உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகளை வாசிப்பதை நீங்கள் போற்றியிருக்கிறீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடிகிறதா என்று பாருங்கள்:
▫ கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை? தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியாவின் பிரகாரம், “பூர்வ கிறிஸ்தவர்கள் [இயேசுவின்] பிறப்பைக் கொண்டாடவில்லை. ஏனென்றால் எவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதையும் ஒரு புறமதப் பழக்கமாகக் கருதினர்.”—12/15, பக்கம் 4.
▫ ஜெபங்கள் எல்லாம் இயேசுவினிடத்தில் ஏறெடுக்கப்பட வேண்டுமா? இல்லை. ஜெபங்கள், தனிப்பட்ட விதத்தில் சர்வவல்லவருக்கு மட்டுமே உரியதான ஒருவகை வழிபாடாக இருக்கின்றன. யெகோவா தேவனிடமாக நம்முடைய எல்லா ஜெபங்களையும் ஏறெடுப்பதன்மூலம், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,” என்று ஜெபம் செய்வதற்கான இயேசுவின் கட்டளையை நாம் கவனத்தில் கொண்டிருக்கிறோம் என்று காண்பிக்கிறோம். (மத்தேயு 6:9)—12/15, பக்கம் 25.
▫ அனனியா சப்பீராள் இவர்களின் பாவங்களோடு ஒப்பிடுகையில் பெரும் பாவத்தைச் செய்த தாவீதுக்கு ஏன் வித்தியாசமான நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டது? (2 சாமுவேல் 11:2-24; 12:1-14; அப்போஸ்தலர் 5:1-11) தாவீது ராஜாவின் பாவம் மாம்சப்பிரகாரமான பலவீனத்தினால் நிகழ்ந்தது. அவர் செய்தது அவருக்கு எடுத்து உணர்த்தப்பட்டபோது, மனந்திரும்பினார், யெகோவா அவரை மன்னித்தார்—இருந்தபோதிலும், தன்னுடைய பாவத்தின் விளைவுகளோடு வாழவேண்டியதாயிற்று. அனனியாவும் சப்பீராளும் பாவம் செய்தார்கள். எவ்வாறெனில் கிறிஸ்தவ சபையை ஏமாற்றும் முயற்சியில் மாய்மாலத்தோடு பொய் சொன்னார்கள். இவ்வாறு, ‘தேவனுடைய பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொன்னார்கள்.’ (அப்போஸ்தலர் 5:3, 4) அதுதானே துன்மார்க்க இருதயத்திற்கான அத்தாட்சியாக இருந்தது. ஆகவே அவர்கள் மிகக் கடுமையாக நியாயந்தீர்க்கப்பட்டார்கள்.—1/1, பக்கம் 27.
▫ யெகோவாவை சந்தோஷ இருதயத்தோடு சேவிக்க எது நமக்கு உதவக்கூடும்? நம்முடைய ஆசீர்வாதங்களையும், கடவுளால் கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களையும் பற்றிய உடன்பாடான மற்றும் போற்றுதலுள்ள நோக்குநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுவதன் மூலம் அவரைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை என்றுமே நாம் மறக்கக் கூடாது.—1/15, பக்கங்கள் 16, 17.
▫ நாம் திறம்பட்டமுறையில் உற்சாகமளிப்பதற்கு என்ன இரண்டு காரியங்களை மனதில் வைக்கவேண்டும்? முதலாவது, உற்சாகம் திட்டவட்டமானதொன்றாக இருப்பதற்கு என்ன சொல்வது என்பதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இரண்டாவது, பாராட்டுதலுக்குத் தகுதியுள்ள அல்லது கட்டியெழுப்பப்பட வேண்டிய நபரை அணுகுவதற்கு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருங்கள்.—1/15, பக்கம் 23.
▫ ‘திரள் கூட்டத்தார்’ ஏன் ‘தங்கள் கைகளில் குருத்தோலைகளை’ பிடித்துள்ளனர்? (வெளிப்படுத்துதல் 7:9) யெகோவாவின் ராஜ்யத்தையும் அவருடைய அபிஷேகம்செய்யப்பட்ட ராஜா இயேசு கிறிஸ்துவையும் ‘திரள் கூட்டத்தார்’ சந்தோஷத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர் என்பதைக் குருத்தோலைகளை அசைப்பது குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 23:39, 40-ஐக் காண்க.)—2/1, பக்கம் 17.
▫ யோபு புத்தகத்தில் என்ன மதிப்புள்ள பாடங்கள் காணப்படுகின்றன? யோபு புத்தகம் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்று காட்டுகிறது. சோதனைகளை எதிர்ப்படும் ஒருவருக்கு எவ்விதமாகப் புத்தி—சொல்லவேண்டும்—சொல்லக்கூடாது என்பதன் குறிப்பிடத்தக்க உதாரணங்களை அது அளிக்கிறது. மேலுமாக, இக்கட்டான சூழ்நிலைமைகளில் போராடிக்கொண்டிருக்கிறதாக நம்மைநாமே காண்கையில் சமநிலையான முறையில் செயல்படுவதற்கு யோபுவின் சொந்த அனுபவம் நமக்கு உதவிசெய்யக்கூடும்.—2/15, பக்கம் 27.
▫ இயேசுவின் அற்புதங்கள் நமக்கு என்ன கற்பிக்கின்றன? இயேசுவின் அற்புதங்கள் கடவுளை மகிமைப்படுத்தின, தேவனை மகிமைப்படுத்தும்படி கிறிஸ்தவர்களுக்கு அவை ஒரு மாதிரியை வைத்தன. (ரோமர் 15:5) அவை நன்மையானதை செய்யவும் தாராளத்தன்மையைக் காண்பிக்கவும் இரக்கத்தை வெளிக்காட்டவும் உற்சாகப்படுத்துகின்றன.—3/1, பக்கம் 8.
▫ புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கும் நபர்களோடு தயாரிக்கப்பட்ட கேள்விகளை மூப்பர்கள் மறுபார்வை செய்தல் என்ன நோக்கத்தைச் சேவிக்கிறது? முழுக்காட்டப்படுகிற ஒவ்வொருவரும் பைபிளின் அடிப்படை சத்தியங்களை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறாரா என்பதையும் யெகோவாவுக்குச் சாட்சியாய் இருப்பதில் உட்பட்டிருப்பதைக் குறித்து அறிந்திருக்கிறாரா என்பதையும் இது உறுதி செய்கிறது.—3/1, பக்கம் 13.
▫ வேதப்பூர்வ ஜெபங்கள் எவ்வாறு நமக்கு பலனளிக்கக்கூடும்? வேதப்பூர்வ ஜெபங்களை ஆராயும்போது, நமக்குள்ள அதே சூழ்நிலைமைகளின்கீழ் சொல்லப்பட்டவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஜெபங்களைக் கண்டுபிடிப்பது, வாசிப்பது, தியானிப்பது போன்றவை, கடவுளுடன் உள்ள நம்முடைய சொந்த பேச்சுத்தொடர்பை மெருகேற்ற உதவிசெய்யும்.—3/15, பக்கம் 3, 4.
▫ தேவ பயம் என்றால் என்ன? தேவ பயமானது யெகோவாவிடத்தில் காண்பிக்கப்படும் மரியாதையோடு கூடிய அச்சம், ஆழ்ந்த பயபக்தி, அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் ஆகும். (சங்கீதம் 89:7)—3/15, பக்கம் 10.
▫ நாம் கடவுளுடைய பார்வையில் அருமையானவர்கள் என்பதை, என்ன மூன்று வழிகளில் பைபிள் காண்பிக்கிறது? கடவுளுடைய பார்வையில் நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை பைபிள் போதிக்கிறது. (லூக்கா 12:6, 7); அது யெகோவா நம்மில் எதை மதிப்பாகக் கருதுகிறார் என்பதைத் தெளிவாக்குகிறது. (மல்கியா 3:16); நம்மீது உள்ள அன்பை நிரூபித்துக் காட்ட யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடுகிறது. (யோவான் 3:16)—4/1, பக்கங்கள் 11, 12, 14.
▫ எபிரெயர் 10:24, 25, கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வரவேண்டும் என்னும் கட்டளையைவிட அதிகத்தை ஏன் குறிக்கிறது? பவுல் கூறிய இந்த வார்த்தைகள் அனைத்து கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் உண்மையில் கிறிஸ்தவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டுறவுகொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிக்குங்கூட—கடவுளால் ஏவப்பட்ட தராதரத்தை அளிக்கின்றன.—4/1, பக்கம் 16.