ஜூலை 10-16
எசேக்கியேல் 15–17
பாட்டு 11; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றுகிறீர்களா?”: (10 நிமி.)
எசே 17:1-4—பாபிலோனின் ராஜா, யோயாக்கீனை நீக்கிவிட்டு சிதேக்கியாவை ராஜாவாக்கினான் (w07 7/1 பக். 12 பாரா 7)
எசே 17:7, 15—கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் சிதேக்கியா எகிப்திடம் ராணுவ உதவி கேட்டு போனான் (w07 7/1 பக். 12 பாரா 7)
எசே 17:18, 19—கொடுத்த வாக்கை சிதேக்கியா காப்பாற்ற வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார் (w12 10/15 பக். 30 பாரா 11; w88 11/1 பக். 17 பாரா 8)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 16:60—‘நிரந்தரமான ஒப்பந்தம்’ எதைக் குறிக்கிறது? அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? (w88 11/1 பக். 17 பாரா 7)
எசே 17:22, 23—யெகோவா நட்டு வைப்பதாக சொன்ன ‘கிளையின் கொழுந்து’ யார்? (w07 7/1 பக். 12 பாரா 7)
எசேக்கியேல் 15 முதல் 17 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 16:28-42
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) ஏதாவது ஒரு சிற்றேடு—சிற்றேடோடு சம்பந்தப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு பேச்சை ஆரம்பியுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏதாவது ஒரு சிற்றேடு—முதல் சந்திப்பில் கொடுத்த சிற்றேட்டிலிருந்து, அந்த நபர் ஆர்வம் காட்டும் விஷயத்தைப் பற்றி பேசுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதிலிருக்கும் குறிப்புகளை கலந்து பேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.)
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 11 பாரா. 1-2—கூட்டத்துக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்பட்டாலும் திருமணத்தின்போது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள்: (10 நிமி.) ஏப்ரல் 2014 விழித்தெழு! பக்கங்கள் 14-15-லிருக்கும் தகவலின் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
யெகோவாவின் நண்பனாகு!—உண்மையை பேசுங்க: (5 நிமி.) முதலில் வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பிள்ளைகள் என்ற தலைப்பில் பாருங்கள்). பிறகு, சில பிள்ளைகளை மேடைக்கு அழைத்து வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பிற்சேர்க்கை பக். 239-242
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 86; ஜெபம்