அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் இந்தப் புத்தகத்தை அளியுங்கள். ஜூன்: குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்). வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.
◼ உலகளாவிய வேலைக்காக மாவட்ட மாநாடுகளில் நன்கொடையாக கொடுக்கப்படும் செக்குகளும், டிமாண்டு டிராஃப்ட்டுகளும் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறவைகளும் “Watch Tower Bible and Tract Society of India”-வின் பெயரிலும் பெங்களூரில் செலுத்தப்படும்படியாகவும் எடுக்கப்பட வேண்டும்.
◼ பேரழிவுகளுக்காக தயாராயிருத்தல் சம்பந்தமாக வந்த ஜூலை 6, 2006 தேதியிட்ட கடிதத்தை மூப்பர் குழுக்கள் மறுபார்வை செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரஸ்தாபியையும் தொடர்புகொள்வதற்கு வேண்டிய சரியான தகவல்கள் தங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி பேரழிவுகள் நடக்கும் இடங்களில் வசிக்கும் சகோதரர்களை அவசர காலத்தில் தொடர்புகொள்ள கூடுதலான தகவல்களையும் வைத்திருக்க வேண்டும். அவசர காலகட்டங்களில் மட்டுமல்ல, பிரஸ்தாபிகள் விடுமுறையை களிக்க, வேலை சம்பந்தமாக அல்லது பிற காரணங்களுக்காக அநேக நாட்களுக்கு வெளியூர் சென்றாலோ, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தாலோ சபை புத்தகப் படிப்பு கண்காணியிடம் அல்லது வேறொரு மூப்பரிடம் தெரிவித்துச் சென்றால் மூப்பர்களுக்கு உதவியாயிருக்கும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
“வேதாகமம் முழுவதும்”—நம்பத்தக்கது, நன்மை அளிப்பது, சிற்றேடு 2 (2007 நம் ராஜ்ய ஊழியப் பள்ளியில் பயன்படுத்தப்படும் சிற்றேடு) —கன்னடம், தெலுங்கு, ஹிந்தி