உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/06 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 1/06 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-⁠ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். வீட்டுக்காரர்கள் அந்தப் புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகம் சிறப்பித்துக் காட்டப்படும். இந்தப் புத்தகம் கையிருப்பில் இல்லாத சபைகள், வெளிப்படுத்துதல்​—⁠உச்சக்கட்டம் புத்தகத்தையோ, அதிகப்படியாக கையிருப்பில் இருக்கும் பழைய பிரசுரங்களையோ அளிக்கலாம். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

◼ ஏப்ரல் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதம்.

◼ பிப்ரவரியிலிருந்து மார்ச் 5-⁠ம் தேதிக்குள் வட்டாரக் கண்காணிகள் புதிய பொதுப் பேச்சைக் கொடுக்கத் துவங்குவர்; அதன் தலைப்பு, “இன்றும் என்றும் நீங்கள் சமாதானமாக வாழலாம்!”

◼ இந்த வருடம் ஏப்ரல் 12, புதன்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களைச் சுற்றி அனுப்புவதைச் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவு ஆசரிப்பை அனுசரிக்க வேண்டும். என்றாலும், எப்பொழுதுமே அவ்வாறு நடத்த முடியாதிருக்கலாம். பொதுவாக, ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில், வேறொரு இடம் பார்த்து அதில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சியிலிருந்து எல்லாரும் முழுமையாகப் பயன் அடைய, ஆசரிப்பை அடுத்த சபை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் குறைந்தபட்சம் 40 நிமிட இடைவெளி விடும்படி கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்கு வருகிறவர்களை இறக்கிவிடுவது ஏற்றிச்செல்வது உட்பட, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் நிறுத்தும்போதும் நெரிசலை ஏற்படுத்திவிடாதபடியும் கவனமாயிருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தவை என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.

◼ சொந்தமாக வேறொரு நாட்டிற்குப் பயணிக்கும்போது சபை கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளத் திட்டமிடுகையில் அவற்றின் தேதிகள், நேரங்கள், இடங்கள் சம்பந்தமாக தகவல் கேட்டு நீங்கள் எழுதும் கடிதங்களை அந்நாட்டின் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்திற்கே அனுப்ப வேண்டும். கிளை அலுவலக விலாசங்கள் அந்தந்த ஆண்டுக்கான இயர் புக்கின் கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

◼ சபைகள் பிரசுரங்களை ஆர்டர் செய்கையில், உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2005 பதிப்பு சிடி-ராமுக்கான ஆர்டரையும் சேர்த்து அனுப்ப வேண்டும். சபையாரில், முழுக்காட்டப்பட்டவர்களுக்கு மட்டும் இது கிடைக்கும்; சபை மூலமாகவே இதை ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? —⁠ஆங்கிலத்தில் பெரிய அச்சுப் பதிப்பு.

சபையார் கவனத்திற்கு: இந்தப் பதிப்பு ஸ்பெஷல் ரிக்குவெஸ்ட் ஐட்டமாக இருப்பதால், கண்பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறிய எழுத்தை வாசிக்க சிரமப்படுகிறவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். ஆகவே, கண்பார்வைக் கோளாறு உள்ள பிரஸ்தாபிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே இதை ஆர்டர் செய்ய வேண்டும். இந்தப் பதிப்பு உண்மையிலேயே அவசியம்தானா என்பதை ஊழியக் குழு சரிபார்த்த பின்னரே பிரசுர ஆர்டரை சொஸைட்டிக்கு அனுப்ப வேண்டும்.

உவாட்ச்டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 2004 ​—⁠ஆங்கிலம்

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? ​—⁠நிக்கோபாரீஸ்

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (26 பாட்டுகள்) ​—⁠உருது

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் ​—⁠குஜராத்தி, ஹிந்தி

◼ கிடைக்கும் புதிய டிவிடி-⁠க்கள்:

இளைஞர் கேட்கின்றனர்​—⁠வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? (ஆங்கிலம்)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்