உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/14 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 3/14 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மே, ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? அல்லது பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி, உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா?, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை நடித்துக் காட்டுங்கள்.

◼ நினைவுநாள் அனுசரிப்பு ஏப்ரல் 14, 2014 திங்கள்கிழமை நடைபெறும். உங்கள் சபைக் கூட்டம் பொதுவாக திங்கள்கிழமை நடைபெற்றால் ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொறுத்து அதை வாரத்தின் வேறொரு நாளுக்கு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். ஊழியக் கூட்டத்தை நடத்த முடியாவிட்டால், அதில் உங்களுடைய சபைக்கு அவசியமாக இருக்கும் தகவல்களை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அந்த மாதத்தில் நடக்கும் வேறொரு ஊழியக் கூட்டத்தின்போது கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யலாம்.

◼ 2014 ஊழிய ஆண்டின் பிற்பகுதியின்போது வட்டாரக் கண்காணி கொடுக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு: “வேதனையில்லா உலகம் விரைவில்!”

◼ ஜூன் 30, 2014-ல் துவங்கும் வாரத்திலிருந்து, சபை பைபிள் படிப்பில் இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? சிற்றேட்டைப் படிப்போம். அதன்பின், செப்டம்பர் 8, 2014-ல் துவங்கும் வாரத்திலிருந்து என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் படிப்போம். அடுத்தமுறை பிரசுரங்களை ரிக்வெஸ்ட் செய்யும்போது, சபைகள் இவற்றையும் சேர்த்து ரிக்வெஸ்ட் செய்ய வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்