உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/08 பக். 2-3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 6/08 பக். 2-3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: கடவுளைத் தேடி அல்லது பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தை அளியுங்கள். சபையின் கையிருப்பில் இந்தப் புத்தகங்கள் இல்லையென்றால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தைக் கொடுக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், இறைவன் வழி​—⁠இன்பவனம் செல்லும் இனிய வழி, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏற்கெனவே இந்தப் புத்தகம் வீட்டுக்காரரிடம் இருந்தால் பைபிள் படிப்பிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதை அவருக்குச் சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள்.

◼ ஆகஸ்ட் மாதம் ஐந்து வார இறுதி நாட்கள் இருப்பதால், துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு மிகச் சிறந்த மாதம்.

◼ நடத்தும் கண்காணியால் நியமிக்கப்பட்ட ஒருவர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.​—⁠சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL) என்பதைக் காண்க.

◼ எந்தத் தேதியிலிருந்து ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்கிறார்களோ அந்தத் தேதியிலிருந்து 30 நாட்கள் முன்பாகவாவது கிளை அலுவலகத்திற்கு அவர்களுடைய விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சபை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி சரியாக நினைவில்லாதிருந்தால் உத்தேசமாக ஒரு தேதியை எழுத வேண்டும், அதை அவர் குறித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேதியை செயலர், சபை பிரஸ்தாபியின் பதிவு (S-21-TL) அட்டையில் குறித்து வைக்க வேண்டும்.

◼ ஜனவரி 2008 முதல், காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களின் ஆடியோ ஃபைல்கள் ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் www.jw.org. என்ற வெப்ஸைட்டில் கிடைக்கின்றன. இவை சிடி அல்லது MP3 டிஸ்குகளாக சபைகளுக்கு வருமுன் இவற்றை டௌன்லோட் செய்யவே அநேகர் விரும்புகிறார்கள். ஒவ்வொரு முறை யாராவது டௌன்லோட் செய்யும்போது, அதற்கான கட்டணத்தை அமைப்பு செலுத்த வேண்டியிருந்தாலும், டிஸ்குகளைத் தயாரித்து அனுப்புவதற்கு ஆகும் செலவோடு ஒப்பிட இது குறைவாகவே இருக்கிறது. ஆகவே, பத்திரிகைகளை இப்படி டௌன்லோட் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள், சிடி அல்லது MP3 டிஸ்குகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்வதாக பத்திரிகை ஊழியரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இன்னும் பல மொழிகளில் ஆடியோ வெளியீடுகள் www.jw.org. வெப்ஸைட்டில் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

◼ பேரழிவுகளுக்காக தயாராயிருத்தல் சம்பந்தமாக வந்த ஜூலை 6, 2006 தேதியிட்ட கடிதத்தை மூப்பர் குழுக்கள் மறுபார்வை செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரஸ்தாபியையும் தொடர்புகொள்வதற்கு வேண்டிய சரியான தகவல்கள் தங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி பேரழிவுகள் நடக்கும் இடங்களில் வசிக்கும் சகோதரர்களை அவசர காலத்தில் தொடர்புகொள்ள கூடுதலான தகவல்களையும் வைத்திருக்க வேண்டும். அவசர காலகட்டங்களில் மட்டுமல்ல, பிரஸ்தாபிகள் விடுமுறையை களிக்க, வேலை சம்பந்தமாக அல்லது பிற காரணங்களுக்காக அநேக நாட்களுக்கு வெளியூர் சென்றாலோ, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தாலோ சபை புத்தகப் படிப்பு கண்காணியிடம் அல்லது வேறொரு மூப்பரிடம் தெரிவித்துச் சென்றால் மூப்பர்களுக்கு உதவியாயிருக்கும்.

◼ 2008 மாவட்ட மாநாட்டை விளம்பரப்படுத்த விசேஷ அழைப்பிதழ்கள் எதுவும் வினியோகிக்கப்படாது என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். இருந்தாலும், விரைவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய வினியோகிப்புக்காக நாங்கள் திட்டமிடுகிறோம். இது பற்றிய கூடுதல் தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

◼ மீண்டும் கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

‘என்னைப் பின்பற்றிவாருங்கள்’​—⁠பெரிய எழுத்து பதிப்பு ​—⁠ஆங்கிலம்

சபையார் கவனத்திற்கு: இந்தப் பதிப்பு விசேஷ தருவிப்பு பிரசுரமாக இருப்பதால், கண்பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறிய எழுத்தை வாசிக்க சிரமப்படுகிறவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். ஆகவே, கண்பார்வைக் கோளாறு உள்ள பிரஸ்தாபிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே இதை தருவிக்க வேண்டும். இந்தப் பதிப்பு உண்மையிலேயே அவசியம்தானா என்பதை ஊழியக் குழு சரிபார்த்த பின்னரே பிரசுர ஆர்டரை சொஸைட்டிக்கு அனுப்ப வேண்டும்.

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) ​—⁠ரஷ்யன், ஸ்பானிஷ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்