளும் விடைகளும் சங்கத்தால் அனுப்பப்படும். எழுத்து விமர்சனத்தில், பேச்சு எண் 1 மற்றும் பைபிள் வசன முக்கிய குறிப்புகள் பேரிலும் விசேஷ கவனம் செலுத்தப்படும்.
பைபிள் வாசிப்பு
7 அட்டவணையிட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வாசிப்பு பகுதிகளிலிருந்து நாம் உண்மையிலேயே பயன் பெறுகிறோமா? நாம் வசனங்களை வாசிக்கும்போது மதித்துணர்வை வளர்க்கக்கூடியதும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பண்புகளைப் பலப்படுத்தக்கூடியதுமான வேதவசனங்களுக்காகவும் நிகழ்ச்சி விரிவுரையிலுள்ள உதாரணங்களைப் பொருத்துவதற்கு நமக்கு உதவி செய்யக்கூடியதுமான வேத வசனங்களுக்காகவும் நாம் கவனமாய் பார்ப்போமாக. சங்கத்தின் பதிவு நாடாக்களில் உள்ள பைபிள் வாசிப்புக்குச் செவி கொடுப்பதன் மூலம் நமது வாராந்திர பைபிள் வாசிப்பை செய்ய முயற்சி செய்திருக்கிறோமா? பார்வை மற்றும் செவி உணர்வுகளை நாம் இம்முறையில் பயன்படுத்துவதன் மூலம் தகவலை புரிந்துகொள்ளும் நமது ஆற்றலை நாம் வெகுவாக விருத்தி செய்யலாம் பேச்சு எண் 2-ஐ கொடுக்கும்படி நியமிக்கப்படும் சகோதரர்களுக்கு இந்தப் பதிவு நாடாக்கள் அளிக்கக்கூடிய மிகச் சிறந்த உதவியை நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. சரியான உச்சரிப்பு, தொனி மாறுபாடு, கருத்து அழுத்தம், மற்றும் குரலில் ஏற்றதாழ்வு ஆகியவற்றிற்கு கவனம் செலுத்துவதன் மூலம் இவர்கள் தங்களுடைய வாசிப்பை அதிக உயிர்ப்புள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கலாம்.
8 நமது இன்றியமையாத பிரசங்க வேலையில் நமக்கு உதவி செய்தவற்காக யெகோவா தேவன் அபரிமிதமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சங்கீதம் 19:14-ல் தாவீது தன்னுடைய ஜெப சிந்தையுள்ள ஆவலை வெளிப்படுத்தினான்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக.” தாவீதின் காரியத்திலிருந்ததைப் போலவே யெகோவாவின் பேரிலும் அவருடைய குமாரன் பேரிலுமுள்ள அன்பு நமது இருதயத்தில் பொங்கி வழியுமானால் 1989-ம் ஆண்டின்போது நாம் நமது வாயின் வார்த்தைகளை அதிக பிரீதியானதாக ஆக்குவதற்குத் தேவராஜ்ய ஊழியப்பள்ளி நமக்கு உதவி செய்யும். நமது தயவுள்ள பரம பிதாவிடமிருந்து வரக்கூடிய இந்த அன்பார்ந்த ஏற்பாடுகளிலிருந்து முழுமையான நன்மையடைய நாம் இப்பொழுதே தீர்மானமாயிருப்போமாக.