ஆகஸ்ட் 28-செப்டம்பர் 3
எசேக்கியேல் 39-41
பாட்டு 107; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனமும் நீங்களும்”: (10 நிமி.)
எசே 40:2—யெகோவாவின் வணக்கம் மற்ற எல்லா வணக்கத்தையும்விட உயர்த்தப்பட்டிருக்கிறது (w99 3/1 பக். 11 பாரா 16)
எசே 40:3, 5—உண்மை வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட தன் விருப்பத்தை யெகோவா கண்டிப்பாக நிறைவேற்றுவார் (w07 8/1 பக். 10 பாரா 2)
எசே 40:10, 14, 16—யெகோவா விரும்புகிற விதத்தில் அவரை வணங்குவதற்கு, அவருடைய நீதியான, உயர்ந்த தராதரங்களின்படி நாம் வாழ வேண்டும் (w07 8/1 பக். 11 பாரா 5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 39:7—அநியாயங்கள் நடப்பதற்குக் கடவுள்தான் காரணம் என்று மனிதர்கள் சொல்லும்போது, அவருடைய பெயரை எப்படிக் களங்கப்படுத்துகிறார்கள்? (w12-E 9/1 பக். 21 பாரா 2)
எசே 39:9—அர்மகெதோனுக்குப் பிறகு, தேசங்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள் என்ன செய்யப்படும்? (w90 4/1 பக். 14 பாரா 20)
எசேக்கியேல் 39 முதல் 41 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 40:32-47
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg பாடம் 1 பாரா 1—சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுவதுபோல் ஆரம்பியுங்கள் (ஆனால், அதைப் போட்டுக் காட்டாதீர்கள்). சிற்றேட்டை அளியுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) fg பாடம் 1 பாரா 2—அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 1 பாரா. 3-4
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அடுத்து எப்போது நான் துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவா என்கூட இருந்தா போதும் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 6 பாரா. 16-23
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 83; ஜெபம்