உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 9
  • கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • சோதனைகளைத் தாங்கிக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • சோதனைகளை நாம் எப்படி கருத வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 9
இயேசு பரலோகச் சிம்மாசனத்திலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னணியில், யெகோவாவின் சிம்மாசனம் பிரகாசமாகத் தெரிகிறது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், உங்களுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கும். ஒரு ஒற்றைப் பெற்றோராக இருந்தால், குடும்பத்தைக் கவனிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பள்ளியில் படிப்பவராக இருந்தால், வம்பு செய்கிற பிள்ளைகளின் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அல்லது நீங்கள் மோசமான உடல்நலப் பிரச்சினையோடோ வயதாகிக்கொண்டே போவதால் வரும் பிரச்சினையோடோ போராடிக்கொண்டிருக்கலாம். இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவர்கள் நிறைய பேர் ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து நாம் சீக்கிரத்தில் விடுபடுவோம் என்று நமக்குத் தெரியும்.—2கொ 4:16-18.

இப்போது நாம் படுகிற கஷ்டங்களை யெகோவா புரிந்துகொள்கிறார். கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு அவருக்கு உண்மையாக இருப்பதைப் பார்க்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார். அதோடு, எதிர்காலத்தில் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிக்கப் போகிறார். (எரே 29:11, 12) இது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! நம் ஒவ்வொருவர்மேல் இயேசுவுக்கும் அக்கறை இருக்கிறது. கிறிஸ்தவர்களாக நமக்கிருக்கும் கடமைகளைச் செய்யும்போது, ‘அவர் நம் கூடவே இருப்பார்.’ (மத் 28:20) கடவுளுடைய அரசாங்கத்தில் கிடைக்கப்போகும் விடுதலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, நம்முடைய நம்பிக்கையும் இப்போது படுகிற கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும் பலமாகும்.—ரோ 8:19-21.

புயல் போன்ற பிரச்சினைகள் வரும்போது, இயேசுவின்மீதே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்—எதிர்கால ஆசீர்வாதங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • கடவுளிடமிருந்து மனிதர்கள் எப்படி விலகினார்கள், அதனால் என்ன ஆனது?

  • யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் கிடைக்கப்போகிறது?

  • இந்த அருமையான எதிர்காலம் எப்படிக் கிடைக்கப்போகிறது?

  • புதிய உலகத்தில் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் ஆசையோடு காத்திருக்கிறீர்கள்?

படத்தொகுப்பு: மக்கள் பூஞ்சோலை பூமியில் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். 1. உயிர்த்தெழுப்பப்பட்ட ஒருவரை ஒரு சகோதரி கட்டியணைக்கிறார். 2. மக்களுக்கு ஏராளமான உணவு கிடைக்கிறது, சுத்தமான பூமியில் அவர்கள் சமாதானமாக வாழ்கிறார்கள்.

புதிய உலகில் இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்