அதிகரிக்கும் விலைவாசி சமாளிக்க வழி!
நம்பிக்கையோடு இருப்பது
வாங்குகிற சம்பளத்துக்கும் விற்கிற விலைவாசிக்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லையா? உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்படிப் பார்த்துக்கொள்வது என்ற கவலை வாட்டுகிறதா? அப்படியென்றால், எதிர்காலமே இருண்டு போன மாதிரி உங்களுக்குத் தெரியலாம். இந்த மாதிரி நேரத்தில், நம்பிக்கை உங்களுக்குக் கைகொடுக்கும்.
இது ஏன் முக்கியம்
நம்பிக்கை ஒருவருக்கு தெம்பு கொடுக்கும். அதனால், அவர் நல்லது ஏதாவது நடக்கும் என்று சும்மா உட்கார மாட்டார். நிலைமையை நல்லபடியாக மாற்ற தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார். சில ஆராய்ச்சிகள் காட்டுவதுபோல், நம்பிக்கை உள்ளவர்கள் . . .
பொதுவாகவே நன்றாகத் தாக்குப்பிடிப்பார்கள்
சூழ்நிலைக்கு ஏற்றபடி வளைந்துகொடுப்பார்கள்
ஆரோக்கியமான, தரமான வாழ்க்கைக்கு உதவும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள்
நீங்கள் என்ன செய்யலாம்
முதலாவதாக, பைபிள் இன்று உங்களுக்கு எப்படி உதவும் என்று பாருங்கள். விலைவாசி உயர்வைச் சமாளிக்க நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. மற்ற விஷயங்களோடு சேர்த்து இந்த ஆலோசனைகளும், நெருக்கடிகளைச் சமாளித்து நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நமக்கு உதவும். இன்று மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் அவை உதவும். அதனால், வழி தெரியாமல் விழி பிதுங்க வேண்டிய அவசியம் இருக்காது.
இரண்டாவதாக, எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள். பைபிளில் இருக்கிற ஆலோசனைகளின் மதிப்பைப் புரிந்துகொள்ளும்போது, எதிர்காலத்தைப் பற்றி அது என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுவீர்கள். அப்போது, கடவுள் உங்களுக்கு “நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்” கொடுக்க விரும்புவதைத் தெரிந்துகொள்வீர்கள். அதோடு, அந்த நம்பிக்கைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை அவர் போட்டிருப்பதையும் தெரிந்துகொள்வீர்கள். (எரேமியா 29:11) அது என்னது? அதுதான், கடவுளுடைய அரசாங்கம்!
கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது என்ன செய்யப் போகிறது?
கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்திலிருந்து இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கம். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) அந்த அரசாங்கம், எல்லா கஷ்டத்துக்கும் வறுமைக்கும் முடிவுகட்டும். சமாதானத்தைக் கொண்டு வரும். அதன் ஆட்சியில், எல்லாருக்கும் எல்லாமே தாராளமாகக் கிடைக்கும். இந்த வசனங்களைப் பாருங்கள்:
லட்சக்கணக்கான மக்கள் கடவுள் தந்திருக்கும் இந்த வாக்குறுதிகளை நம்புகிறார்கள். கடவுளால் ‘பொய் சொல்ல முடியாது’ என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். (தீத்து 1:3) பைபிளை நீங்கள் ஏன் படித்துப் பார்க்கக் கூடாது? எதிர்காலத்தைப் பற்றி அதிலிருக்கும் வாக்குறுதிகள், பணக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்குத் தேவையான மன உறுதியைக் கொடுக்கும். அதோடு, நல்ல எதிர்காலம் ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.