ஜூலை 30–ஆகஸ்ட் 5
லூக்கா 14-16
பாட்டு 21; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“காணாமல்போன மகனைப் பற்றிய உவமை”: (10 நிமி.)
லூ 15:11-16—அடங்காப்பிடாரியான ஒரு மகன், மோசமான வாழ்க்கை வாழ்ந்து தன்னிடமிருந்த சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவு செய்தான் (“ஒரு மனுஷருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்,” “இளைய மகன்,” “ஊதாரித்தனமாகச் செலவழித்தான்,” “மோசமான வாழ்க்கை,” “பன்றிகளை மேய்க்க,” “பன்றித் தீவனம்” என்ற லூ 15:11-16-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
லூ 15:17-24—அவன் மனம் திருந்தி வந்தான்; அவனுடைய அன்பான அப்பா, அவனை ஏற்றுக்கொண்டார் (“உங்களுக்கும் விரோதமாக,” “கூலியாட்களில்,” “முத்தம் கொடுத்தார்,” “எனக்கு அருகதையில்லை, “அங்கியை[யும்] . . . மோதிரத்தையும் . . . செருப்பையும் போட்டுவிடுங்கள்” என்ற லூ 15:17-24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
லூ 15:25-32—மூத்த மகனுடைய எண்ணம் சரிசெய்யப்பட்டது
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
லூ 14:26—இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘வெறுப்பது’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? (“வெறுக்கவில்லை” என்ற லூ 14:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 16:10-13—‘அநீதியான செல்வங்கள்’ பற்றி குறிப்பிட்டபோது, இயேசு என்ன சொல்லவந்தார்? (w17.07 பக். 8-9 பாரா. 7-8)
லூக்கா 14 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 14:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lvs பக். 37 பாரா. 14-15
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊதாரி மகன் திருந்துகிறான்” : (15 நிமி.) ஊதாரி மகன் திருந்துகிறான்-சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 5 பாரா. 18-25, பெட்டி பக். 57
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 46; ஜெபம்