அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ஆம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192-பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அதை அளிக்கலாம். சபையில் அப்படிப்பட்ட புத்தகங்கள் எதுவும் இல்லாவிட்டால், அறிவு புத்தகத்தையோ விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டையோ அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகம் இல்லையென்றால், வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தையோ கையிருப்பில் அதிகமாக இருக்கும் பழைய புத்தகங்களையோ நீங்கள் பயன்படுத்தலாம். மார்ச்: பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையும் அளியுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ பிப்ரவரியிலிருந்து மார்ச் 4-ம் தேதிக்குள் வட்டாரக் கண்காணிகள் புதிய பொதுப் பேச்சைக் கொடுக்கத் துவங்குவர்; அதன் தலைப்பு, “கடவுளுடைய புதிய உலகத்தில் நுழைய யார் தகுதி பெறுவர்?”
◼ இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? என்ற ஆங்கில வீடியோ, ஏப்ரல் மாத ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். தேவைப்பட்டால் சீக்கிரத்தில் சபை மூலம் இதை ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ நம் சீன மொழிப் பிரசுரங்கள் இரண்டு விதமான எழுத்துக்களில் வெளியிடப்படுகின்றன. ஹாங்காங்கிலும் தைவானிலும் உள்ளவர்கள் பாரம்பரிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள்; அதை நாம் “சைனீஸ்” (CH) என அழைக்கிறோம். பெரும்பாலான மற்ற சீன வாசகர்கள் “எளிதாக்கப்பட்ட சைனீஸைப்” (CHS) பயன்படுத்துகிறார்கள். ஒரு நபர் கன்டோனீஸ், மான்டரின் அல்லது வேறொரு சீன கிளைமொழியைப் பேசினாலும்கூட அவர் வாசிக்கும் எழுத்துக்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை; எனவே, அவர் எந்த எழுத்துக்களை வாசிக்க விரும்புகிறார் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு அவரவருக்கு தேவையான எழுத்துக்களை உடைய பிரசுரங்களை ஆர்டர் செய்ய முடியும்.
◼ இந்த வருடம் ஏப்ரல் 2, திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களைச் சுற்றி அனுப்புவதைச் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவு ஆசரிப்பை அனுசரிக்க வேண்டும். என்றாலும், எப்பொழுதுமே அவ்வாறு நடத்த முடியாதிருக்கலாம். பொதுவாக, ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில், வேறொரு இடம் பார்த்து அதில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கூட்டுறவு கொள்வதிலிருந்தும் எல்லாரும் முழுமையாகப் பயன் அடைவதற்கு வசதியாக, ஆசரிப்பை அடுத்த சபை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் குறைந்தபட்சம் 40 நிமிட இடைவெளி விடும்படி கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு வருகிறவர்களை இறக்கிவிடுவது ஏற்றிச்செல்வது உட்பட, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் நிறுத்தும்போதும் நெரிசலை ஏற்படுத்திவிடாதபடியும் கவனமாயிருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தவை என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
◼ சபையிலுள்ள ஒழுங்கான பயனியர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க பயனியர் நியமிப்பு கடிதம் (S-202) இருப்பதை செயலர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதைக் குறித்து கிளை அலுவலகத்திற்கு அவர் கடிதம் எழுத வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) —வங்காளி