தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 27, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 2 முதல் ஜூன் 27, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. ஒப்புமைகளும் உருவகங்களும் ஏன் வலிமைமிக்க போதனா கருவிகளாக இருக்கின்றன? (ஆதி. 22:17; சங். 1:3; யாக். 3:6) [be-TL பக். 240 பாரா. 2-4, பெட்டி]
2. படிப்பினையூட்டுவதும் மதிப்புமிக்கதுமான உதாரணங்களை நாம் எதிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம், ஆனால் அவ்வாறு பயன்படுத்தும்போது எதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்? [be-TL பக். 242 பாரா. 1-2]
3. மிகவும் திறம்பட்டவையாக இருக்கும் உவமைகளைத் தேர்ந்தெடுக்கையில் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 244 பாரா. 1-2]
4. நாம் போதிக்கையில் காணக்கூடிய உபகரணங்களை ஏன் பயன்படுத்த வேண்டும், யெகோவா இவற்றை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்? [be-TL பக். 247 பாரா. 1-2, பெட்டி]
5. காணக்கூடிய உபகரணங்களை வெளி ஊழியத்தில் நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? [be-TL பக். 248 பாரா 1–பக். 249 பாரா 2]
பேச்சு நியமிப்பு எண் 1
6. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக கடவுளுடைய வார்த்தையில் என்ன வழிநடத்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது? [w-TL03 3/15 பக். 12 பாரா 2; பக். 14 பாரா 3]
7. இளைஞராய் இருந்த தாவீதிடம் யெகோவா எப்படி அக்கறை காட்டினார்? யெகோவாவிடம் தாவீது எப்படி அக்கறை காட்டினார்? [w-TL03 4/15 பக். 29 பாரா 4; பக். 30 பாரா 3]
8. ஆபேல் செலுத்திய பலியை யெகோவா ஏன் கவனித்தார், இது நமக்கு என்ன உறுதியளிக்கிறது? (ஆதி. 4:4) [w-TL03 5/1 பக். 28 பாரா 4–பக். 29 பாரா 1]
9. நீதிமொழிகள் 3:11-ன்படி நாம் அற்பமாக எண்ணக்கூடாத “கர்த்தருடைய சிட்சை” எது? [w-TL03 10/1 பக். 20 பாரா. 2-4]
10. 1 தீமோத்தேயு 6:6-8-ல் கூறப்பட்டிருக்கும் ‘போதுமென்கிற மனம்’ எதை அர்த்தப்படுத்துகிறது? [w-TL03 6/1 பக். 9 பாரா. 1-2; பக். 10 பாரா 1]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையே நிலவிய அன்பின் பிணைப்பு எதற்கு முன்நிழலாக இருந்தது? (2 சா. 1:26) [w89 1/1 பக். 26 பாரா 13]
12. தாவீது, உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவர முதன்முறை முயன்ற சம்பவத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (2 சா. 6:2-9)
13. தகப்பனுடைய அக்கிரமத்திற்காகக் குமாரன் கொலை செய்யப்பட வேண்டாமென்று உபாகமம் 24:16-ம் எசேக்கியேல் 18:20-ம் கூறுகின்றன. அப்படியிருக்க, தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்திற்கு, அவர்களுக்குப் பிறந்த பிள்ளை செத்தது ஏன்? (2 சா. 12:14; 22:31)
14. மேவிபோசேத்தைப் பற்றி சீபா கூறியது பொய் என நமக்கு எப்படித் தெரியும்? (2 சா. 16:1-4)
15. சீபா தன்னை வஞ்சித்தபோதும் மேவிபோசேத் நடந்துகொண்ட விதம் நமக்கு ஏன் சிறந்த முன்மாதிரியாய் இருக்கிறது? (2 சா. 19:24-30)