அறிவிப்புகள்
◼ மே, ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? அல்லது பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி, கஷ்டங்களுக்கு முடிவு வருமா?, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை நடித்துக் காட்டுங்கள். ஜூலை: கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றைக் கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்.
◼ செப்டம்பர் 1, 2014-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பில் என்னுடைய பைபிள் கதை புத்தகம் கலந்தாலோசிக்கப்படும். சபைகளுக்கு இந்தப் புத்தகம் தேவைப்பட்டால், அடுத்த முறை அனுப்பப்போகும் பிரசுர ரிக்வெஸ்டில் இதைக் குறிப்பிட வேண்டும்.