உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 4/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • இதே தகவல்
  • உவில்லியம் விஸ்டன்—முரண் கோட்பாட்டாளரா நேர்மையான அறிஞரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • கனிகள்—நல்லதும் கெட்டதும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • விண்ணேற்பு___கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொள்கையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 4/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர இதழ்களைப் படித்து அனுபவித்தீர்களா? அப்படியானால் பின்வருபவற்றை நினைவுபடுத்திப்பார்க்க ஆர்வமுள்ளவர்களாய் இருப்பீர்கள்:

▫இஸ்ரவேல வேவுகாரர்கள் ஒரு வேசியாகிய ராகாபின் வீட்டில் தங்குவதை ஏன் தெரிந்துகொண்டனர்?

இஸ்ரவேல வேவுகாரர்கள் கடவுளுடைய சட்டத்தின்படி வாழ்ந்தனர்; ஆகவே அவர்கள் ஒழுக்கக்கேடான காரணங்களுக்காக ராகாபின் வீட்டில் தங்கவில்லை. ஒரு வேசியின் வீட்டில் இருந்ததால், பட்டணத்தில் சந்தேகத்திற்குக் குறைந்தளவு சாத்தியம் எழுப்பப்படும் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். பட்டணத்து மதிலில் அவளுடைய வீடு கட்டப்பட்டிருந்தது தப்பிச்செல்வதை எளிதாக்கக்கூடும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரவேலருடன் கடவுளுடைய செயல்தொடர்புகளின் அறிக்கைகளால் அவள் மனந்திரும்பி தன் வழிகளை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு அவ்வளவு சாதகமாகப் பாதிக்கப்பட்டிருந்த இருதயத்தை உடைய ஒரு பாவியிடம் யெகோவா அவர்களை வழிநடத்தினார்.—12/15, பக்கங்கள் 24-5.

▫கோபம் எப்படி நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது?

கோபம் மன இறுக்க இயக்குநீர்களை சுரக்கச்செய்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வழக்கமான கோப வெளிக்காட்டுகள், கொழுப்பினியின் பாதுகாப்பூட்டும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வடிவங்களின் மத்தியில் சமமற்ற நிலையை உண்டாக்கி, நம்மை இதய இரத்தவோட்ட நோயின் அபாயத்தில் வைக்கின்றன.—12/15, பக்கம் 32.

▫காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இதழ்களை நாம் அதிகப்படியாக விநியோகிப்பதற்கு என்ன ஆலோசனைகள் உதவும்?

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! உணர்வுடையோராக இருங்கள்; பிரசங்கத்தை எளிமையாக வையுங்கள்; ஒருசில சிறிய பிரசங்கங்களைத் தயாரிப்பதன்மூலம் வளைந்துகொடுப்போராய் இருங்கள்; ஒரு தனிப்பட்ட இலக்கை வையுங்கள்.—1/1, பக்கங்கள் 24-5.

▫நாம் பின்பற்றத்தக்க அவ்வளவு சிறந்த தேவாட்சிக்குரிய முன்மாதிரியாக ஏன் மோசே இருக்கிறார்?

மோசே, காரியங்களில் யெகோவாவின் வழிநடத்துதலை நாடினார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட இலட்சியங்களும் இருக்கவில்லை; ஆனால் அவர் யெகோவாவின் மகிமையைக் குறித்து அக்கறை கொண்டிருந்தார். அவருக்குப் பலமான விசுவாசம் இருந்தது; மேலும், இஸ்ரவேல் தேசத்தின் நிஜமான ஆட்சியாளர் யெகோவா என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.—1/15, பக்கம் 11.

▫என்ன சில வழிகளில் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது?

யெகோவாவின் மக்களுக்கு சத்தியத்தைப் பற்றிய ஒரு படிப்படியானப் புரிந்துகொள்ளுதலை அளிப்பதன்மூலம் தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது. அது மக்களை ஆவிக்குரிய ஒளியினிடத்திற்குள் கொண்டுவந்து, கடவுளை எப்படி “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வது என்று சாந்தகுணமுள்ளவர்களுக்குக் காண்பிக்கிறது. (யோவான் 4:24) தெய்வீக போதனை சோதனைகள்மீதும் இந்தப் பொல்லாத உலகின்மீதும்கூட வெற்றிசிறக்கிறது.—2/1, பக்கங்கள் 10-12.

▫வெற்றிகரமான ஆலோசனை கொடுத்தலுக்குத் திறவுகோல் என்ன?

மற்ற நபருக்கும், அவர் ஒரு மதிப்பான முறையில் நடத்தப்படவேண்டிய அவருடைய உரிமைக்கும் சரியான மரியாதையே திறவுகோலாக இருக்கிறது. ஆகவே, ஒரு கிறிஸ்தவ ஆலோசகர் தயவும் உறுதியும் உள்ளவராக, ஆனால் ஆலோசனை பெறுபவரை மதிப்பால் உடுத்துவிப்பவராக இருக்கவேண்டும்.—2/1, பக்கம் 28.

▫மரியாளின் விண்ணேற்பை ரோமன் கத்தோலிக்க சர்ச் எவ்வாறு ஒரு கோட்பாடாக ஏற்கத் துவங்கிற்று?

இயேசுவின் மரணத்திற்குப் பின் முதல் நூற்றாண்டுகளில், பரலோகத்திற்கு மரியாளின் விண்ணேற்பு என்ற கருத்து கிறிஸ்தவர்களின் எண்ணத்திற்கு முற்றிலும் அறியப்படாததாய் இருந்தது. ஆயினும், திரித்துவப் போதனை அதிகாரப்பூர்வமான சர்ச் கோட்பாடாக ஆனபிறகு, மரியாளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாகம் கொடுக்கப்பட்டது. விண்ணேற்பு கோட்பாடு, போப் பயஸ் XII-ல் நவம்பர் 1, 1950-ல் இவ்வாறு அறிவிக்கப்படும்வரை கொள்கையாக ஏற்கப்படவில்லை: “கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொள்கை என்று நாங்கள் வரையறுக்கிறோம்.”—ம்யூனிஃபிகென்டிஸ்யிமுஸ் டேயுஸ்.—2/15, பக்கங்கள் 26-7.

▫எரேமியா 24-ம் அதிகாரத்தில், நல்ல அத்திப்பழங்களையும் கெட்ட அத்திப்பழங்களையும் உடைய இரண்டு கூடைகள் எதைப் பிரதிநிதித்துவம் செய்தன?

முதலில் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டு, அவர்களிலிருந்து யூதாவுக்கு திரும்பி வந்த மீதிப்பேரை அந்த நல்ல அத்திப்பழங்கள் பிரதிநிதித்துவம் செய்தன. அந்தக் கெட்ட அத்திப்பழங்கள், கடவுளுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபோதிலும் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாக கலகஞ்செய்த அரசனாகிய சிதேக்கியாவையும் அவரோடிருந்தவர்களையும் குறித்தன. இதற்கு ஒப்பாக, நவீன நாட்களில், ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதிபேரைக் காண்கிறோம்; இவர்கள் அழுகிப்போன கனிகளைக் கொடுத்திருக்கிற கிறிஸ்தவமண்டல மதகுருமாருக்கு மாறாக, தங்களுடைய வாழ்க்கையில் நல்ல கனிகளைக் கொடுத்திருக்கின்றனர்.—3/1, பக்கங்கள் 14-16.

▫குவார்டோடெசமன்கள் யார், அவர்கள் ஏன் இன்று கிறிஸ்தவர்களின் ஆர்வத்திற்குரியவர்களாய் இருக்கிறார்கள்?

அப்போஸ்தலரின் நாட்களுக்குப்பின், அப்போஸ்தல மாதிரியைப் பின்பற்றி, கர்த்தருடைய இராப்போஜனத்தை ஒவ்வொரு வருடமும் நிசான் 14 அன்று அனுசரித்த சிலர் இருந்தனர். அவர்கள் “பதினான்கவர்கள்,” அல்லது குவார்டோடெசமன்கள் என்று அழைக்கப்படலாயினர். இது இன்று ஆர்வத்திற்குரியதாய் இருக்கிறது, ஏனென்றால், அப்போஸ்தலர் மரித்த பின்னும், இயேசுவின் மரணத்தை வருடத்திற்கு ஒருமுறை, நிசான் 14 அன்று நினைவுகூர்ந்த சரியான வழியைப் பற்றிக்கொண்டிருந்த சிலர் இருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது.—3/15, பக்கங்கள் 4-5.

▫உவில்லியம் விஸ்டன் யார்?

அவர் 18-ம் நூற்றாண்டின், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவுமிக்க ஓர் அறிஞரும், சர் ஐசக் நியூட்டனின் ஒரு நெருங்கிய கூட்டாளியும் ஆவார். விஸ்டன் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களை மொழிபெயர்த்தார், திரித்துவ கோட்பாட்டை வெளிப்படையாக எதிர்த்தார், மேலும் வான நூல் மற்றும் கணிதத்தின் விரிவுரையாளராக இருந்தார். ஆனால், யூத சரித்திராசிரியரான ஃப்ளேவியஸ் ஜொஸீஃபஸுடைய இலக்கிய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக அவர் பெரும்பாலும் நினைவுகூரப்படுகிறார்.—3/15, பக்கங்கள் 26-8.

▫மனிதன் எப்படி கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டான்? (ஆதியாகமம் 1:27)

கடவுளுடைய மேலோங்கி நிற்கும் குணங்களாகிய அன்பு, நீதி, ஞானம், வல்லமையையும்—இன்னும் மற்ற குணங்களையும்—அப்பியாசிக்கும் திறமையோடு மனிதன் உண்டாக்கப்பட்டான்.—4/1, பக்கம் 25.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்