அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: 1991-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை அல்லது 192 பக்க புத்தகங்களில் எவையேனும் பழுப்பேறியோ, நிறம் மாறியோ உள்ளன என்றால் அவற்றை அளிக்கலாம். இப்படிப்பட்ட புத்தகங்கள் சபைகளின் கையிருப்பில் இல்லையென்றால், அறிவு புத்தகத்தை (கையிருப்பில் இருந்தால்) பயன்படுத்தலாம் அல்லது விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தலாம். பிப்ரவரி: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கிலப் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஊக்கமாக முயலுங்கள். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கலாம். சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கும் மட்டுமே வந்த ஆர்வமுள்ள நபர்களை மீண்டும் சந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கலாம். அவ்வாறு சந்திக்கையில், அவர்களுக்கு ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தப்படவில்லை என்றால், ஒரு படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ மார்ச் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால், துணை பயனியர் செய்வதற்கு அது சிறந்த மாதமாயிருக்கும்.
◼ பிப்ரவரியிலிருந்து மார்ச் 2-ஆம் தேதிக்குள் வட்டாரக் கண்காணிகள் புதிய பொதுப் பேச்சைக் கொடுக்கத் துவங்குவர்; அதன் தலைப்பு, “கஷ்ட காலத்தில் எங்கிருந்து உதவியைப் பெறலாம்?”
◼ இந்த வருடம் மார்ச் 22, சனிக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களைச் சுற்றி அனுப்புவதைச் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவு ஆசரிப்பை அனுசரிக்க வேண்டும். என்றாலும், எப்பொழுதுமே அவ்வாறு நடத்த முடியாதிருக்கலாம். பொதுவாக, ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில், வேறொரு இடம் பார்த்து அதில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கூட்டுறவு கொள்வதிலிருந்தும் எல்லாரும் முழுமையாகப் பயன் அடைவதற்கு வசதியாக, ஆசரிப்பை அடுத்த சபை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் குறைந்தபட்சம் 40 நிமிட இடைவெளி விடும்படி கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு வருகிறவர்களை இறக்கிவிடுவது ஏற்றிச்செல்வது உட்பட, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் நிறுத்தும்போதும் நெரிசலை ஏற்படுத்திவிடாதபடியும் கவனமாயிருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தவை என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
◼ சபையிலுள்ள ஒழுங்கான பயனியர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க பயனியர் நியமிப்பு கடிதம் (S-202) இருப்பதை செயலர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதைக் குறித்து கிளை அலுவலகத்திற்கு அவர் கடிதம் எழுத வேண்டும்.