கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கிறிஸ்துவைப் பின்பற்ற உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துங்கள்
பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, ‘தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றுவதை’ பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! (மாற் 8:34; 3யோ 4) தங்களுடைய பிள்ளைகள் இயேசுவைப் பின்பற்றவும், யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும், ஞானஸ்நானம் எடுக்கவும் பெற்றோர்கள் எப்படி அவர்களைத் தயார்படுத்தலாம்? ஞானஸ்நானம் என்ற முக்கியமான படியை எடுக்க உங்கள் பிள்ளைகள் தயாராகிவிட்டார்களா என்பதை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் (ஆங்கிலம்) புத்தகத்தில், பக்கங்கள் 165-166-ல் இருக்கிற “கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு” என்ற தலைப்பின் கீழ் இருக்கும் தகவல்களைப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லுங்கள்: