உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 15
  • நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • நம்மை எச்சரிக்கும் உதாரணங்களை கவனத்தில் வைக்க மனமார்ந்த வேண்டுகோள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 15
மோவாபியப் பெண்கள் இஸ்ரவேல் ஆண்களைத் தங்களோடு வரும்படி கூப்பிடுகிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

மோவாப் பாலைநிலத்தில் இஸ்ரவேலர்களுக்கு நடந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். (1கொ 10:6, 8, 11) பாலியல் முறைகேட்டிலும் சிலை வழிபாட்டிலும் ஈடுபடுகிற மோவாப் தேசத்துப் பெண்களோடு இஸ்ரவேலர்கள் சகவாசம் வைத்துக்கொண்டதால் அவர்கள் படு மோசமான பாவக்குழிக்குள் விழுந்துவிட்டார்கள். அதனால், நிறைய பேர் அழிந்துபோனார்கள். (எண் 25:9) நம்மோடு வேலை செய்பவர்கள், பள்ளியில் கூடப்படிப்பவர்கள், அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள், உறவினர்கள், பழக்கமானவர்கள் என நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யெகோவாவை வணங்காதவர்களாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களோடு நெருக்கமாகப் பழகுவதால் வரும் ஆபத்துகளைப் பற்றி இந்த பைபிள் உதாரணம் நமக்கு என்ன பாடம் கற்றுத்தருகிறது?

நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்—சில பகுதிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்​—⁠சில பகுதிகள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. சிம்ரி மோவாபியப் பெண்களைப் பற்றி யாமினிடமும் மற்றவர்களிடமும் சொல்கிறான்.

    சிம்ரியும் மற்றவர்களும் யாமினிடம் பேசியதிலிருந்து அவர்களுக்குள் தவறான எண்ணம் இருந்ததை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

  • ‘நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்​—⁠சில பகுதிகள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. யாமினுக்குப் புரியவைக்கும் விதத்தில் பினெகாஸ் பேசுகிறார்.

    சரியான விதத்தில் யோசிக்க யாமினுக்கு பினெகாஸ் எப்படி உதவினார்?

  • யெகோவாவை வணங்காத ஒருவருடன் நட்புடன் பழகுவதற்கும் அவருடைய நண்பராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

  • சபையில்கூட நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

  • சோஷியல் மீடியாவில் சாட் குரூப்களில் இருக்கிற முன்பின் தெரியாதவர்களை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்