கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முடிவு வரப்போகும் இந்தச் சமயத்தில் உறுதியாக நில்லுங்கள்
ஏன் முக்கியம்: சீக்கிரத்தில் பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன. நம்முடைய தைரியத்துக்கும் யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அது ஒரு சோதனையாக இருக்கும். அப்படிப்பட்ட சோதனையை இதுவரை நாம் அனுபவித்திருக்கவே மாட்டோம். பொய் மதங்கள் அழிக்கப்பட்ட உடனே மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும். (மத் 24:21; வெளி 17:16, 17) இதுபோன்ற பயங்கரமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போது நியாயத்தீர்ப்பு செய்தியை நாம் தைரியமாக அறிவித்துக்கொண்டு இருப்போம். (வெளி 16:21) பிறகு, மாகோகு தேசத்தின் கோகு நம்மைத் தாக்குவான். (எசே 38:10-12, 14-16) அப்போது யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார். அந்தச் சமயத்தில்தான் ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ ஆரம்பமாகும். (வெளி 16:14, 16) எதிர்காலத்தில் இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடக்கும்போது நாம் தைரியமாக இருக்க வேண்டுமென்றால் இன்றைக்கு சோதனைகள் வரும்போது நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்:
யெகோவாவுடைய ஒழுக்க நெறிகளைத் தைரியமாகப் பின்பற்றுங்கள்.—ஏசா 5:20
சகோதர சகோதரிகளோடு சேர்ந்து தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள்.—எபி 10:24, 25
யெகோவாவுடைய அமைப்பு தருகிற ஆலோசனைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படியுங்கள்.—எபி 13:17
கடந்தகாலத்தில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள்.—2பே 2:9
யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், அவரை நம்புங்கள்.—சங் 112:7, 8
தைரியத்தோடு சந்திக்க வேண்டிய எதிர்கால சம்பவங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
சபையைப் பிரிப்பது சம்பந்தமாக மூப்பர்கள் எடுத்த தீர்மானத்துக்குக் கீழ்ப்படிய சில பிரஸ்தாபிகளுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது?
தைரியமும் கீழ்ப்படிதலும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன?
அர்மகெதோன் வரும்போது நமக்கு ஏன் தைரியம் தேவை?
எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைத் தைரியமாகச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள்
யெகோவா நம்மை காப்பாற்றுவார் என்று நாம் உறுதியாக நம்புவதற்கு எந்த பைபிள் பதிவு நமக்கு உதவும்?—2நா 20:1-24