நவம்பர் 12-18
அப்போஸ்தலர் 1-3
பாட்டு 71; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கிறிஸ்தவ சபையின்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது”: (10 நிமி.)
[அப்போஸ்தலர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
அப் 2:1-8, 14, 37, 38, 41—கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு, இயேசுவின் சீஷர்கள் வைராக்கியமாக சாட்சி கொடுத்தார்கள். அதனால், 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள்
அப் 2:42-47—இயேசுவின் சீஷர்கள் தாராள குணத்தையும் உபசரிக்கும் குணத்தையும் காட்டியதால், புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள், நிறைய நாட்கள் எருசலேமிலேயே தங்கி தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டார்கள் (w87 9/1 பக். 28 பாரா. 4-5, 7)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
அப் 3:15—‘வாழ்வின் அதிபதி’ என்று இயேசு ஏன் அழைக்கப்படுகிறார்? (it-2-E பக். 61 பாரா 1)
அப் 3:19—மனம் திருந்தும் பாவிகளை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்று இந்த வசனம் சொல்கிறது? (cl பக். 265 பாரா 14)
அப்போஸ்தலர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 2:1-21
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) it-1-E பக். 129 பாரா. 2-3—பொருள்: உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்ட அப்போஸ்தலர்கள் இறந்தபோது, அவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, யூதாசுக்குப் பதிலாக ஏன் இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பல மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் ஒன்றுசேர்ந்து உழைத்தல்”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள். பல மொழிகள் பேசப்படும் பகுதிகளில் ஊழியம் செய்ய உங்கள் சபையில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 10 பாரா. 12-19, பெட்டிகள் “சிலுவை பற்றி படிப்படியாகக் கிடைத்த விளக்கங்கள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 5; ஜெபம்