தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 30, 2007-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் மறுபார்வைக் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 5 முதல் ஏப்ரல் 30, 2007 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. நம் பேச்சு குறிப்புத்தாளை எவ்வாறு எளிமையாக வைத்துக்கொள்ளலாம்? [be-TL பக். 168 பாரா 4]
2. தகவல்களைத் தர்க்க ரீதியில் ஒழுங்கமைப்பதற்கு உதவும் நான்கு வழிகளைக் குறிப்பிடுங்கள். [be-TL பக். 170 பாரா 3–பக். 172 பாரா 4]
3. ஒரு பேச்சில் சேர்த்துக்கொள்ள வேண்டிய குறிப்புகளைத் தீர்மானிக்கையில் எந்த அம்சங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 173 பாரா. 1-2]
4. மனதிலிருந்து பேசும் முறையால் பெறும் நன்மைகள் சில யாவை? [be-TL பக். 175 பாரா. 3-5]
5. உரையாடல் முறையில் பேசுவது ஏன் முக்கியம், இந்தப் பண்பை எப்படி வளர்க்கலாம்? [be-TL பக். 179 பாரா 4, பெட்டி; பக். 180, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சிறப்பு குறிப்புகளைக் கையாளும் ஒரு சகோதரர் எப்படித் தயாரிக்க வேண்டும்? [be-TL பக். 47 பாரா. 3-4]
7. கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலமாக நாம் பெறுகிற நன்மைகளைவிட எது மிகவும் முக்கியம்? [w-TL05 11/1 பக். 14 பாரா 1]
8. கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப் பொதுப் பேச்சின்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும்? [be-TL பக். 53 பாரா. 1-2]
9. ஒரு போதகராக இயேசுவின் குறிக்கோள் என்னவாக இருந்தது, இவ்விஷயத்தில் நாம் எவ்வாறு அவரைப் பின்பற்றலாம்? [be-TL பக். 57 பாரா 1]
10. கற்பிப்பதில் வேறுபடுத்திக் காட்டுவது ஏன் பயனுள்ளது? [be-TL பக். 57 பாரா. 3-4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. “பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து” அதிலே நடக்கும்படியாக எரேமியா 6:16-ல் கொடுக்கப்பட்ட புத்திமதியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
12. விசுவாசமற்ற யூதர்களுக்குப் பாடம் புகட்ட யெகோவா ஏன் நாரையை உதாரணமாகப் பயன்படுத்தினார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எரே. 8:7)
13. இன்றைய பொழுதுபோக்கு விஷயத்தில் எரேமியா 15:17-ல் உள்ள நியமத்தை நாம் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?
14. மனிதர் எவ்வாறு பெரிய குயவரான யெகோவாவின் கைகளில் உள்ள களிமண்ணைப்போல் இருக்கிறார்கள்? (எரே. 18:5-11)
15. எரேமியா 25:17-26-ல் பட்டியலிடப்பட்டுள்ள தேசங்களின் வரிசை, நம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?