எமது வாசகரிடமிருந்து
செவிகொடுத்துக் கேட்பது “நீங்கள் ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபரா?” (டிசம்பர் 8, 1994) எனக்கு மிக சரியாக தேவைப்பட்ட கட்டுரையாக இருந்தது. என்னுடைய நண்பனிடம் அவனுடைய பிரச்சினைகள் உண்மையில் அவ்வளவு மோசமானவை அல்ல என்பதாகச் சொல்லி அவன் கேட்காத ஆலோசனையைக் கொடுக்க ஆரம்பிக்கையில் தனக்கு அது விருப்பமில்லை என்பதாக அவன் பல தடவைகள் என்னிடம் சொல்லியிருக்கிறான். நேர்மையாக உங்களிடம் சொல்ல வேண்டுமானால், அவன் தவறான மனநிலையைக் கொண்டிருந்ததாக நான் நினைத்தேன். இப்பொழுது நான் தவறாக இருந்ததைக் காண்கிறேன்!
எஸ். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
இப்படிப்பட்ட ஒரு கட்டுரைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன், ஆனால் அது என்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிட்டது. எவ்விதமாக செவிகொடுத்துக் கேட்பது என்பதை அறிந்திருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அடிக்கடி குறைவாக மதிப்பிட்டுவிடுகிறோம். என்றபோதிலும், நம்மில் பெரும்பாலானவர்கள் நாம்தாமே அத்தகைய கவனத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து கனவு கண்டிருக்கிறோம்.
எஸ். டி., இத்தாலி
எனக்கு 18 வயதாகிறது. குறிப்பிட்ட சில நிலைமைகளில் என்ன சொல்வது என்பதை நான் அறியாதிருப்பதாக அடிக்கடி நான் காண்கிறேன். அந்த அழகான கட்டுரையை வாசித்தப் பின்னர், நான் ஒத்துணர்வுடன் செவிகொடுப்பவராக இருக்கமுடியும் என்பதாக உணருகிறேன்.
ஜே. எம்., ஆஸ்திரேலியா
நாம் கேள்விப்படும் ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் தீர்க்கவேண்டியதில்லை, ஆனால் செவிகொடுப்பதே அநேகமாக போதுமானது என்பதை அறிந்துகொள்வது ஆறுதலாக இருக்கிறது. விசேஷமாக கடமையில் தவறும் குடும்பங்களிலிருந்து வரும் நாம், அடிப்படையான பேச்சுத்தொடர்பு திறமைகளைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். எவ்விதமாக வாழ்வது என்பதை எங்களுக்குப் போதிப்பதற்கு பைபிளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதற்காக உங்களுக்கு நன்றி.
ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்
மேம்பட்ட ஓவியங்கள் பள்ளியில் நான் ஓவியத்தை முக்கியப் பாடமாக கற்றேன். அதே சமயத்தில் நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துவந்தேன். ஆனால் விழித்தெழு! பத்திரிகையை நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லுகையில் என்னுடைய சக மாணவர்கள் அதின் சித்திரக் கலையை குறைகூறுவார்கள்—வண்ணங்கள் தெரிந்தெடுப்பு மோசமாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள். என்றபோதிலும் சமீப மாதங்களில், சித்திரக் கலை உண்மையில் குறிப்பிடத்தக்க விதமாய் சிறப்பாயுள்ளது. நான் பத்திரிகைகளைப் பற்றி உண்மையில் பெருமையாக உணருகிறேன்!
என். ஐ., ஜப்பான்
சேதமடைந்த வளிமண்டலம் “நமது வளிமண்டலம் சேதமடையும்போது,” என்ற கட்டுரையை இப்பொழுதுதானே வாசித்துமுடித்தேன், அதை மிகவும் அனுபவித்து வாசித்தேன். (டிசம்பர் 22, 1994) நிச்சயமாகவே எழுதுவதற்கு அர்த்தமுள்ள விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு விசேஷமான திறமை இருக்கிறது. பல தடவைகள் முழு பூமியும் உஷ்ணமாவதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் ஆதாரம் கொடுக்கவில்லை. கவனமாயிருங்கள்! ஒரு நாள் இதற்கு நேர் எதிர்மாறானது நிரூபிக்கப்பட்டுவிட்டால், உங்களுடைய பத்திரிகை பதில் சொல்லியே தீரவேண்டும்.
எம். எல்., ஐக்கிய மாகாணங்கள்
முழு பூமியும் உஷ்ணமாகிவரும் கோட்பாட்டை நாங்கள் ஆதரித்துப் பேசவில்லை, ஆனால் வெறுமனே அது நடந்துகொண்டிருப்பதாக பிரசித்திப் பெற்ற அறிவியல் அறிஞர்கள் பலர் நம்பும் உண்மையையே நாங்கள் சொல்லியிருக்கிறோம். தர்க்கத்துக்கு இடமளிக்கும் இந்தக் கோட்பாடு மேலுமான ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.—ED.
வகுப்பு சிற்றுலா “இளைஞர் கேட்கின்றனர் . . . வகுப்பு சிற்றுலா செல்வதைப் பற்றியென்ன?” என்ற உங்கள் கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். (அக்டோபர் 22, 1994) பல வருடங்களுக்கு முன்னால் என்னுடைய வகுப்பில் ஒரு வார சிற்றுலா திட்டமிடப்பட்டது. ஜெபத்தில் காரியத்தைச் சிந்தித்தப் பின்னர், நான் போவதில்லை என்பதாகத் தீர்மானித்துவிட்டேன். வகுப்பு மாணவர்கள் வீடு திரும்பியபோது, என்னுடைய சகாக்களில் பலர் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதைப் பற்றி நான் அறியவந்தேன். ஆம், இப்படிப்பட்ட சிற்றுலாக்கள் ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கு மிகவும் கடினமான சோதனையாக இருக்கக்கூடும்.
ஜெ. எஸ்., நார்வே
பல முறை நான் வெளியில் சிற்றுலா செல்வதில் சேர்ந்துகொண்டிருந்ததால், இந்தக் கட்டுரை உண்மையில் எனக்கு உதவியாயிருந்தது. நீங்கள் அளித்திருக்கும் கேள்விகள் நிலைமையை அலசிப்பார்க்க ஒரு இளைஞனுக்கு உதவுகிறது. வகுப்புடன் சிற்றுலா செல்வதை சரியான இடத்தில் வைக்க எனக்கு உதவியதற்காக உங்களுக்கு நன்றி.
எம். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
எப்பொழுதும் நான் பார்க்க விரும்பிய ஓரிடத்துக்கு, வகுப்பு சிற்றுலா செல்வதால் அதில் கலந்துகொள்ளுமாறு நான் சமீபத்தில் அழைக்கப்பட்டேன். ஏற்கெனவே டிக்கட்டை வாங்கியிருந்தபோதிலும்கூட நான் பிரயாணத்தைக் கைவிட தீர்மானித்துவிட்டேன். பின்னால் நான் அனுபவிக்க தவறியதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் உங்களுடைய கட்டுரை சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது. அதை வாசித்தப் பின்பு, நான் சரியான தீர்மானம் செய்திருந்ததைக் குறித்து நிச்சயமாயிருந்தேன்.
எல். எஸ். பி., பிரேஸில்