உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 4/22 பக். 25-27
  • புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விளம்பரத்தைப் புரிந்து நம்பவைத்தல்
  • சாதகமற்ற செய்தி
  • சிக்கிக்கொள்ளுதல்!
  • ஞானமாயிருங்கள்
  • புகையிலையின் ஆதரவாளர்கள் வெப்பக்காற்று பலூன்களை பறக்கவிடுகின்றனர்
    விழித்தெழு!—1995
  • மக்கள் ஏன் புகை பிடிக்கிறார்கள், ஏன் அவர்கள் புகை பிடிக்கக்கூடாது?
    விழித்தெழு!—1987
  • புகையிலையும் தணிக்கையும்
    விழித்தெழு!—1990
  • தடைகளைத் தாண்டத் தயாராக இருங்கள்
    விழித்தெழு!—2010
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 4/22 பக். 25-27

இளைஞர் கேட்கின்றனர்

புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?

‘பதிமூன்று வயதான கார்ட், ஐக்கிய மாகாணங்களின் மத்திபமேற்குப் பகுதிக்கு இடம்மாறிச் சென்றபோது, எட்டாம் வகுப்பு மாணவர்கள் வைத்திருந்த ஒரேமாதிரியான ஆணின சாதனம் ஒன்று தன்னிடம் இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்தான்: புகைவிடாத ஒரு வகைப் புகையிலையின் பொடி நிறைந்த ஒரு டப்பா. அவனுடைய நண்பர்களில் பெரும்பாலானோர் ‘டிப்பர்களாய்’ அல்லது பொடி உபயோகிப்பவர்களாய் இருந்தனர், ஆகவே கார்ட் இசைந்து செல்ல விரும்பினான். ஆகையால் அப்பேர்வழிகளில் ஒருவன் ஒரு சிறிய பாக்கெட்டு பொடியை அவனிடம் அளித்தபோது, அதை எடுத்து அதில் கொஞ்சத்தை அவனது கீழ் உதட்டுக்கும் பல் ஈறுக்கும் இடையே அலட்டிக்கொள்ளாமல் நீண்டநாள் பழக்கம் உள்ளவன்போல் ஒதுக்கிவைத்துக் கொண்டான்.’—லிசன் பத்திரிகை.

இளம் கார்ட் ஒரு விதிவிலக்காய் இல்லை. எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டு வரும் பருவவயது ஆண்பிள்ளைகள் தங்கள் முதல் சிட்டிகையை எடுப்பதாக வாய் சம்பந்தப்பட்ட நோய்க்குறியியலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரான டாக்டர் கிறிஸ்டோபர் ஏ. ஸ்குவீயர் கூறுகிறார். 1980-களில் புகைவிடாத புகையிலை விற்பனைகள் குறைந்துவந்தபோதிலும், “ஈரப் பொடியின் உபயோகம் மீண்டும் அதிகரிக்கிறது” என்பதாக டாக்டர் ஸ்குவீயர் கூறுகிறார்.a உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு 5 ஆண் மாணவரில் ஒருவரும், ஸ்வீடனில் ஒவ்வொரு 3 இளம் ஆண்களில் ஒருவரும்—லட்சக்கணக்கான இளைஞர்கள்—இப்போது புகைவிடாத புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இது ஏன் இவ்வாறு சம்பவிக்கிறது?

“அது புகைப்பதைவிட பாதுகாப்பானது.” “அது ஆபத்தானது என்பதற்கான எந்த நிரூபணமும் இல்லை.” “என் நண்பர்கள் அதை உபயோகிக்கின்றனர். அது அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.” “அவ்வப்போது மிகக் கொஞ்சம் எடுப்பது எனக்குத் தீங்கு விளைவிக்காது.” “அதால் எக்காலத்திலும் ஒருவரும் இறக்கவில்லை.” அமெரிக்கன் கேன்ஸர் சொஸைட்டி கூறுவதன்படி, இவை இளைஞர்கள் ஏன் புகைவிடாத புகையிலையிடம் தங்கள் கவனத்தைத் திருப்புகின்றனர் என்பதற்கு பொதுவாகக் கொடுக்கும் காரணங்களாய் இருக்கின்றன.

இளைஞர்கள், டிப்பிங் புகைப்பதைவிட பாதுகாப்பானது என்று நினைக்கும்படி செய்திருப்பது எது? காரியம் உண்மையிலேயே அப்படித்தான் உள்ளதா?

விளம்பரத்தைப் புரிந்து நம்பவைத்தல்

பல ஆண்டுகளாக, திறம்பட்ட புகையிலை நிறுவனங்கள் புகைவிடாத புகையிலை சூயிங் கம்மைப் போன்றே தீங்கற்றது என்றும் ஷூக்களின் ஒரு பிராண்டைப் போன்றே அத்தியாவசியமானதென்றும் குறிப்பிட்டுக் காட்டும் விளம்பரங்களால் இளைஞர்களை அதிவேகமாய்த் தாக்கின. “ஒரு தம்முக்குப் பதிலாக ஒரு பை நிறைய பொடி,” “பற்றவைக்காமலேயே புகையிலை தரும் இன்பத்தை நான் பெறுகிறேன்,” மற்றும் “ஒரு சிட்டிகைதான் தேவை” போன்ற சுலோகங்கள், அதன் மேம்பட்ட சமூகத் தகுநிலையைத் தந்திரமாக அர்த்தப்படுத்தின.

அத்தகைய டிவி, ரேடியோ சுலோகங்கள் ஐக்கிய மாகாணங்களில் தடை செய்யப்பட்ட பிறகு, இன்னும் அதிகளவு புரிந்து நம்பவைக்கும் வகையில் புகையிலை நிறுவனங்கள் அவ்விளம்பரங்களை பத்திரிகை விளம்பரங்களில் போடுவதைத் தொடர்ந்தன. திடமான ஆட்கள் வேட்டையாடுவதில், பாறையேறுவதில், வேகமாய்ப் பாயும் நீரில் கட்டுமரம் செலுத்துவதில் ஒரு மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டிருப்பது போன்ற கண்ணைக்கவரும் வண்ணப்படங்கள்—அவர்களின் பின்பாக்கெட்டில் நன்கு தெரியும்படியாக செருகி வைத்திருக்கும் ஒரு பாக்கெட் புகையிலை—ஓர் உரத்த தெளிந்த செய்தியைத் தெரிவித்தன: “புகைவிடாத புகையிலை அழகானது, இயல்பானது, ஆண்மையின் வாசல்!”

ஏராளமான இளைஞர்கள் “புகைவிடாத புகையிலைப் பொருட்கள் பாதுகாப்பானது என்றும் சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாகவும்” இப்போது நம்புகின்றனர் என்பதாக ப்ரிவென்ட்டிங் டொபாக்கோ யூஸ் அமங் யங் பீப்பிள் என்று தலைப்பிடப்பட்டிருந்த ஐ.மா. சர்ஜன் ஜெனரலின் 1994-ம் ஆண்டுக்குரிய அறிக்கை கூறுகிறது. “புகைவிடாத புகையிலையை ஒழுங்காக பயன்படுத்துவதால் ஆபத்து ஏதும் இல்லை, அல்லது லேசான ஆபத்துதான் உள்ளது என்று உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சுமார் 60 சதவீதத்தினரும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் சுமார் 40 சதவீதத்தினரும் நம்பினர்” என்பதாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. புகைவிடாத புகையிலை தீங்கு விளைவிப்பதாய் இருக்கலாம் என்று உணர்ந்திருந்து புகையிலையை உபயோகித்த மேல்நிலைப் பள்ளி மாணவர்களும்கூட “ஆபத்து அதிகம் இருப்பதை உணருவதில்லை.” அந்த விளம்பரங்கள் புரிந்து நம்பவைக்கின்றன. ஆனால் அந்த விளம்பரங்கள் உண்மையானவையா?

பைபிளின் நீதிமொழி ஒன்று கூறுகிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” மற்றொரு நீதிமொழி கூறுகிறபடி, “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 13:16; 14:15) அப்படியானால், புகைவிடாத புகையிலையைப் பற்றி உண்மைகள் என்ன காட்டுகின்றன?

சாதகமற்ற செய்தி

நீங்கள் புகைவிடாத புகையிலையைப் பயன்படுத்துவது, நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் உங்களை நோக்கும் விதத்தை மேம்படுத்தும் மற்றும் உங்கள் உடலுக்கு பாதுகாப்பானதாய் இருக்கும் என்றெல்லாம் விளம்பரங்கள் குறிப்பிட்டுக்காட்டுவனவாய் இருந்தாலும், உண்மைகள் அதற்கு எதிர்மாறானவற்றைக் காட்டுகின்றன. ஒரு விஷயமானது, புகைவிடாத புகையிலையை உபயோகிப்பது எவ்விதத்திலும் மேம்பட்டவர்களாக உங்களைத் தோன்றச் செய்யாது. நீங்கள் அதை நம்பாவிட்டால், வெறுமனே உங்கள் நாக்கை உங்கள் கன்னத்தில் ஒட்டிவைத்து அதைக் கண்ணாடியில் சரிபாருங்கள். “இன்பமளிப்பதாய் இருக்கிறதா”? அப்படி ஒன்றும் அதிகமாயில்லை. வெளிப்படையாக அது அந்தளவுக்குத்தான் பாதிக்கிறது! அது உங்களுக்கு உள்ளே பாதிக்கும் அளவோ இன்னும் மோசமானது.

உதாரணமாக, ஒழுங்காக புகையிலை சவைப்பவர்கள் அல்லது பொடி போடுபவர்களின் உதடுகள் வெடிப்புறலாம், பற்களில் கறைபடியலாம், துர்நாற்றம் வீசலாம், பல் ஈறு புண்ணாகலாம்—சிரிப்பதற்கான விஷயமல்ல. அதோடு, சுவையையும், மணத்தையும் உணரும் அவர்களின் திறன் குறைவதோடு, அவர்களின் இதயத்துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது—உண்மையாகவே சாதகமற்ற செய்தி. என்றபோதிலும் உண்மையான சாதகமற்ற செய்தியானது; கன்னங்கள், பல் ஈறுகள், தொண்டை ஆகியவற்றில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்குப் புகைவிடாத புகையிலை காரணம் என்று ஐரோப்பா, இந்தியா, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இக்கண்டுபிடிப்புகள் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது: “உங்கள் உடம்பில் சேர்க்கப்படும் பொருட்களிலேயே பொடியில்தான் அதிகளவு புற்றுநோய் விளைவிக்கும் பொருட்கள் உள்ளன.” “நீண்டகாலமாய் பொடியை உபயோகிப்பவர்கள் அதை உபயோகிக்காதவர்களைக் காட்டிலும் 50% அதிகளவு வாய்-புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்,” என்பது ஆச்சரியமாயில்லை.

வாய்-புற்றுநோய் தோன்றிவிட்டால், அந்த விளைவுகள் வினைமையானவை. உபயோகிப்பவரின் உடல்நலம் கெடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது வாழ்நாள் பொதுவாகக் குறைக்கப்படுகிறது. அமெரிக்கன் கேன்ஸர் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இந்த சோகக் கதையை விவரிக்கிறது: ‘ஷான் புகைவிடாத புகையிலையை தனது 13-வது வயதில் உபயோகிக்க ஆரம்பித்தான். அது புகைப்பதைவிட பாதுகாப்பானது என்று அவன் கருதினான். ஒரு நாளுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டப்பா வீதம் ஐந்து ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அவன் நாக்கில் ஒரு புண் தோன்றியது. அது வாய்-புற்றுநோயாக இருந்தது. அவனது நாக்கின் ஒரு பகுதியை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர், ஆனால் அப்புற்றுநோய் அவனது கழுத்துவரை பரவிவிட்டது. தோற்றத்தையே அலங்கோலமாக்கிவிட்ட அறுவை மருத்துவம் செய்யப்பட்டது, ஆனால் பலன் ஏதும் இல்லை—அவன் தனது 19-வது வயதில் மரித்துவிட்டான். அவனது மரணத்துக்கு முன்னதாக ஒரு காகிதத்தில் ஓர் எளிய செய்தியை ஷான் எழுதினான்: “பொடியில் ‘டிப்’ பண்ணாதீர்கள்.”

சிக்கிக்கொள்ளுதல்!

முன்னதாகக் குறிப்பிடப்பட்ட இளம் கார்ட், ஷானைப் பற்றிய இந்த அதிர்ச்சியூட்டும் பதிவை வாசித்தபிறகு, செய்தியைப் புரிந்துகொண்டான். இப்பழக்கத்தை விட்டுவிடத் தீர்மானித்தான். என்றபோதிலும், விட்டுவிட முயலுவது வெகு கடினமானதாய் இருந்தது. “அதை இன்னும் உபயோகிக்க வேண்டுமென்று நான் உணர்ந்தேன்” என்பதாக லிசன் பத்திரிகையாளரிடம் கார்ட் கூறினான். “இப்போதும்கூட, யாவரறிய அப்பழக்கத்தை நான் விட்டுவிட்டபின் பல மாதங்கள் கழித்தும், என்னையறியாமலே பொடி இருக்கும் பையைத் தேடி என் கையை பாக்கெட்டில் விடுகிறேன். ஏராளமான சூயிங் கம்களை நான் சவைக்கிறேன். அது உதவுகிறது, ஆனால் அந்த ஆசையை அது எடுத்துப்போடுவதாயில்லை.”

“புகைவிடாத புகையிலை உபயோகத்தை நிறுத்த முயன்ற பருவவயதினரிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில், வெறும் ஒரு குறைந்த சதவீதத்தினர் மட்டுமே அவ்விதம் செய்ய முடிந்திருக்கின்றனர்” என்று Ca-A கேன்ஸர் ஜர்னல் ஃபார் கிளினிஸியன்ஸ் உறுதிப்படுத்துகிறது. இருந்தபோதிலும், புகைவிடாத புகையிலை உபயோகத்தை விட்டுவிடுவதை எது அவ்வளவு கடினமாக்குகிறது? புகைப்பதை விட்டுவிடுவதை அவ்வளவு கடினமானதாக்கும் அதே போதைப்பொருள்தான்: நிக்கட்டின்.

சிகரெட்டுகளிலும் புகைவிடாத புகையிலையிலும் காணப்படும் போதைப்பொருளாகிய நிக்கட்டின், உபயோகிப்பவர்களுக்கு போதையை ஏற்படுத்தவல்ல ஓர் ஆற்றல்மிக்க நச்சுப்பொருளாகும். சுமார் ஒவ்வொரு 30 நிமிடங்களில், அந்தப் போதையிலேயே தொடர்ந்து இருப்பதற்காக அதை உபயோகிப்பவர் மற்றொரு முறை ‘டிப்’ பண்ண வேண்டிய தேவையிலிருக்கிறார். நிக்கட்டின் உங்களை சிக்க வைக்கிறது. உபயோகிப்பவர்களில் சிலர் அவ்வளவாய் அடிமைப்பட்டுவிட்டதால் தங்கள் வாயில் எப்போதும் ஒரு சிட்டிகையளவான பொடியை இரவுபகலாக வைத்திருக்கின்றனர்—தூங்கும்போதும்கூட.

இளைஞர்கள் நினைப்பதற்கு முரணாக, ‘டிப்’ பண்ணுதல் உடலுக்குள் செலுத்தப்படும் நிக்கட்டினின் அளவைக் குறைப்பதில்லை. ஒரு நாளில் உபயோகிக்கும் ஒரு டப்பா அளவான புகைவிடாத புகையிலை 60 சிகரெட்டுகள் வெளிவிடுவதற்குச் சமமான நிக்கட்டினை விடுவிக்கிறது! “புகைவிடாத புகையிலை உபயோகிப்பாளர்கள்,” ‘புகைப்பவர்கள் உள்ளிழுக்கும் அதே அளவு நிக்கட்டினையாவது உள்ளிழுக்கின்றனர்—ஒருவேளை அதைப் போல் இரு மடங்கு’—என்று ப்ரிவென்ட்டிங் டொபாக்கோ யூஸ் அமங் யங் பீப்பிள் குறிப்பிடுகிறது. (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) நிக்கட்டினைத் தவிர, புகைவிடாத புகையிலையில் சிகரெட்டில் இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான நைட்ரஸமைன்கள் (சக்திவாய்ந்த புற்றுநோய் தோற்றுவிக்கும் பொருட்கள்) உள்ளன.

ஞானமாயிருங்கள்

“இவையெல்லாம் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை” என்று தலை மற்றும் கழுத்து அறுவை மருத்துவரான டாக்டர் ராய் செஷன்ஸ் கூறினார். “அவை புகைப்பதை நிறுத்துவதில் உட்பட்டிருப்பதைவிட இதை நிறுத்துவதை அதிக கடினமாக பலர் உணரும்படியான ஒரு சார்பு நிலையை உருவாக்குகின்றன.” பல்-புற்றுநோய் நிபுணரான டாக்டர் ஆஸ்கார் கெர்ரா முடிவாகக் கூறினார்: “அப்பொருளை உடல் விரும்புவதே இல்லை.” உலக முழுவதிலுமுள்ள நிபுணர்கள் ஒத்துக்கொள்வர்: ‘டிப்’ பண்ணுதல் ஒரு சிட்டிகையளவு தொல்லையைவிட அதிகமானது. அது உங்களைப் பொடியாக்கிவிடக்கூடும்!

புகையிலைப் பொருட்களிலிருந்து விலகியிருப்பதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் உடல்நல அக்கறைகளைவிட இன்னும் அதிக வற்புறுத்தும் காரணத்தை உடையவர்களாய் இருக்கின்றனர்—யெகோவா தேவனை மகிழ்விக்கும் அவர்களது விருப்பம். அவரது வார்த்தை கட்டளையிடுகிறது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.

ஏவியேஷன், ஸ்பேஸ், அண்ட் என்வைரன்மென்ட்டல் மெடிஸின் என்ற பத்திரிகை விஷயத்தை நேர்த்தியாக சுருக்கிக் கூறுகிறது: “புகையிலை என்னும் வெறுப்பூட்டும் ஒரு தாவரம் இரண்டே படைப்புகளால் உட்கொள்ளப்படுகிறது—ஒரு சிறிய பச்சைநிறப் புழுவாலும் மனிதனாலும். அந்தப் பச்சைநிறப் புழுவுக்கு மனிதனுக்கு இருக்கும் அளவு அறிவு இல்லை.”

ஆனால் உங்களுக்கு இருக்கிறது. ஆகவே ஞானமாயிருங்கள்—ஆரம்பிக்காதீர்கள்.

[அடிக்குறிப்பு]

a புகைவிடாத புகையிலையில் இரண்டு வகைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன: பொடி மற்றும் சவைக்கும் புகையிலை. உலர்ந்த மற்றும் ஈரமான பொடி. இளைஞரிடையே, ஈரப் பொடி—பொடியாக நறுக்கப்பட்ட புகையிலையுடன், இனிப்பூட்டும் பொருட்கள், சுவையூட்டும் பொருட்கள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து தயாரித்து, ஒரு டப்பாவிலோ அல்லது தேநீர் பாக்கெட்டைப் போன்ற பாக்கெட்டுகளிலோ வைக்கப்பட்டுள்ளது—மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் புகைவிடாத புகையிலையின் ஒரு வகையாக உள்ளது. “டிப்பிங்” என்பது ஒருமுறை அமிழ்த்தும் அளவு—பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் எடுக்கப்படும் புகையிலை அளவு—உதடு அல்லது கன்னத்துக்கும் பல் ஈறுக்கும் இடையே வைக்கப்படுவதைக் குறிக்கிறது.

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

புகையிலையை சவைப்பது இளைஞரிடையே பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்கள் முயல வேண்டுமா?

[பக்கம் 26-ன் படங்கள்]

‘தன் மரணத்துக்கு முன்னதாக ஷான் ஓர் எளிய செய்தியை எழுதினான்: “பொடியில் ‘டிப்’ பண்ணாதீர்கள்”’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்