மதிப்பிடற்கரிய பொக்கிஷங்களை நீங்கள் காணமுடியும்!
“எதையாவது உங்களால் பார்க்க முடிகிறதா?” என்று ஆங்கில செல்வந்தர் ஒருவர் கேட்டார். “ஆம், ஆச்சரியகரமான காரியங்களைப் பார்க்க முடிகிறது,” என்று விடையளித்தார் எகிப்து ஆராய்ச்சியாளர். அந்த ஆண்டு 1922 ஆக இருந்தது. எகிப்தின் ராஜாக்கள் பள்ளத்தாக்கிலுள்ள ரூடன்காமென் பார்வோனின் கல்லறையை ஹோவார்ட் கார்டர் அப்பொழுதுதான் எட்டிப் பார்த்தார். கார்டரின் வார்த்தைகளில் கிளர்ச்சி ஊடுருவிப் பரவியிருக்கிறது:
“என்னுடைய கண்கள் வெளிச்சத்திற்குப் பழகினப் போனபோது, அந்த அறைக்குள்ளிருந்த விபரங்கள் மங்கலாக இருந்து, சிறிது சிறிதாக தோன்றலாயிற்று—அதிசயமான மிருகங்கள், சிலைகள், தங்கம்—எங்கும் தங்கத்தின் பிரகாசம் இருந்தது. அந்தச் சமயத்தில்—அருகிலிருந்த மற்றவர்களுக்கு அது ஓர் எல்லையற்ற காலமாகத் தோன்றியிருக்கலாம். ஆச்சரியத்தில் நான் ஊமையைப் போலானேன் . . . இதைப் போன்று எதையும் நாங்கள் கனவில்கூட கண்டதில்லை. ஒரு முழு அறை நிறைய பொருட்கள்—ஒரு தொல்பொருள் கூடம் நிறைய இருப்பதுபோல் அது தோன்றியது.” “பொக்கிஷத்தைத் தேடுபவரின் வலிந்துகொள்ளப்பட்ட எதிர்பார்ப்பு” என்று கார்டர் ஒப்புக்கொள்பவராக உணர்ந்தார்.
அந்தக் கண்டுபிடிப்பு 3,000 ஆண்டுகளுக்கு முன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நம்பமுடியாத பொக்கிஷங்களை வெளியே கொண்டுவந்தது. ஆனால் கடவுள், நாம் இதைவிட அதிக மேன்மையான பொக்கிஷ வேட்டையில் ஈடுபட விரும்புகிறார். அது இரத்தினக் கற்கள், தங்கம் அல்லது வெள்ளி போன்றவைகளைத் தேடுவதைக் காட்டிலும் மிக அதிக கைமாறு செய்யக்கூடிய ஒரு தேடுதலாக இருக்கிறது. இந்தப் பொக்கிஷ வேட்டை தெய்வீக ஞானத்திற்கான ஒன்று. அதன் மிக விலையேறப்பெற்ற பொருட்களில் ஒன்று நித்திய வாழ்வு.—யோவான் 17:3.
முயற்சி தேவை
ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி இடத்தைத் தோண்டுவதற்குப் பெரும் முயற்சி தேவையாக இருக்கிறது. காட்டு நிலப்பரப்பைத் தோண்டுவது, அல்லது ஆபத்தான தண்ணீருக்குள் இறங்கி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல்களை அல்லது மூழ்கவைத்திருக்கும் பொக்கிஷத்தைத் தேடுவது சுலபமானதல்ல. ஆனால் ஆவலுள்ள பொக்கிஷம் தேடுபவர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளை மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி கடினமான கஷ்டங்களை சகித்துக்கொள்ளுகிறார்கள், மேற்கொள்ள முடியாததாகத் தோன்றும் தடைகளை மேற்கொள்ளுகிறார்கள். சரி, தெய்வீக ஞானத்தைத் தேடுவதற்கு அதைவிட அதிகமான முயற்சி தகுதியானதாக இல்லையா?
பைபிளையும், அதிலுள்ள ஞானத்தின் இரத்தினக் கற்களைக் கண்டுபிடிக்க நமக்கு உதவுவதற்காக திட்டமிடப்பட்டிருக்கும் உண்மையான கிறிஸ்தவ வெளியீடுகளையும் படிப்பதற்குத் தேவையான முயற்சியை நாம் செலுத்தினோமாகில் நாம் விலைமதிப்பிட முடியாத பொக்கிஷங்களைக் காணமுடியும். தொடர்ச்சியான முயற்சி மிக முக்கியம். உலகப்பிரகாரமான பொக்கிஷங்களுக்காக நாம் தோண்டத் துவங்கி வெறுமனே மேற்பகுதியை மட்டும் சுரண்டிவிட்டு, பிறகு நிறுத்திவிடுவதினால் நாம் செல்வந்தர்களாக ஆகியிருக்க முடியாது. நாம் ஆவிக்குரிய பொக்கிஷங்களுக்காகத் தோண்டத் துவங்கி, அதைத் தொடருவது மிகவும் களைப்படையச் செய்கிறது என்று நாம் நினைத்து அதை சீக்கிரம் விட்டுவிடுவது அதைப்போன்று உண்மையாகவே இருக்கும். “பரத்திலிருந்து வருகிற ஞானத்தைப்” பெறுவதற்காகத் தங்களை யார் தீவிரமாக ஈடுபடுத்துகிறார்களோ அவர்களுக்கே அது உரியது. (யாக்கோபு 3:17) தெய்வீக ஞானமாகிய அந்த விலையேறப்பெற்ற பொக்கிஷங்களைக் கண்டடைவதற்குத் தேவையான முயற்சிகளை நீங்கள் செய்ய மாட்டீர்களா? (w89 3⁄15)