உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 9/8 பக். 24
  • “தலைகீழான மரம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தலைகீழான மரம்”
  • விழித்தெழு!—1991
  • இதே தகவல்
  • ஆப்பிரிக்காவின் வியப்பூட்டும் “ஜீவ விருட்சம்”
    விழித்தெழு!—1995
  • “நான் கடவுளை நேசிக்கிறேன், அவர் இந்த மரத்தைப் படைத்தார்”
    விழித்தெழு!—1989
  • கிளிமஞ் சாரோ—ஆப்பிரிக்காவின் கூரை
    விழித்தெழு!—1997
விழித்தெழு!—1991
g91 9/8 பக். 24

“தலைகீழான மரம்”

அதுவே மேற்கு ஆப்பிரிக்க பருத்த அடியுடைய மரத்தின் (baobab) செல்லப் பெயராகும். இலைகளாலும் மலர்களாலும் மூடப்பட்டிருக்கையில் இம்மரம் அழகான காட்சியாக இருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் குட்டையும் மொட்டையுமான கிளைகள், தடித்த அடிமரத்திலிருந்து நீட்டிக்கொண்டு, மேல்நோக்கி திருப்பப்பட்ட ஒரு மரத்தினைப் போல் காணப்படுகிறது.

வட பாட்ஸ்வானாவில் இம்மரங்களின் ஒரு தொகுதி ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படுகிறது. அவை தாமஸ் பேய்ன்ஸ் என்ற ஓவியர்–ஆய்வாளரால் 19-ம் நூற்றாண்டில் ஓவியமாக தீட்டப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீட்டப்பட்ட பேய்ன்ஸின் ஓவியத்தோடு ஒருவர் இன்றுள்ள மரங்களை ஒப்பிடுவாரேயானால், வெகு சில வித்தியாசங்களே காணபார்.

இது இம்மரத்தின் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தன்மையையும் நீண்ட வாழ்நாளையும் காண்பிக்கிறது. மிகப் பெரிய மரங்கள் ஆயிரம் ஆண்டு வயதானவை என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இம்மரம் ஆப்பிரிக்காவின் உஷ்ணமான வறட்சியான பகுதிகளில் செழித்து வளருகின்றது, இதற்கு உயிரைக் காக்கும் அநேக பொதுப்பண்புகள் உண்டு. வெடிக்கும் விதைப்பையில், சாம்பர இருபுளியகியைப் போன்ற சுவையுள்ள சுண்ணம் நிறைந்த வெள்ளை விதைகள் இருக்கின்றன. யானைகள், அதிகமான ஈர அளவைக் கொண்ட மரப்பட்டையையும் பசுமையான மரத்தையும் சுவைத்து உண்கின்றன. உண்மையில், கிளைகளின் பள்ளமான இணைப்பிடங்களிலும் மரத்தினுள் உருவாகும் உட்குழிவுகளிலும் மழை தண்ணீர் சில சமயங்களில் காணப்படுகிறது.

மனதைக் கவரும் இம்மரத்தின் மற்றொரு அம்சம் அதன் மிகப்பெரிய சுற்றளவாகும். பேருருவம் கொண்ட இவற்றில் மிகப்பெரியது டான்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் தெற்கு சரிவுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் சுற்றளவு 92 அடியாகும். சிம்பாப்வேயில் குடைந்தெடுக்கப்பட்ட இம்மரம் 30-க்கும் அதிகமான பேருக்கு இடமளிக்கக்கூடிய ஒரு பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

“தலைகீழான மரம்” ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிரோடிருக்கையில், புத்திக்கூர்மையுள்ள மனிதன் குறுகிய எழுபது ஆண்டுகளே உயிர்வாழ்வது புரியாபுதிராக தோன்றுகிறது. அதிர்ஷ்டவசமான, உயிருள்ள அனைத்தையும் படைத்தவர், தம்முடைய ஜனத்தின் நாட்கள் “விருட்சத்தின் நாட்களைப் போல இருக்கும்” என்பதாகச் சொன்ன தம்முடைய வாக்கை முழுமையாக நிறைவேற்றுவார் என்பதற்கு நமக்கு எல்லா உறுதியும் இருக்கிறது.—ஏசாயா 65:22; சங்கீதம் 90:10. (g90 8/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்