மே 27–ஜூன் 2
கலாத்தியர் 1-3
பாட்டு 72; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன்”: (10 நிமி.)
[கலாத்தியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
கலா 2:11-13—யூத கிறிஸ்தவர்கள் தன்னைச் சந்தித்தபோது, மற்ற தேசத்தைச் சேர்ந்த சகோதரர்களோடு பழகுவதை பேதுரு நிறுத்திவிட்டார்; மனித பயத்தால்தான் இப்படிச் செய்தார் (w17.04 பக். 27 பாரா 16)
கலா 2:14—பவுல் பேதுருவைத் திருத்தினார் (w13 3/15 பக். 5 பாரா 12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
கலா 2:20—மீட்புவிலையை நீங்கள் எப்படிக் கருத வேண்டும், ஏன்? (w14 9/15 பக். 16 பாரா. 20-21)
கலா 3:1—கலாத்தியர்களை பவுல் ஏன் ‘புத்தியில்லாதவர்கள்’ என்று சொன்னார்? (it-1-E பக். 880)
கலாத்தியர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) கலா 2:11-21 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 2)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 202 பாரா. 18-19 (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“வணக்கத்துக்காக கூடிவரும் இடங்களைப் பராமரிக்க நாம் எல்லாரும் என்ன செய்யலாம்?”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. நம்முடைய ராஜ்ய மன்றங்களை நன்றாகப் பராமரிக்க என்ற வீடியோவைக் காட்டிவிட்டு கேள்விகளைக் கலந்துபேசுங்கள். பிறகு, ராஜ்ய மன்ற செயற்குழு பிரதிநிதியை சுருக்கமாகப் பேட்டி எடுங்கள். (உங்கள் சபையில் ஒரு பிரதிநிதி இல்லை என்றால், மூப்பர் குழு ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி எடுங்கள். ராஜ்ய மன்றத்தை உங்கள் சபை மட்டும் பயன்படுத்தினால், ராஜ்ய மன்ற பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி எடுங்கள்.) ராஜ்ய மன்ற பராமரிப்பு அட்டவணை சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? பாதுகாப்பாக வேலை செய்கிறோமா? சமீபத்தில் என்ன பராமரிப்பு வேலை செய்யப்பட்டது, எதிர்காலத்தில் என்ன திட்டங்கள் இருக்கின்றன? பராமரிப்பு வேலைகள் செய்வதில் யாருக்காவது திறமைகள் இருந்தாலோ திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆசைப்பட்டாலோ என்ன செய்ய வேண்டும்? நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலையில் எப்படிக் கலந்துகொள்ளலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 19 பாரா. 8-18, பெட்டி “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 126; ஜெபம்