ஏப்ரல் 30-மே 6
மாற்கு 5-6
பாட்டு 111; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது”: (10 நிமி.)
மாற் 5:38—நம் அன்பானவர்களின் மரணம் நமக்கு வேதனையைத் தருகிறது
மாற் 5:39-41—மரணத்தில் ‘தூங்கிக்கொண்டிருப்பவர்களை’ உயிரோடு கொண்டுவரும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது (“சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்” என்ற மாற் 5:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மாற் 5:42—எதிர்காலத்தில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதல் நமக்கு ‘அளவில்லாத சந்தோஷத்தை’ தரும் (jy பக். 118 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 5:19, 20—வழக்கமாகக் கொடுக்கும் அறிவுரைகளை இயேசு ஏன் இந்தச் சமயத்தில் கொடுக்கவில்லை? (“சொந்தக்காரர்களிடம் சொல்” என்ற மாற் 5:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மாற் 6:11—“உங்கள் பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” என்பதன் அர்த்தம் என்ன? (“உங்கள் பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” என்ற மாற் 6:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மாற்கு 5 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 6:1-13
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேச ஆரம்பியுங்கள். jw.org வெப்சைட்டைக் காட்டுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே வசனத்தையும், மறுசந்திப்புக்கான கேள்வியையும் தேர்ந்தெடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 36 பாரா. 23-24—மனதைத் தொடும் விதத்தில் படிப்பை நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்துக்கான கருவிகளைத் திறமையாகப் பயன்படுத்துங்கள்”: (5 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவாவின் அமைப்பில் ஆறுதலை கண்டடைதல்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: பெராஸ் தம்பதிக்கு வந்த சில சோதனைகள் என்ன? சகிப்பதற்கு எது அவர்களுக்கு உதவியது? சோதனைகள் வரும்போது ஆன்மீகக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவது ஏன் ரொம்ப முக்கியம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 1 பாரா. 1-10, ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 30; ஜெபம்