உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 பிப்ரவரி பக். 3
  • சிறப்புப் பாடல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிறப்புப் பாடல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • கடவுளிடம் நெருங்கிப்போக உதவும் பாடல்கள்
    உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
  • பாடல்கள் பாடி யெகோவாவைச் சந்தோஷமாகப் புகழுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • தைரியத்தை தரும் ராஜ்ய பாடல்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 பிப்ரவரி பக். 3
சகோதர சகோதரிகள் புல்வெளியில் உட்கார்ந்து சந்தோஷமாக கிட்டார் வாசித்துக்கொண்டே பாடுகிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சிறப்புப் பாடல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

என்னென்ன சிறப்புப் பாடல்கள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்? ஏன்? ஒருவேளை, அந்தச் சிறப்புப் பாடல்களின் வீடியோக்கள் உங்கள் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்து காட்டலாம். வித்தியாசமான தலைப்புகளில், வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இசையில் இந்தப் பாடல்கள் அமைக்கப்படுவதால், இவற்றை ரசிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்தச் சிறப்புப் பாடல்களிலும் அதன் வீடியோக்களிலும் கற்றுக்கொள்வதற்கும்கூட நிறைய இருக்கின்றன.

நம் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் ஒவ்வொரு பாடலிலும் இருக்கின்றன. உபசரிப்பு, ஒற்றுமை, நட்பு, தைரியம், அன்பு அல்லது விசுவாசம் போன்றவற்றின் அடிப்படையில் சில பாடல்கள் இருக்கின்றன. வேறு சில பாடல்கள், யெகோவாவிடம் திரும்பி வருவது, மன்னிப்பது, ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது, யெகோவாவுக்கு அதிகம் செய்வது போன்றவற்றைப் பற்றி இருக்கின்றன. செல்ஃபோனை அளவாகப் பயன்படுத்துவதைப் பற்றிக்கூட ஒரு பாடல் இருக்கிறது. சிறப்புப் பாடல்களிலிருந்து வேறு என்ன பாடங்களை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்?

பூஞ்சோலை நம் கண் எதிரே! என்ற சிறப்புப் பாடலின் வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் என்ன ஆசீர்வாதங்களைப் பற்றி அந்த வயதான தம்பதி யோசித்துப் பார்க்கிறார்கள்?​—ஆதி 12:3

  • கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றுவார் என்பதில் நாம் எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்தலாம்?

  • சீக்கிரத்தில் நாம் யாரை மறுபடியும் பார்ப்போம்?

  • கடவுளுடைய அரசாங்கம் வரும் என்பதில் நம்பிக்கையாக இருப்பது, நாம் அனுபவித்துவரும் கஷ்டங்களைச் சமாளிக்க நமக்கு எப்படி உதவும்?​—ரோ 8:25

குடும்ப வழிபாட்டில் செய்துபாருங்களேன்!

பின்வரும் சிறப்புப் பாடலின் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: இந்த வீடியோவிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? என்னுடைய வாழ்க்கையில் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

  • பயப்படாதே!

  • ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்

  • உபசரிப்போம்

  • முன்னேறுவோம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்