உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஆகஸ்ட் பக். 7
  • உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க உழையுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்கு இருப்பதாக!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்”
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • ‘இந்தச் சிறியவர்களை’ புண்படுத்திவிடாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஆகஸ்ட் பக். 7
தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு பேசுகிறார்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்

பாவ இயல்புள்ள மனிதர்களுக்காக இயேசு தன் உயிரைத் தியாகம் செய்தார். (ரோ 5:8) இயேசு நமக்காகத் தன் உயிரைக் கொடுத்ததன் மூலம் நம்மேல் வைத்திருந்த அன்பைக் காட்டியிருக்கிறார்; அதற்காக, நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நம் சகோதரர்களுக்காகவும் அவர் தன் உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் போலவே பாவ இயல்புள்ள நம் சகோதர சகோதரிகளிடம் நாம் எப்படிக் கிறிஸ்துவைப் போல அன்பு காட்டலாம்? அதற்கான மூன்று வழிகள்: ஒன்று, நட்பு வட்டாரத்தை நாம் விரிவாக்க வேண்டும்; வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருப்பவர்களிடமும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். (ரோ 15:7; 2கொ 6:12, 13) இரண்டு, மற்றவர்கள் புண்படுகிற விதத்தில் நாம் எதையாவது செய்துவிடாமல் இருக்க அல்லது சொல்லிவிடாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். (ரோ 14:13-15) மூன்று, யாராவது நமக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டால், உடனடியாக அவர்களை மன்னிக்க வேண்டும். (லூ 17:3, 4; 23:34) இந்த வழிகளில் நாம் இயேசுவைப் பின்பற்ற கடினமாக முயற்சி செய்தால், சபையை யெகோவா ஆசீர்வதிப்பார்; சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் சபையில் பஞ்சமே இருக்காது.

இன்னும் அழகாகுங்கள்! என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • புதிய சபையில் மிக்கிக்கு வரவேற்பு கிடைக்கிறது

    தன்னுடைய சபையைப் பற்றி மிக்கி ஆரம்பத்தில் எப்படி உணர்ந்தார்?

  • புதிய சபையில் மிக்கிக்கு வரவேற்பு கிடைக்கிறது

    அவருடைய எண்ணங்கள் மாறியதற்கு எது காரணமாக இருந்தது?

  • தன்னுடைய அப்போஸ்தலர்கள் தூங்கிவிட்டபோதிலும், இயேசு அவர்கள்மேல் அன்பு காட்டினார்

    தான் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள இயேசுவின் உதாரணம் மிக்கிக்கு எப்படி உதவியது? (மாற் 14:38)

  • ஒரு சின்னப் பையன் தன்மேல் மோதியதால், தன்னுடைய டம்ளரில் இருந்த பானம் தன் உடையில் சிந்திவிட்டபோதிலும் மிக்கி சிரிக்கிறார்

    சகோதர சகோதரிகளைப் பற்றி நல்ல விதமாக நினைக்க நீதிமொழிகள் 19:11 எப்படி நமக்கு உதவுகிறது?

தியானிப்பதற்கு:

சகோதர சகோதரிகள் செய்கிற எந்த மாதிரியான தவறுகளை நான் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்