உண்மையான நண்பர்களை நீங்கள் எவ்விதமாக உண்டு பண்ணக்கூடும்
“ஒரு நண்பனை அடைய ஒரே வழி ஒரு நண்பனாக இருத்தலே” என்று எழுதினார் அமெரிக்க கவி எமர்ஸன். நட்பு என்பது கொடுத்தலின் ஆவியை உட்படுத்தும் இருவழிப் பாதையாக இருக்கிறது. தங்களின் மீது மட்டுமே அக்கறையுடையவர்களும் சுயநல மனசாய்வுடையவர்களும் நண்பர்களை உண்டுபண்ணுவது கடினமாக இருப்பதைக் காண்கிறார்கள். என்றபோதிலும் நாம் பார்க்கப் போகிறவிதமாக அவர்கள் இதில் வெற்றி பெறமுடியும்.
உண்மையான நட்பு அன்பிலிருந்து வளருகிறது. ஏனென்றால் அன்பு ஆட்களை நெருங்கிவரச் செய்கிறது. என்றபோதிலும் நண்பர்களை உண்டுபண்ணுவது சிலருக்குக் கடினமாக இருக்கிறது. ஒரு நபர் இதை எவ்விதமாக மேற்கொள்ளலாம்?
“பிறர் பேசுவதைக் கூர்ந்து கேட்கும் பழக்கமுடையவராயிருங்கள். மற்றவர்கள், தங்களைப் பற்றிப் பேசும்படியாக உற்சாகப்படுத்துங்கள்” என்றார் டேல் கார்னி. முன்பின் அறிமுகமாகாதவர்கள், ஒருவேளை ஒரு சமூக கூட்டத்தில் சந்தித்துக் கொள்ளும்போது நண்பர்களை உண்டுபண்ணுவது யார்? அதிகம் பேசுகிறவர்கள் அல்ல, ஆனால் மற்றவர்களில் அனலான அக்கறையைக் காண்பித்து அவர்களைப் பேசவைத்து அவர்கள் பேசுவதை உண்மையில் கவனித்துக் கேட்பவர்களே. புதிதாக அறிமுகமாகிறவர்களின் பெயர்களையும் அவர்களைப் பற்றிய சுவாரசியமான உண்மைகளையும் நினைவில் வைத்திருப்பதும்கூட நட்பை வளர்க்க உதவி செய்கிறது.
தனி மனிதருக்கிடையே பேச்சுத் தொடர்புக்குரிய அடிப்படை விதிகளில் கிம் ஜிஃபினும் பாபி R. பேட்டனும் தங்களை வெளிப்படுத்துவதையும், நேர்மையாக இருத்தலையும் சிபாரிசு செய்கிறார்கள். “ஒருவன் உங்களுக்கு முக்கியமானவராக இருப்பதற்கு அவன்/அவளைப்பற்றி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் ஏதோ ஒன்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எல்லா சமயங்களிலும் கள்ளங்கபடமில்லாமலும் ஒளிவுமறைவின்றியும் இருங்கள் . . . அடுத்தவருக்கு நீங்கள் கொடுக்கும் பதில்கள் உண்மையானதாக இருக்க வேண்டும்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
உண்மை நண்பர்கள் நேர்மையாக இருப்பது மட்டுமல்லாமல், கரிசனையுள்ளவர்களாயும், ஒருபோதும் ஏமாற்றாதவர்களாயும் மிதமிஞ்சி உடைமை பாராட்டாதவர்களாகயும் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறவர்களாய், காரியங்களைப் பற்றி மற்றவரின் நோக்குநிலையை உணர்ந்தவர்களாய் இப்படியாக, அவரிடத்தில் தன்னை வைத்துப்பார்க்க முடிகிறவர்களாக இருக்கிறார்கள். உறவு வளரும்போது அவர்கள் ஒருவரிடமாக ஒருவர் தங்கள் இதயங்களைத் திறந்து காட்டி, உண்மையான நண்பர்களாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்களாகவும் ஆகிறார்கள். உண்மை நண்பர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை. பூமியில் இதுவரை வாழ்ந்தவர்களில் அதிகமான சிநேக உணர்வுள்ள நபராக இருந்த இயேசு கிறிஸ்துவுக்கு அநேக நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் ஒருசிலரே உண்மையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.—மாற்கு 9:1-10; லூக்கா 8:51.
உண்மையான நட்பின் ஒரு புத்தகம்
நட்பு என்ற விஷயத்தின் பேரில் மிகச் சிறந்த புத்தகமாக இருக்கும் பைபிள் சொல்வதாவது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதி. 17:17) உண்மை நண்பர்கள் இரக்கமுள்ளவர்களாகப், பிரச்னைகள் எழும்போது உதவிசெய்ய மனமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலரின் நாட்களில் நடந்த சம்பவம் இதற்கு ஒரு நேர்த்தியான உதாரணமாக இருக்கிறது.
பஞ்சத்தின் காரணமாக யூதாவிலுள்ள ஒரு மனிதன் தன்னுடைய மனைவியான நகோமியோடு மோவாப் தேசத்திலே போய் வாழ்ந்தான். பின்னர் அவன் அங்கு மரித்துப்போனான். பின்னால் அவனுடைய இரண்டு குமாரர்களும் மோவாபிய பெண்களாகிய ஓர்பாளையும் ரூத்தையும் விவாகம் பண்ணிக் கொண்டார்கள். மகன்களும் மரித்துப் போனார்கள். மூன்று விதவைகளும் தனிமையாக விடப்பட்டார்கள். நகோமி யூதா தேசத்துக்குத் திரும்பி வர தீர்மானித்தாள். அவளுடைய இரண்டு மருமக்களும் அவளோடே புறப்பட்டார்கள். என்றபோதிலும் வழியில் நடந்து வருகையில், நகோமி அந்த இளம் பெண்களைத் திரும்பி போகவும் அவர்களுடைய ஜனங்களிலிருந்து புதிய புருஷன்மாரைத் தேடிக்கொள்ளும்படியாகவும் துரிதப்படுத்தினாள். ஓர்பாள் போய்விட்டாள். ஆனால் ரூத் நகோமியை விடாமல் பற்றிக்கொண்டு அவளோடு செல்வதில் பிடிவாதமாக இருந்தாள். ஏன்? ஏனென்றால், அவள் மருமகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தாள். அவள் உண்மையான சிநேகிதியாகவும்கூட இருந்தாள். ஒரு காரியமானது குடும்பத்தை இழந்த வயதான ஒரு விதவையைத் தனிமையில் அனுப்பிவிட அவளுடைய இரக்கமான குணம் அவளை அனுமதிக்கவில்லை.—ரூத் 1:1-17.
ரூத் உண்மையாக பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் தன்மையையும் தயவையும் பற்றுறுதியையும் அன்பையும் காண்பித்தாள். இந்த குணங்களே உண்மையான நட்புக்கு உறுதியான ஆதாரமாக இருக்கின்றன. என்றபோதிலும் நகோமியோடு ரூத்தினுடைய உறவில் வேறு ஒரு காரணமும்கூட உட்பட்டிருந்தது.
உயர்மட்ட நிலையில் நட்பு
நகோமி ரூத்தைத் திரும்பிப் போகும்படியாகச் சொன்னபோது, ரூத் பின்வருமாறு சொன்னாள்: “உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன் . . . உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) ஒரு சமயம் புறமதத்திலிருந்த ரூத்துக்கு, உண்மையான தேவனாகிய யெகோவாவை அறிந்துக்கொள்ளவும் அவரை நேசிக்கவும் நகோமி உதவி செய்திருந்தாள். அவர்களுக்குப் பொதுவாயிருந்த நம்பிக்கை, ஒரு பலமுள்ள ஆவிக்குரிய பிணைப்பாக இருந்து உண்மையான நண்பர்களாக இரண்டு பெண்களையும் நெருங்கிவரச் செய்தது. ஒரு புதிய குடும்பத்தினால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். காலப்போக்கில், ரூத் யூதாவில் ஒரு பணக்கார நிலக்கிழராய் இருந்த போவாஸை விவாகம் செய்துகொண்டு அவன் மூலமாக ஓபேத் என்ற குமாரனைப் பெற்றாள். இவன் தாவீது ராஜாவின் பாட்டனாவான்.—ரூத் 4:13-22; மத்.1:5, 6.
இந்த ஆவிக்குரிய காரணக்கூறு நட்பை ஒரு உயர்மட்ட நிலையில் வைக்கிறது. எவ்விதமாக? ரூத் மற்றும் நகோமியின் விஷயத்தில், இருவருமே, “இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுமுள்ள” யெகோவாவை வணங்குகிறவர்களாக இருந்தார்கள். (யாத். 34:6) “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” நாம் உண்மையில் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வோமேயானால், அவரிடமாகவும் உடன் சிருஷ்டிகளிடமாகவும் அன்பில் வளருவது நிச்சயமாம். (1 யோவான் 4:8; யோவான் 4:24) இவ்விதமாக நாம் மாறுகிறோம். மற்றவர்களில், விசேஷமாக எல்லா இனத்திலும், மனத்தாழ்மையுள்ள துயரத்திலுள்ள ஆட்களில் கனிவான ஒரு அக்கறையை வளர்த்துக் கொள்கிறோம். தன்னில்தானே அதிக ஈடுபாடு கொண்டவர், குறைந்த அளவு தன்னலம் கருதுகின்றவராகிறார். சுயநலமிக்க ஆட்கள் மற்றவர்களிடமாக அக்கறையை வளர்த்துக் கொள்கிறார்கள். நாம் கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கிறோம்—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.”—கலா. 5:22, 23.
இந்தக் குணங்கள், மற்றவர்களின் பலவீனங்களையும் தவறுகளையும் மன்னிப்பதற்கு இன்றியமையாத திறமையை வளர்த்துக்கொள்வதற்கு நமக்கு உதவி செய்கிறது—இயேசு சொன்னவிதமாக, “ஏழு தர மாத்திரம் அல்ல, ஏழெழுபது தர மட்டும்” அவ்விதமாகச் செய்ய நமக்கு உதவி செய்கிறது. அநேக நட்புகள் இந்தக் குறிப்பின் பேரில் முறிந்துவிடுகின்றன. ஆனால் இயேசு கிறிஸ்து இதைப் பிரசங்கிக்கவும் செய்தார். இதன்படியும் அவர் செய்தார். பேதுரு ஆண்டவரை வெட்கங்கெட்ட முறையில் மறுதலித்தது உட்பட, தம்முடைய அபூரணமான தவறு செய்யும் இயல்புள்ள சீஷர்களை அவர்களுடைய தவறுகளுக்காக எவ்வளவு அடிக்கடி மன்னித்தார்!—மத். 26:69-75.
இந்த எல்லா ஆவிக்குரிய வளர்ச்சியின் விளைவாகவும், நம்முடைய நண்பர்களின் வட்டம் பெரிதாகிறது. கடைசியாக ஒரு மிகப் பெரிய உலகந்தழுவிய நண்பர்களின் குடும்பத்தில் நாம் இருப்பதைக் காண்கிறோம்! மேலுமாக நம்முடைய நண்பர்களின் பொதுவான தராதரங்கள் மிகவும் உயர்வானதாக இருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக சமீபத்தில்தானே யெகோவாவை வணங்க ஆரம்பித்திருக்கும் பிரயனுக்கு, அவனுடைய முன்னாள் நண்பர்கள் அவனை குடிக்கச்செய்து அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அசட்டைப் பண்ணும்படியாகச் செய்வித்தது நினைவிருக்கிறது. ஆனால் இப்பொழுது அவன், அவனுடைய குடும்பத்தில் ஆழ்ந்த அக்கறையுடையவனாக இருக்கிறான். யெகோவாவில் அதே விசுவாசம் வைத்திருக்கும் தன்னுடைய அநேக புதிய நண்பர்களைக் குறித்து அவன் சொல்வதாவது: “எனக்கு ஒரு பிரச்னை இருக்குமானால், நான் உடனடியாக அவர்களில் ஒருவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உதவி செய்ய மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.”
ஆலனுக்குக் கார்களையும் பெண்களையும் பற்றியே பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் யெகோவாவை நேசிக்கும் புதிய நண்பர்கள் அவனுக்குக் கிடைத்தபோது இந்த விஷயங்கள் சலிப்பைத் தருவதாகவும் அர்த்தமற்றதாகவும் இருப்பதை அவன் உணர்ந்தான். அவனிடத்தில் அவர்கள் காண்பித்த இயல்பான, உண்மையான அன்புள்ள அக்கறை அவனை வெகுவாக கவர்ந்து அவனை மேற்கொண்டுவிட்டது.
நம்முடைய மிகச் சிறந்த நண்பர்கள்
இந்த நபர்களும், உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான மற்றவர்களும் தேசீய, இன, மற்றும் சமுதாய தடை அரண்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் சார்பற்ற நண்பர்களின் ஒரு குடும்பத்தை உண்டுபண்ணுகிறார்கள். பூர்வ கிறிஸ்தவர்களின் மத்தியிலிருந்தது போலவே, மனிதவர்க்கத்தின் மெய்யான ஒரு சகோதரத்துவத்தை இவர்கள் உண்டு பண்ணுகிறார்கள். (3 யோவான் 14) ரூத்தையும் நகோமியையும் நெருங்கிவரச் செய்த அதே பிணைப்பு, அதாவது யெகோவா தேவனின் தூய்மையான வணக்கம் இந்தக் குடும்பத்தையும்கூட ஐக்கியப்படுத்துகிறது. இவர்கள் அனைவருமே யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் தங்களின் மிகச் சிறந்த நண்பர்கள் என்பதை மனத்தாழ்மையோடும் நன்றியுணர்வோடும் ஒப்புக்கொள்கிறார்கள்.
சர்வ வல்லமையுள்ள கடவுளையும் அவருடைய குமாரனையும் நண்பர்களாகவா? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். ‘அது எவ்விதமாக கூடிய காரியமாக இருக்கலாம்? அது மனமேட்டிமையைக் காண்பிப்பதாக இல்லையா?’ பைபிள் சொல்வதாவது: “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், . . . அவன் ‘தேவனுடைய சிநேகிதனெனப்பட்டான்.” அது நிச்சயமாகவே தகுதியற்ற தயவாக இருக்கிறது. என்றபோதிலும், யெகோவாவின் வார்த்தை சொல்வதாவது: “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—யாக்கோபு 2:23; 4:6.
ஒருவேளை சிலர் இப்படிப்பட்ட ஒரு சிலாக்கியத்துக்குத் தாங்கள் மிகவும் பாவமுள்ளவர்களாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் யாக்கோபு தொடர்ந்து சொல்வதாவது: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். யெகோவாவுக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”—யாக்கோபு 4:8, 10.
இயேசு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால் என் சிநேகிதராயிருப்பீர்கள்.” மேலும் அவர் யெகோவாவில் நாம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அன்பு கூறுவதே கற்பனையில் பிரதானமானது என்பதையும்கூட சுட்டிக் காண்பித்தார். (யோவான் 15:14; மத்தேயு 22:37-40) அதை நாம் செய்வோமானால் நமக்கு உண்மை நண்பர்கள் பலர் இருப்பார்கள். மேலுமாக மற்றொரு பெரிய சிலாக்கியத்துக்கு—கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெறுவதற்கு—நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோம். (மத். 6:9, 10) இயேசு சொன்ன விதமாகவே: “அவருடைய [யெகோவாவுடைய] கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறது.”—யோவான் 12:50.
யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா? உண்மையான சிநேக உணர்வுள்ள ஆட்களாக, அவர்கள் உங்களை வந்து சந்தித்து, இலவசமாக இந்த இன்றியமையாத விஷயத்தைப் பற்றி உங்களிடம் பேச அவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அநேக உண்மை நண்பர்களை உண்டு பண்ணிக்கொள்வதில் உங்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். (w87 9⁄15)
[பக்கம் 6-ன் பெட்டி]
உண்மை நட்புக்கு சில உதவி குறிப்புகள்
நீங்கள் யாரோடு கூட்டுறவு கொள்வீர்கள் என்பதைக் கவனமாக தெரிந்தெடுங்கள்
மற்றவர்கள் பேரில் அன்பான அக்கறையைக் காண்பித்து மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்கும் பழக்கமுள்ளவராய் இருங்கள்.
ஒன்றாகச் சேர்ந்து காரியங்களைச் செய்யுங்கள். பகிர்ந்துகொள்ளப்படும் அனுபவங்கள் நட்பைப் பெலப்படுத்துகிறது.
எப்பொழுதும் ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையாகவும் உண்மை மனதுடனும் இருங்கள்.
மற்றவர்கள் தொந்தரவிலிருக்கையில், அவர்களிடத்தில் உங்களை வைத்துப் பார்த்து, இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
நண்பர்கள் தவறு செய்கையில் அல்லது உங்களை நிலைகுலையச் செய்கையில் “எழுபது தரமட்டும்”கூட மன்னிக்கத் தயாராயிருங்கள்.—மத்தேயு 18:22.
நண்பர்கள் மீது பழிதூற்றப்படுகையில் அல்லது அவர்கள் அநியாயமாகக் குறைச் சொல்லப்படுகையில் பற்றுறுதியுடனிருந்து அவர்களுக்காக வாதாடுங்கள்.
யெகோவாவைச் சேர்ந்து வணங்குவது நட்பை அளவிடமுடியாத வகையில் பெலப்படுத்துகிறது.
[பக்கம் 7-ன் படம்]
ரூத் நகோமியை விட்டு பிரியமாட்டாள். ஏனென்றால் அவர்களுடைய நட்புக்கு உறுதியான ஆவிக்குரிய ஆதாரமிருந்தது. உங்களுக்கு இப்படிப்பட்ட உண்மை நண்பர்கள் இருக்கிறார்களா?