கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பிரசங்கிப்பதும் கற்பிப்பதும்—சீஷர்களாக்குவதற்கு அவசியம்
புறப்பட்டுப் போய் சீஷர்களாக்கும்படி தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். (மத் 28:19) இதில் பிரசங்கிப்பதும் கற்பிப்பதும் அடங்கியிருக்கின்றன. அதனால், ‘சீஷராக்குற வேலையில அடங்கியிருக்கிற இந்த முக்கியமான அம்சங்கள்ல நான் எப்படி முன்னேறலாம்?’ என்று நாம் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும்.
பிரசங்கிப்பது
மக்கள் நம்மிடம் வரட்டுமென்று நினைக்காமல், ‘தகுதியுள்ளவர்களை’ நாம் சுறுசுறுப்பாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (மத் 10:11) ஊழியம் செய்யும்போது, நாம் ‘சந்திக்கிற’ எல்லாரிடமும் பேச வாய்ப்புகளைத் தேடுகிறோமா? (அப் 17:17) அப்போஸ்தலன் பவுல் வைராக்கியமாக ஊழியம் செய்ததால்தான் லீதியாள் சிஷ்யையாக ஆனாள்.—அப் 16:13-15.
“காலையில் விதை விதைக்கத் தொடங்கு, சாயங்காலம்வரை கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு” (பிர 11:6)
“இடைவிடாமல்” தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்—சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் மற்றும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
தன்னுடைய தினசரி வாழ்க்கையில், சத்திய விதைகளைச் சுறுசுறுப்பாக விதைக்க சாமுவேல் எப்படி வாய்ப்புகளைத் தேடுகிறார்?
நாம் ஏன் சோர்ந்துவிடாமல் எல்லா விதமான ஊழியத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்?
உங்களுடைய தினசரி வாழ்க்கையில் நீங்கள் யாரிடமெல்லாம் சத்தியத்தைப் பற்றிப் பேசலாம்?
கற்பிப்பது
சீஷர்களாக்குவதற்கு வெறுமனே பிரசுரங்களைக் கொடுத்தால் மட்டும் போதாது. ஆன்மீக ரீதியில் முன்னேற மக்களுக்கு உதவ வேண்டுமென்றால், மறுசந்திப்புகளைச் செய்து, அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும். (1கொ 3:6-9) மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நாம் ஊக்கமாக முயற்சி செய்தும், பெரிதாக ஒன்றும் பலன் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? (மத் 13:19-22) “நல்ல நிலத்தை” போன்ற இதயம் உள்ளவர்களை நாம் தொடர்ந்து தேட வேண்டும்.—மத் 13:23; அப் 13:48.
“நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினார். ஆனால், கடவுள்தான் வளர வைத்தார்” (1கொ 3:6)
“இடைவிடாமல்” தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்—பொது ஊழியத்தில் மற்றும் சீஷர்கள் ஆக்குவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
எசேக்கியேல் மற்றும் அபிகாயிலின் இதயத்தில் விதைக்கப்பட்டிருந்த சத்திய விதைக்கு சாலொமோனும் மேரியும் எப்படித் தண்ணீர் ஊற்றினார்கள்?
பொது ஊழியம் உட்பட, ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் ஈடுபடும்போது நாம் என்ன குறிக்கோளோடு இருக்க வேண்டும்?
சத்தியத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு நாம் எப்படி இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்?