அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். பிள்ளைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும் 1992-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்), நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு ஆகிய புத்தகங்களில் ஒன்றை அளியுங்கள்.
◼ ஜனவரி 1, 2009 முதற்கொண்டு “நடத்தும் கண்காணி” என்ற பெயர் பயன்படுத்தப்படாது. அந்தப் பொறுப்பைக் கையாளுபவர் இனி “மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்” என அழைக்கப்படுவார்.