மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றி வாசகர் கருத்து
யெகோவாவின் சாட்சிகள் 1990-ம் ஆண்டு மத்தியிலிருந்து 1991-ம் ஆண்டு ஆரம்பம் வரை நடத்திய “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டதாகும். உலகத்தில் இருக்கும் முக்கியமான மதங்களின் தோற்றம், சரித்திரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி அது சுருக்கமான விளக்கத்தைக் கொடுக்கிறது. மெய்க் கடவுளை எவ்வாறு கண்டடைவது என்பதை பற்றி அது சொல்கிறது. உலகமுழுவதிலும் உள்ள வாசகர்கள் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்?
“மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற புத்தகத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று ஜெர்மனியில் இருக்கும் யெகோவாவின் சாட்சியாக இல்லாத E. G. என்பவர் கருத்து தெரிவித்தார். “தனிப்பட்ட மதங்களின் இப்படிப்பட்ட விவரங்கள் அடங்கிய முழுமையான ஆராய்ச்சி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. வாசிப்பதற்கு சுவாரசியமாய் உள்ளது. இப்புத்தகம் தர்க்கமுறையில் குறைவுள்ளதாய் இல்லை—அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தங்கள் மதத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கும்படி நான் சிபாரிசு மட்டும் தான் செய்ய முடியும்.”
ஃபலஷ்ஷிங். நியு யார்க், அ.ஐ.மா.-லிருந்து ஒரு வாசகர் இவ்வாறு எழுதினார்: “நான் ஒரு முகமதியன். அல்-இஸ்லாம் என்பது என்னுடைய மதம். மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற உங்களுடைய புதிய புத்தகத்தை நான் பாராட்டுகிறேன். என்னுடைய மதத்தை பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தகவலை குறிப்பாக நான் போற்றுகிறேன்.”
நெதர்லாந்தில் 17-வயது A. v. D. இப் புத்தகத்தின் பிரதி ஒன்றை தன் சக மாணவிக்கு அளித்தாள். அவள் அதை பள்ளி பாட நியமிப்பு ஒன்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தினாள். அந்த விஷயங்களை எதிலிருந்து அவள் பெற்றுக்கொண்டாள் என்பதை ஆசிரியர் அறிந்து கொள்ள விரும்பினார். புத்தகத்தை பார்த்த பிறகு, மூன்று புத்தகங்கள் வேண்டுமென்று கேட்டார். A. v. D. தொடர்ந்து சொல்கிறாள்: “அடுத்த நாள் நான் மூன்று புதிய புத்தகங்களை ஆசிரியரிடம் கொடுத்தேன். உடனடியாக அவர் அதை மற்ற ஆசிரியர்களுக்கு காண்பித்தார். சிறிது நேரத்துக்குப் பின்பு, ‘இது நன்றாயிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 35 பிரதிகளை ஆர்டர் செய்யும்படி பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரத்தை நான் பெற்றிருக்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார்.”
பிரிட்டிஷ் கொலம்பியா, கானடாவிலிருந்து ஒரு தம்பதி இவ்வாறு எழுதினார்கள்: “இதற்கு முன்பு எந்தக் காவற்கோபுர சங்கத்தின் பிரசுரமும் பாதிக்காத அளவு மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற புத்தகம் அநேக கலாச்சார பின்னணிகளிலிருந்து வரும் அநேக ஜனங்களை பாதிக்கக்கூடும்.”
லி ஹாவ்ரி, ஃபிரான்ஸ்-லிருந்து M. H. என்பவர் இவ்வாறு எழுதினார்: “இப்புத்தகம் என்னுடைய எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக மிஞ்சிவிட்டது என்று நான் சொல்ல வேண்டியிருக்கிறது; இது மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும், கண்ணுக்கு மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. மிகச் சிறந்த புத்தகம்!”
டெக்சாஸ், அ.ஐ.மா.-லிருந்து H. W. W. என்பவர் எழுதினார்: “இப்புத்தகம் அத்தனை ஆர்வமூட்டுவதாகவும், கருத்தைக் கவருவதாகவும் இருந்ததால், அதை என்னால் கீழே வைத்துவிட முடியவில்லை. இரவில் நெடுநேரமாக நான் வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதப்பட்டவைகளின் தரம் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது. இப்புத்தகம் மற்ற ஜனங்களின் நம்பிக்கைகளை நியாயமாகவும், மதிப்பளிக்கின்ற விதத்திலும் கலந்தாலோசிக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் மெய்க் கடவுளாகிய யெகோவாவை தொடர்ந்து தேடும்படி உற்சாகப்படுத்துகிறது. யாரோ ஒருவர் உங்கள் அருகில் அமர்ந்துகொண்டு சம்பாஷிப்பது போல் வார்த்தைகள் அதிக அழகாக ஏற்கத்தக்க விதத்தில் வருகின்றன.”
பனாமா-விலிருந்து G. மற்றும் S. என்ற ஒரு தம்பதி இவ்வாறு சொன்னார்கள்: “ஸ்பானிய மொழி பேசும் மக்கள் புத்தகத்தை உடனடியாக ஏற்றுக்கொள்கின்றனர். கோவில்கள், தெய்வ உருவ சிலைகள் ஆகியவற்றின் பலவண்ண புகைப்படங்களை பார்த்து அவர்கள் கிளர்ச்சி அடைகின்றனர்.”
ஐ.மா. கப்பற்படையில் இருக்கும் D. M. என்ற ஒரு கப்பலோட்டி இவ்வாறு எழுதினார்: “நான் ஒரு நாள் ஒரு பெண்மணியை சந்தித்தேன். ‘உங்களுக்கு ஆவிக்குரிய புத்தகம் ஒன்று வேண்டுமா?’ என்று அவர்கள் என்னை கேட்டார்கள். அது எப்படிப்பட்ட புத்தகம் என்பதை உண்மையில் அறிந்துகொள்ளாமலேயே நான் ‘வேண்டும்’ என்று சொன்னேன். எனக்கு ஆச்சரியத்தை தரும் வகையில், நான் சில காலமாக தேடிக் கொண்டிருந்த புத்தகமாக அது இருந்தது.”
ஓர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உலக மதத்தை பற்றி கற்பித்துக் கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இவ்வாறு எழுதினார்: “பல்வேறு மதங்களின் முக்கிய போதனைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும், விளக்கங்களை பொதுவாக திருத்தமாகவும் எழுதி இருப்பது மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. இத்துறையில் உள்ள அநேக அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுவது தற்காலத்து புலமையையும், நடைமுறை வழக்கத்தைக் குறித்தும் நூலாசிரியர் அறிந்திருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது. அது முழுவதும் நேர்மையானதாய் இருக்கிறது. மறைமுகமான குறிப்புகள் எதுவும் இல்லை.”
ஜப்பானில் இருக்கும் நகோயா பட்டணத்திலிருந்து N. Y. என்ற ஓர் இளம் பெண் இவ்வாறு எழுதினாள்: “எனக்கு வயது 12. பள்ளியில் நான் சரித்திரம் படித்து வருகிறேன். இப்புத்தகம் ஜப்பானில் உள்ள மதங்களைப் பற்றி விவரமாக சொல்கிறது. மந்திரம், ஆவிக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி 4-ம் அதிகாரத்திலும், ‘மெய்க் கடவுளிடம் திரும்புதல்’ என்பதைப் பற்றி 15-ம் அதிகாரத்திலுமிருந்து வாசித்து நான் முழுமையாக அனுபவித்தேன்.”
அர்ஜன்டினா, கொலம்பியா, இங்கிலாந்து, போர்ட்டோ ரிகோ, ஸ்பெய்ன், இன்னும் மற்ற தேசங்களிலிருந்து போற்றுதல் தெரிவித்து அநேக கடிதங்கள் வந்திருக்கின்றன. இப்போது 26 மொழிகளில் பிரசுரிக்கப்படும் மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால், பக்கம் 5-ஐ பாருங்கள். (g91 7⁄8)