தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 31, 2007-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 5 முதல் டிசம்பர் 31, 2007 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்தது.
பேச்சு பண்புகள்
1. முடிவுரை பயனுள்ளதாக இருப்பதற்கு என்ன குறிப்புகளை நாம் மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 221 பாரா. 1-4]
2. வெளி ஊழியத்தில் நாம் சொல்லும் தகவல் திருத்தமானது என்பதை எவ்வாறு உறுதிசெய்து கொள்ளலாம்? [be-TL பக். 223 பாரா. 2-4]
3. கூட்டங்களில் நாம் கொடுக்கும் பேச்சுக்களில், “சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற” சபைக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்? (1 தீ. 3:15) [be-TL பக். 224 பாரா. 1-4]
4. தகவலின் நம்பகத்தன்மையை பரிசோதிப்பது ஏன் முக்கியம், அதை நாம் எவ்வாறு செய்யலாம்? [be-TL பக். 225 பாரா. 1-2]
5. போதிக்கும்போது, மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எப்படிப் பேசலாம்? [be-TL பக். 226 பாரா 3-பக். 227 பாரா 1]
பேச்சு நியமிப்பு 1
6. யோனாவின் விவரப்பதிவு நம்பகமானது என எது நிரூபிக்கிறது? [si-TL பக். 153 பாரா 3]
7. மீகாவின் எந்தத் தீர்க்கதரிசனம் கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்ய ஆட்சியோடு தொடர்புடையதாய் இருக்கிறது? [si-TL பக். 158 பாரா 18]
8. ஆபகூக் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது? [si-TL பக். 161 பாரா 4]
9. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்ததன் நோக்கத்தை பொ.ச.மு. 520 வரை யூதர்கள் நிறைவேற்றவில்லை என ஏன் சொல்லலாம்? (ஆகா. 1:4) [si-TL பக். 166 பாரா 3]
10. என்ன மகிமையான ‘நாளைப்’ பற்றி சகரியா திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார்? [si-TL பக். 172 பாரா 26]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. பூச்சிகளின் படையெடுப்பைப் பற்றிய யோவேலின் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் எவ்வாறு நிறைவேறியது, இப்போது எவ்வாறு நிறைவேறிக்கொண்டிருக்கிறது? (யோவே. 2:1-10, 28) [w-TL07 10/1 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது— யோவேல், ஆமோஸ் புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
12. “[“கோடைக்காலத்தின்,” NW] பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை” எதை அர்த்தப்படுத்தியது? (ஆமோ. 8:1, 2) [w-TL07 10/1 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது— யோவேல், ஆமோஸ் புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
13. யெகோவா என்ன அர்த்தத்தில், ‘நினிவே மக்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டார்,’ இது நம்மை எப்படிப் பாதிக்க வேண்டும்? (யோனா 3:10) [w-TL03 7/15 பக். 17-18]
14. யெகோவாவின் பெயரில் நடப்பது என்றால் என்ன? (மீ. 4:5) [w-TL03 8/15, பக். 17 பாரா 19]
15. நவீன காலத்தில் நியாயந்தீர்க்க யெகோவா எப்பொழுது, எவ்வாறு தம்முடைய “ஆலயத்துக்கு” வந்தார்? (மல். 3:1-3) [re-TL பக். 32 பெட்டி; jd பக். 179 பாரா 3-பக். 181 பாரா 6]