“சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகளுக்கு நல்வரவு!
சுயாதீனம்! அந்தச் சொல் செவிக்கு என்னே ஓர் இன்பம்! எவருமே அடிமைத்தனத்தில் அல்லது சிறையிருப்பில் இருப்பதை அனுபவித்து மகிழ்வதில்லை. அண்மை ஆண்டுகள் நினைவில் இருக்கும் மற்ற எந்தக் காரியத்திலுமிருந்ததைவிட எதிர்பார்ப்பிலிருந்த அரசியல் சுயாதீனத்திடமாகக் கூடுதல் முன்னேற்றத்தைக் கண்டன.
என்றபோதிலும், அரசியல் சுயாதீனம் விரும்பப்படுவது போன்று அதைவிட மிக முக்கியமானதும் மிகுதியாக விரும்பப்படுவதுமான ஒரு சுயாதீனம் உண்டு. அது கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் பேசிய சுயாதீனமாகும். அவர் சொன்னார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32) இது பொய் மத நம்பிக்கைகளிலிருந்து விடுதலை, மனித பயத்திலிருந்து விடுதலை, பாவ காரியங்களுக்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்தும் அதைவிட அதிகத்திலிருந்தும் விடுதலை.
இந்த விடுதலைதான் யெகோவாவின் சாட்சிகளால் உலகமுழுவதும் நடத்தப்படவிருக்கும், 1991-ன் பிற்பகுதியில் ஆரம்பிக்கும், “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகளின் பொருளாயிருக்கிறது. கடவுளுடைய மக்களில் காரியங்களை முன்நின்று வழிநடத்திவந்தவர்கள் மீதிருந்த அரசாங்கத் தடைகள் நீக்கப்பட்ட 1919-ம் வருடம் முதல், தங்களுடைய தூய வணக்கத்தைப் பொருத்ததில் அவர்கள் கூடுதல் சுயாதீனத்தை அனுபவித்துவருகின்றனர்.
கடந்த வருடங்களிலே சுயாதீனம் என்ற பொருள் தேவராஜ்ய மாநாடுகளில் “‘சுயாதீன தேசம்’ தேவராஜ்ய மாநாடு” மற்றும் “‘கடவுளுடைய சுயாதீனப் பிள்ளைகள்’ மாவட்ட மாநாடுகள்” போன்ற பொருள்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமே. “சத்தியம் உங்களை விடுவிக்கும்” (“The Truth Shall Make You Free” மற்றும் “நித்திய ஜீவன்—கடவுளுடைய குமாரர்களின் சுயாதீனத்தில்” (Life Everlasting—In Freedom of the Sons of God) போன்ற பிரசுரங்களில் சுயாதீனம் விவரமாக சிந்திக்கப்பட்டிருக்கிறது.
கடவுளுடைய ஊழியர்கள் கடவுளிடமிருந்து பெற்றிருக்கும் சுயாதீனம் அவர்களுடைய சொந்த நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் மட்டும் அல்ல. கலாத்தியர் 5:13-ல் நாம் வாசிக்கிறோம்: “சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்துக்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.” “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடு நம்முடைய சுயாதீனத்தின் நோக்கத்தைப் போற்றுவதற்கும், நம்முடைய விலைமதிக்கமுடியாத சுயாதீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும், அதை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கும் நமக்கு உதவும்.
மாநாடு வெள்ளிக்கிழமை காலை 10:20-க்கு ஓர் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். இது பின்தொடரும் ஆவிக்குரிய உணவுக்கு நம்மைச் சரியான மனப்பக்குவத்தில் அமைத்திடும். முதல் நாள் பொருள் யோவான் 8:32-ஐ சார்ந்தது: “நம்மை விடுவிக்கும் சத்தியத்தை அறிந்துகொள்ளுதல்.” முற்பகல் நிகழ்ச்சியில் அக்ராசினரின் வரவேற்புக் குறிப்புகளும், “கடவுள் கொடுத்திருக்கும் சுயாதீனத்தின் நோக்கமும் பயனும்,” என்ற முக்கிய பேச்சும் இடம் பெறும். இந்தப் பேச்சு யெகோவாவின் முழுமையான சுயாதீனத்திற்கும் கடவுள் நமக்கு அளிக்கும் சம்பந்தப்பட்ட சுயாதீனத்திற்குமுள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கும். அந்தப் பேச்சு நமக்கு இருக்கும் சுயாதீனத்தை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கும் நம்மை உற்சாகப்படுத்தும். பிற்பகல் நிகழ்ச்சி நம்முடைய சுயாதீனத்தின் பல்வேறு அம்சங்களையும் நம்முடைய ஊழியத்தையும் குறித்து சிந்திப்பதோடு “உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்க விடுவிக்கப்பட்டிருத்தல்” என்ற ஒரு நாடகத்துடன் நிறைவுபெறும்.
இரண்டாவது நாளின் பொருள் கலாத்தியர் 5:1-ஐ சார்ந்தது: “கடவுள் அளித்திருக்கும் சுயாதீனத்தில் உறுதியாய் நிலைத்திருத்தல்.” காலை நிகழ்ச்சி, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நபர்கள் கடவுள் அளித்திருக்கும் சுயாதீனத்தை எவ்விதம் குடும்ப வட்டாரத்தில் அனுபவிக்கலாம் என்பதை எடுத்துக்காண்பிக்கும் ஒரு தொடர் பேச்சைக் கொண்டிருக்கும். முழுக்காட்டுதல் பெறுவதற்கு ஆயத்தமாயிருப்பவர்கள் ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் மூலம் எவ்வாறு சுயாதீனம் கிடைக்கப்பெறுகிறது என்பது குறித்து கூறப்படும் குறிப்புகளை விசேஷமாய் போற்றுவார்கள். பிற்பகல் நிகழ்ச்சியில் விவாகம் மகிழ்ச்சிக்குத் திறவுகோலா, இல்லையா என்பதன்பேரில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கலந்தாலோசிப்பு இருக்கும். சுயாதீனத்தின் வித்தியாசமான அம்சங்களின் பேரிலும் ஒரு தொடர் பேச்சு இருக்கும். தொடர்ந்து சுயாதீனத்தையும் நித்திய ஜீவனையும் அளிப்பதற்குக் கடவுளுடைய பிரதான பிரதிநிதியினிடமாகக் கவனத்தை ஒருமுகப்படுத்தும் ஒரு முடிவு பேச்சு இருக்கும்.
“கடவுளுடைய ஆவிக்கு இசைவாக நம்முடைய சுயாதீனத்தைப் பயன்படுத்துதல்,” என்ற 2 கொரிந்தியர் 3:17-ன் அடிப்படையிலான பொருளை ஞாயிற்றுக்கிழமை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்தேயு 13:47–50-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசு சொன்ன உவமையின் பேரில் யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் மனிதரைப் பிடிப்பவர்களாய் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் மிகுந்த அக்கறை தூண்டும் ஒரு தொடர் பேச்சைக் கொண்டிருக்கும். பிற்பகல் பொதுப்பேச்சு: “கடவுளுடைய சுயாதீனப் புதிய உலகத்தை வாழ்த்துதல்!” இது ஒரு மாவட்ட மாநாட்டிற்கு புதிய அம்சமாயிருக்கும் ஒரு நிகழ்ச்சியால் தொடரும்: அந்த வாரத்திற்குரிய காவற்கோபுரம் பாடத்தின் ஒரு சுருக்கம். கடவுள் அளித்திருக்கும் சுயாதீனத்தை நம்முடைய நடத்தையிலும் நம்முடைய ஊழியத்திலும் நன்கு பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னேறும்படியாக நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வேதப்பூர்வமான அறிவுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெறும்.
சுயாதீனப் பிரியர் அனைவருக்கும் தாவீதின் வார்த்தைகளில் நாங்கள் சொல்வதாவது: “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.” (சங்கீதம் 34:8) இந்த மாநாட்டிற்கு வருவதற்காக தேவைப்படும் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்துவிடுங்கள். வெள்ளிக்கிழமை காலை ஆரம்ப நிகழ்ச்சி முதல் ஞாயிறு பிற்பகல் நிகழ்ச்சி முடிய அங்கு இருப்பதே உங்கள் வேலையாக இருக்கட்டும். நீங்கள் ஓர் ஆரோக்கியமான ஆவிக்குரிய பசியோடு, உங்கள் ஆவிக்குரிய தேவையில் முழு உணர்வுடையவர்களாக வருவீர்களானால், நீங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்கள்! (மத்தேயு 5:3) “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்,” என்ற நியமத்தை நாம் நிராகரித்து விடவேண்டாம். நாம் மாநாட்டிற்கு வர எந்தளவுக்கு உள்ளார்ந்த ஆயத்தங்களைச் செய்கிறோம், நிகழ்ச்சிநிரல் அளிக்கப்படுகையில் எந்தளவுக்கு ஊக்கமாக செவிசாய்க்கிறோம் மற்றும் நம்முடைய “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடு சம்பந்தமாக நமக்குத் திறக்கப்பட்டிருக்கும் வாலண்டியர் சேவை சிலாக்கியத்தை எந்தளவுக்கு உற்சாகமாய் ஏற்றுச்செய்கிறோம் என்ற காரியத்திற்கும் இது பொருந்தும்.—2 கொரிந்தியர் 9:6. (w91 5/1)